24.12.09

ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்

"மேற்கு வங்காளம் முழுவதும் ஆங்கில மொழியில் பாடம் நடத்தும் புதிய மத்ரஸாக்களை உருவாக்க இருப்பதாக" மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. "இதன் மூலம் ஆயிரக் கணக்கான முஸ்லிம்/முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பயன் அடைவர்" என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்ரஸா (مدرسة) எனும் அரபுச் சொல்லுக்கு "கல்வி கற்றுக் கொள்ளும் இடம்" என்று பொருள். அரபு மொழியில் இது பாடசாலை/பள்ளிக்கூடம் என்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியினால் ஆதிக்கச் சக்திகள்  'ஜிஹாத்' எனும் சொல்லுக்கு, "அப்பாவிகளைக் கொல்லுதல்" போன்ற தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் களங்கம் ஏற்படுத்தியதுபோல் 'மத்ரஸா' எனும் சொல்லின் தூய்மைக்கும் பங்கம் விளைவித்துள்ளனர் என்பது வேறு விஷயம்.
மேற்கு வங்க அரசின் இந்த அறிவிப்பிற்கு முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு அறிவிப்பின் முதல் கட்டமாக, சிறுபான்மையினர் பெருகியுள்ள 11 மாவட்டங்களில் 11 ஆங்கில மத்ரஸாக்கள் துவங்கப்பட உள்ளன.
இந்த மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்கள் இஸ்லாமியக் கல்வியினை ஆங்கில மொழியில் பயில்வர். இது ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப் பள்ளி வரையிலான பாடத்திட்டமாகும்.
"மேற்கு வங்கத்தின் பத்தொன்பது மாவட்டங்களிலும் பத்தொன்பது புதிய இஸ்லாமிய மத்ரஸாக்கள் உருவாக்கப் படும். இதன் அடிப்படை மொழி ஆங்கிலமாக இருக்கும்!" என்கிறார் மேற்கு வங்க சிறுபான்மை வளர்ச்சித்துறை அமைச்சரும் மத்ரஸாக் கல்வி அமைச்சருமான அப்துல் சத்தார். செய்தியாளர்களுக்கு நேற்று (20-12-2009) அளித்த பேட்டியில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடையே மேலும் பேசுகையில், "இத்தனை காலமாக இருந்து வந்த எங்களின் மரபுக் கல்வி முறையினை இந்த ஆங்கில மத்ரஸாக்கள் முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்று நம்புகிறோம். இன்றைய காலகட்டத்திற்குக் கட்டாயத் தேவையான ஆங்கிலக் கல்வியோடு இஸ்லாமிய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு இத்தகைய மத்ரஸாக்கள் உதவியாக இருக்கும். இத்தகைய மத்ரஸாக்கள் மூலம் பயிலும் மாணவர்கள், நவீன யுகக் கல்வியாளர்களோடு போட்டி போடும் வகையில் சிறந்த பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நெறிஞர்களாகவும் மாறுவர். இஸ்லாமிய மத்ரஸாக் கல்வியில் நவீனத்துவம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை, தாமதம் என்றாலும் சரியாகவே உணர்ந்திருக்கிறோம்!" என்கிறார் அப்துல் சத்தார்.
மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே மாநில அரசு நடத்தும் 474 மத்ரஸாக்கள், அரசு பள்ளிக் கூடங்களிலேயே இயங்கி வருவதும், இத்தகைய மத்ரஸாக்களில் முஸ்லிமல்லாத, பிற மத மாணவர்கள் 20% இடம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், புதிய மத்ரஸாவில் இஸ்லாமியக் கல்வியுடன் நவீன அறிவியல், கணிதம், கணினிக் கல்வி ஆகியவை இணைவதைக் கண்டு கவரப்பட்டு புதிய மாணவர்கள் பெருமளவில் விண்ணப்பித்துள்ளனராம்.
"பல்லாயிரக் கணக்கான ஏழை இந்திய மாணவர்களின் கல்வி நிலையினை மேம்படுத்துவதே இத்தகைய ஆங்கில மத்ரஸாக்களின் குறிக்கோளாகும்" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
"தற்போதைக்கு மத்ரஸாக்கள் தந்து கொண்டிருக்கும் ஆங்கிலம் அல்லாத, மாநில மொழிகளை மட்டும் போதிக்கும் கல்வி முறையினால் எதிர்காலக் கல்வி-வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயத்தை உணர்ந்திருப்பதால் ஏழை முஸ்லிம் மாணவர்கள்கூட சாதாரண மத்ரசாக்களில் சேர்ந்து கல்வி பயிலத் தயங்குகின்றனர். இத்தகையச் சூழல் தொடருமானால் ஏழைகள் என்றென்றும் நிர்க்கதியாய் நிற்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கை மணி ஒலித்ததைக் கண்டு, இத்தகைய ஆங்கில மத்ரஸாக்களை உருவாக்குகிறோம். இதன் மூலம் கல்வி பெறும் மாணவர், நிறைய பொருட்செலவில் ஆங்கிலக் கல்வியை வழங்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாகக் கல்வி அறிவில் மேம்பட்டு நிற்பர்" என்று தொடர்கிறார் அப்துல் சத்தார்.
"சிறந்த கல்வி என்றாலே ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி என்றாகி விட்ட இந்தியக் கல்விச் சூழலில், தரமான கல்வியை இலவசமாக வழங்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இப்புதிய ஆங்கில வழி மத்ரஸாக்கள் செயல்படும்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள இந்த மத்ரஸாக்கள், ஏழை-சிறுபான்மை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன.

