30.9.08

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அகிலமெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவ நண்பர்களுக்கும், நமக்கு அறிவைப் புகட்டி நல்வழி நடத்திய ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், நம் கல்வி நிறுவனத்தை திறம்பட நடத்திச்சென்ற முன்னாள் நிர்வாகிகளுக்கும், இந்நாள் நிர்வாகத்தினருக்கும், ஆக்கூர் வாழ் ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் எங்கள் ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

27.9.08

சிறுபான்மை கல்வி உதவித்தொகை பெற......


சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற வருமான சான்றிதழ் தேவை இல்லைஉத்தரவிட்ட கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மை ஆணையம் நன்றி
சென்னை, செப்.27-
பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற அதிகாரிகள் அளிக்கும் வருமான சான்றிதழ் தேவை இல்லை என்று உத்தரவிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மை ஆணையம் நன்றி தெரிவித்தன.
கல்வி உதவித்தொகை
பள்ளி மற்றும் கல்லூரிகளில் (தொழில் கல்வி உள்பட) படிக்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஆணையிட்டது.
இந்த மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுகளில் 50 சதவீத மார்க்கு எடுத்து இருக்கவேண்டும். 1-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இறுதி தேர்வில் 50 சதவீத மார்க்கு எடுத்து இருக்கவேண்டும். ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். தொழில்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி உத்தரவு
இந்த உத்தரவுப்படி வருவாய் அலுவலரின் சான்றிதழ், நோட்டரி பப்ளிக் சான்றிதழ் ஆகியவை தேவைப்பட்டது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். எனவே அந்த சான்றிதழ்கள் இல்லாமல் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதை அந்த நேரமே ஏற்று உடனடியாக சான்றிதழ் இல்லாமல் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினத்தவர் என்பதற்கான சாதி பற்றிய விவரங்கள் ரூ.10 மதிப்புள்ள கோர்ட்டு சாரா முத்திரை தாளில் எழுதி பெற்றோர் அல்லது பாதுகாவலர் உறுதி மொழி சுய கையொப்பம் இட்டு சமர்ப்பித்தால் போதும். நோட்டரி பப்ளிக் கையொப்பம் தேவை இல்லை, வருவாய் அலுவலரிடம் இருந்து சான்று பெறத்தேவை இல்லை. வருமான அதிகாரியிடம் இருந்து வருமான சான்று பெற்று தரவேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இது குறித்து அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவன அதிகாரிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி
முதல் அமைச்சரை சந்தித்த இஸ்லாமிய இலக்கிய கழக சிறப்பு நெறியாளர் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் கேப்டன் என்.ஏ.அமீர் அலி, பொதுசெயலாளர் எஸ்.எம்.இதயதுல்லா, துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜகான், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோர் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
ரம்ஜான் பரிசு
கடந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டையும், இந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை பெற எளிமைப்படுத்தி உத்தரவிட்டு எங்களை மனநிறைவு ஏற்படுத்தியதற்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பல மாநிலங்கள் சிறுபான்மை மாணவர்களின் உதவித்தொகைக்கு ஒதுக்கிய தொகையை செலவழிப்பதில்லை. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவர்களும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பயன் அடைந்தனர்.
ஆனால் இந்த வருடம் தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்க உள்ளனர். எனவே பிற மாநிலங்களில் பயன்படுத்தாத தொகையை தமிழ்நாட்டுக்கு திருப்பும் படி மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=441006&disdate=9/27/2008
நன்றி:

imantimes@googlegroups.com on behalf of Muduvai Hidayath

20.9.08

IDB Scholarship Programme 2008 - 2009

IDB Scholarship Programme 2008 - 2009Applications are invited for the IDB Scholarship from meritorious, but financially needy Muslim students granted admission or intend to seek admission in the academic session 2008-2009 in the first year of degree course in the fields of Medicine and Engineering, (all branches) including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration and Bachelor of Law.The scholarship is offered as an Interest-Free Loan to be refunded in installments after completion of the graduation. The applicants should have passed SSC (10+2) with minimum 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics.Please write for Application Forms (available Free of Charge) giving course details and the date of admission along with a self-addressed envelop of 25x11 cm size with postage stamps of Rs. 15/= affixed on it, to:
MUSLIM EDUCATION TRUST,
E-3, Abut Fazl Enclave,
Jamia Nagar,
New Delhi - 110 025.
Ph: 26957004, 26941354, 65738725,
Fax: 26949076.
Application Form can also be downloaded from the website: www.metdelhi.org or www.sit-india.org.Application form duly completed in all respects with necessary copies of required documents should reach the Trust office on the address given above latest by 6th October 2008.
நன்றி: முதுவை ஹிதாயத்

19.9.08

I.A.S தேர்வு அரசு பயிற்சி மையத்தில் சேர நுழைவுத் தேர்வு


ஐ.ஏ.எஸ். தேர்வு: அரசு பயிற்சி மையத்தில் சேர நுழைவு தேர்வு
சென்னை, செப். 18: ஐ.ஏ. எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையத்தில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மைதிலி கே. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் சென்னை அண்ணா நகரில் இயங்கி வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சிக்கு 21 வயது நிரம்பிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பைச் சார்ந்த பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 9 - ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தருமபுரி, மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் செப்டம்பர் 30.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர், அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையம், அண்ணா நகர், சென்னை - 40. __._,_.___
நன்றி: முதுவை ஹிதாயத்
"Muduvai Hidayath" muduvaihidayath@gmail.com

