30.11.07


ஆகாயத்திலிருந்து நமது ஆக்கூர் ஓரியண்டலைப் பார்த்து மகிழுங்கள்
படத்தை விரிவாக்க படத்தின் மீது கிளிக்குங்கள்

5.11.07

நண்பர்களுக்கு ஒரு நினைவூட்டல்


உயர்ந்த நிலையை அடைந்த போதிலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காதவர்கள் தான் உண்மையிலேயே உயர்ந்தவர்கள். பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் பொருளாதார நிலையிலும் உயர்ந்த நிலையை அடையும் போது இந்நிலையை தமக்களித்த இறைவனுக்கு முதலில் நன்றியுடையவனாகவும், தாம் இந்நிலையை அடைய உறுதணையாக இருந்தவர்களுக்கு நன்றியுடையவனாகவும் இருக்க வேண்டும்.

முதுகலைப் பட்டம் பெற்ற எத்தனை பேர் தமது முதல் வகுப்பு ஆசிரியரை நினைவில் வைத்திருக்கின்றனர்? புகழின் உச்சிக்குச் சென்ற எத்தனை பேர் தாம் கடந்து வந்த பாதையை நினைவில் வைத்திருக்கின்றனர்? வியாபாரத்தில் முன்னனியில் நின்று இலட்சங்களில் புரளும் எத்தனை பேர் ஒரு வேளை உணவுக்கு ஒரு காலத்தில் தாம் பட்ட பாட்டை நினைவில் வைத்திருக்கின்றனர்?

அனைவருமே அப்படி இருப்பதில்லை என்றாலும் பெரும்பாலானோர் தங்கள் கடந்த காலத்தை எளிதில் மறந்து விடுகின்றனர், அல்லது நினைவு படுத்திக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. கடந்த காலத்தை நன்றியுடன் நினைவு கூறுகின்றவர்களை காலமும் கனிவுடன் நினைவு கூறும். அடுத்தடுத்த தலைமுறையினரும் இத்தகைய நல்லவர்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்பர்.