6.9.08

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பு :
முனைவர் தாவூத் பாட்சா - எம். அக்பர் கான் - பேராசிரியர் கலந்தர் பங்கேற்பு - வணிகத்துறையில் முத்திரை பதிக்கும் சாதிக் காக்காவிற்கு விருது.
துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 04.09.2008 வியாழன் மாலை துபாய் தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடைபெற்றது
ஈடிஏ ஸ்டார் பள்ளிகளின் இயக்குநர் பேராசிரியர் கலந்தர் தலைமை தாங்கினார். அனஸ் இறைவசனங்களை ஓதினார். ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் கலந்தர் அவர்கள் தனது தலைமையுரையில் 1950 ஆம் ஆண்டு 12 ஆசிரியர்களுடனும் 250 மாணவர்களுடனும் துவங்கப்பட்ட கல்லூரி இன்று 220 ஆசிரியர்களுடனும், 160 அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 7200 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது என்றார். இத்தகைய சிறப்புக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றார்
படித்தோம், பணிபுரிந்தோம், உதவுவோம் எனும் நோக்கத்தைக் கொண்டவர்களாக நாம் திகழவேண்டும் என்றார். துவக்கவுரையாற்றிய அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கல்லூரியில் பழைய மாணவர் தினம் அனுஷரிக்கப்படுகிறது. இவ்வாண்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், டாக்டர் ஹிமானா சையத், ஜித்தா அப்துல் மாலிக் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். இதுபோன்ற சமயத்தில் தாயகம் செல்லும் மாணவர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்க கேட்டுக் கொண்டார்.வரும் ஆண்டில் துபாயில் அனைத்து நாடுகளின் ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் சந்திப்பு ஒன்றிற்கு ஜித்தா அப்துல் மாலிக் ஏற்பாடு செய்து வருவதைக் குறிப்பிட்டார்.
பழைய மாணவர்களான தாவூத் பாட்சா, அப்துல் கத்தீம் உள்ளிட்டோர் கல்லூரிக்கு ஆரமப்த்தில் அர்ப்பணித்த கட்டிடத்தின் காரணமாக இன்று கல்லூரி வளாகத்தில் பழைய மாணவர்கள் தங்களது பங்களிப்புடன் அதிக அளவில் கட்டிடங்கள் நிறைந்து காணப்படுகின்றன
இவ்வாண்டு நடைபெற்ற நிகழ்வில் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா அவர்கள் வணிகத்துறையில் சிறந்து விளங்கி வருவமைக்காக விருந்து வழங்கப்பட்டது. அதனை பேராசிரியர் கலந்தர் அவர்கள் வழங்க சாதிக் காக்கா சகோதரர் ஹாமிம் மற்றும் அவரது புதல்வர்
.ஏற்புரை நிகழ்த்திய சாதிக் காக்கா புதல்வர் தனது தகப்பனார் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற காலம் தனது வாழ்வின் பொற்காலம் எனக் கூறியதைக் குறிப்பிட்டார். அங்கு பெற்ற படிப்பினைகளை தினமும் தங்களுக்கு கூறி வருவதைக் குறிப்பிட்டார்.
சிறப்புச் சொற்பொழிவாளர் முனைவர் தாவூத் பாட்சாவிற்கு ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மனிதவள மேம்பாட்டுத் துறை எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான் பொன்னாடை அணிவித்தார்.சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய ராஜகிரி தாவூத்பாட்சா கல்லூரி நிறுவன தாளாளர் முனைவர் தாவூத் பாட்சா அவர்கள் தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரி என்ற நிறுவனம் உருவான வரலாற்றை எடுத்துரைத்தார். இக்கல்லூரி உருவாகக் காரணமாய் அமைந்த ஜமால் முஹம்மது, காஜா மியான் உள்ளிட்டோரை நினைவு கூர்ந்தார். மேலும் சமுதாயக் கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாய் இருந்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத், ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையித், மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் உள்ளிட்டோரையும் நினைவு கூறத்தவறவில்லை.ஜமால் முஹம்மது கல்லூரி என்ற ஒன்று உருவானதன் காரணமாய் நம்போன்ற எண்ணற்றோர் இன்று பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். நான் கல்லூரி உருவாக்க காரணமாய் இருந்ததும் ஜமால் முஹம்மது கல்லூரி தான். பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்திய அவர் குறைந்த பட்சம் அவர்கள் ஆசிரியக் கல்வி பெறுவதற்காவது நாம் துணை நிற்க வேண்டும் என்றார். மேலும் கல்லூரி முதல்வர் ஷேக் முஹம்மது, நிர்வாகத்தினர், துணை முதல்வர் பேராசிரியர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோரின் சேவைகளை இங்கு நினைவு கூர்ந்தார்.நிறைவாக இறைவன் தமக்கு வழங்கியதை கொடுப்பதன் மூலம் நாம் அதிகதிகம் பெறக்கூடியவர்களாக உயர்வோம் எனக்கூறி தமது உரையினை நிறைவு செய்தார்.முதுவை ஹிதாயத் நன்றி கூற இரவு விருந்திற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாபர் சித்திக், காஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகச்ச்சியில் ஈமான் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, கவிஞர் அப்துல் கத்தீம், முஹம்மது ஃபாரூக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.