தாம் பட்ட சிரமங்களை மற்றவர்கள் படக் கூடாது என நினைப்பவர்களுக்குத் தான், அடுத்தவருக்கு உதவும் மனப்பக்குவம் வரும். அத்தகைய மனப்பக்குவம் பெற்றவர்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவர்.
மென்மேலும் படித்து கல்வி அறிவைப் பெருக்கிக் கொண்டது முக்கியமல்ல, நாம் கற்ற கல்வியால் எத்துனை பேர் பயன் அடைந்தார்கள் என்பது தான் முக்கியம். மென்மேலும் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொண்டது முக்கியமல்ல எத்துனை பேர் நமது பொரளாதரத்தால் பயனடைந்தனர் என்பது தான் முக்கியம்.
சமுதாயச் சிந்தனை கொண்ட கொடை வள்ளல்கள் செய்த பேருதவியால் இலவச உணவு உண்டு பள்ளி வாழ்க்கையை நாம் கழித்தோம். அந்தப் புரவலர்கள் அன்று உதவியிருக்காவிட்டால் நமது ஓரியண்டல் போன்ற ஓர் உன்னத கல்விக் கூடத்தை அதன் நிர்வாகிகள் நடத்த முடியாமல் போயிருக்கும். உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒரு சேரப் பயிலும் ஓர் உன்னத வாய்ப்பு நமக்குக் கிமைக்காமலேயே போயிருக்கும்.
காலச் சச்கரம் வேகமாகச் சுழல்கின்றது. இப்போது நாம் இருந்த அந்த இடத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கின்றனர். அந்தப் புரவலர்கள் இருந்த இடத்தில் நாம் இருக்க வேண்டாமா?
கோடிகளை வாரிக் கொடுத்தாலும் இந்த ஆக்கூர் ஓரியண்டல் என்னும் அற்புதக் கல்விக்; கூடம் நமக்குக் கற்றுத் தந்த கல்விக்கும் பயிற்றுவித்த பயிற்சிக்கும் ஈடாகாது என்றாலும் கூட நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது நமது கமடமையல்லவா? எத்தனை ஆண்டுகள் நாம் இந்தக் கல்விக் கூடத்தில் இலவச உணவை உண்டு காலம் கழித்தோம். பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவது நமது கடமையல்லவா? இன்னும் எவ்வளவு காலத்திற்கு கடனாளியாக இருக்கப் போகிறோம்? நாம் செய்யும் சின்னஞ்சிறு உதவிகள் கூட நம்மை உருவாக்கிய பள்ளிக்கு நாம் செலுத்தும் பேருபகாரமாகும்
அன்று நாம் இருந்த நிலையில் இன்று பல ந}ற்றுக் கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றுக் கொண்டிருக்கின்றனரே! இவர்களுக்கு நாம் உதவி செய்தால் இவர்கள் கல்வி கற்று வெளியேறி எதிர் காலத்தில் இன்னும் ஏராளமான மாணவர்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றனரே! சங்கிலித் தொடராகத் தொடர்ந்து வரும் இந்த ஈகை குணம் இடையில் அறுபட்டுப் போவதற்கு நாம் காரணமாக இருக்கலாமா?
மார்க்கத்தின் கட்டாயக் கடமையாகிய ஜகாத்தைக் கொடுக்கும் கடமையுள்ள பலர் நம்மில் இருக்கிறோம். நமது ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்கும் பொது அதில் ஒரு பகுதியை நம்பள்ளியில் தற்சமயம் கல்வி பயின்றுக் கெனாண்டிருக்கும் ஏழை மாணவர்களுக்கும் ஒதுக்கலாம். அவ்வப்போது நாம் செய்யும் தான தருமங்களில் ஒரு பகுதியை நம்மை வளர்த்து ஆளாக்கிய நம் கல்விக் கூடத்திற்காகவும் ஒதுக்கலாம்.
நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் மிகப் பெரிய அளவில் பல் வேறு உதவிகள் புரிந்திருக்கின்றனர் என்பதை கேள்விப்படுகிறபோது நமக்குப் பெருமையாக இருக்கின்றது.
குவைத்தில் பணிபுரியும் நம் பள்ளி முன்னாள் மாணவர் திருநெல்வேலி அப்துல் ரஜாக் அவர்கள் நம் பள்ளிக்காக தமது ஏற்பாட்டில் தாம் பணி புரியும் குவைத் பைனானஸ் ஹவுஸ் மூலமாக பள்ளிக்கு உணவுக் கூடத்தைக் கட்டித் தந்துள்ளார்கள். பொன் விழா கட்டடத்தின் ஒரு வகுப்பறை இவர்களது முயற்சியில் கட்டப்பட்டுள்ளது.
பள்ளியின் வளர்ச்சியில் அதிக அக்கரை செலுத்தி பெருமளவில் உதவிகள் செய்து கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களாகிய
S.M.ஹிதாயத்துல்லாஹ் (சென்னை)
M.அப்துல் ரஹ்மான் (முத்துப் பேட்டை)
ஆரிப் (புதுப் பேட்டை சென்னை)
அஹமது முஸ்தபா (சென்னை)
ஷேக் இஸ்மாயில் (சென்னை)
மாலிமார் (திருமுல்லைவாசல்)
அலி ஹுஸைன் (திருமுல்லைவாசல்)
அப்துல்லாஹ் (பள்ளப்பட்டி)
சதக்கத்துல்லாஹ் (பள்ளப்பட்டி)
சிப்கத்துல்லாஹ் (பள்ளப்பட்டி)
அஜீஜுர்ரஹ்மான் (பள்ளப்பட்டி)
ஹாஷிம் (பள்ளப்பட்டி)
இப்பட்டியலில் விடுபட்டுப் போன இன்னும் பலர் தங்கள் நன்றிக் கடைன முறையாகச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் மட்டும் தான் நம் பள்ளியில் பயின்றவர்களா? இல்லையே இவர்களைப் போல் நாமும் இப்பள்ளியில் பயின்றவர்கள் தானே! நாம் பயின்ற பள்ளிக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமது பல்வேறு பிரச்சினைகளில் சற்று நம் பள்ளியை மறந்திருக்கலாம். இது வரை மறந்திருந்தால் இப்போதாவது சற்று நிiவுபடுத்திக் கொள்வோமே!
'உதவி செய்தல்' என்னும் போட்டிக்காக ஓடுகளத்தில் இவர்கள் அணிவகுத்து நின்று விட்டனர். இவர்களுடன் சேர்ந்து நாமும் சேர்ந்து அணிவகுப்போம். 'உதவி செய்தல்' என்னும் ஓட்;டப் பந்தயம் தொடங்கப் போகிறது. யார் முதல் பரிசை வெல்வது? பார்;ப்போமா?
உங்கள் மேலான உதவிகளை நேரடியாகவே நம் பள்ளிக்குச் செய்யலாம். உங்கள் உதவிகளை எவ்விதம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவித்தால் அதற்கான வழிமுறைகளை மின்னஞ்சல் மூலம் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். தங்கள் பெயரை இணைய தளத்தில் பதிவு செய்கிறோம். தங்கள் பெயரையும் தாங்கள் செய்யும் உதவியையும் இணைய தளத்தில் காணும் ஏராளமானோர் தங்களைவ வாழ்த்துவர். இன்னும் பலரையும் அது ஊக்கப்படுத்தும்.
இப்பகுதியின் இறுதியில் உள்ள கமென்ட்ஸ் பகுதியைப் பயன்படுத்தி தாங்களாகவே தங்கள் பெயர் மற்றும் விபரங்களைப் பதியலாம்.

மின்னஞ்சல் மூலமாக எங்களைத் தொடர்பு கொள்ள