" கல்வி நிலையில் மேம்பாடு அடைவதில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், நாட்டில் சுய கவுரவத்துடன் மதிக்கப்படுவதற்கும் அதிகார, ஏகாதிபத்திய, ஃபாஸிஸ சக்திகளால் அநியாயமாக ஒடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறவும் தேவையான அதிகாரங்களிலும் உயர் வேலை வாய்ப்புகளிலும் மட்டும் முஸ்லிம்களின் சதவீதத்தை ஒப்பு நோக்குவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும் "

பல்லாண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் கல்வி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டனர். அதனாலேயே ஆதிக்கச் சக்திகளின் அடக்குமுறைக்கு உள்ளாகிப் பெரும் அவலங்களைச் சந்திக்க நேர்ந்தது. இதனைச் சமீபத்தில் சச்சார் கமிட்டி அறிக்கை மிகத்தெளிவாக வரைந்து காட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில், "நாட்டுப்பற்றுள்ள இந்திய முஸ்லிம்கள் ஆங்கில மொழியைக் கற்பதும், கற்பிப்பதும் ஹராம்" என்று ஃபத்வாக்கள் கொடுக்கப் பட்டு அதில் உறுதியாக நின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த மனோநிலை முஸ்லிம்களிடையே மாறாமல் இருந்திருக்கிறது என்பதற்கு ஆங்கிலக் கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியிருப்பதே சாட்சியாக உள்ளது. இதனாலேயே  அரசின் அதிகார மையங்களான நீதித்துறை, காவல்துறை, இராணுவம், உளவுத்துறை ஆகிய எத்துறையிலும் முஸ்லிம்களைக் காண்பது மிக அரிதான விஷயமாக உள்ளது. அத்தோடு உயர்கல்வி கற்பவர்களுள் முஸ்லிம்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர்.
"கல்வியைத் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று ஊக்குவிக்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்வியல் நெறியாகக் கொண்ட இந்திய முஸ்லிம்கள், ஏனோ கல்வி விஷயத்தில் உறக்கம் கலைந்து இன்னும் எழுந்த பாடில்லை.
கிறித்துவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினரை ஒப்புநோக்குகையில் முஸ்லிம்கள் மட்டுமே அவர்களின் சதவீதத்திற்கொப்ப கல்வி நிலையங்களில் இடம் பெற்றிருக்கவில்லை. கல்வி நிலையில் மேம்பாடு அடைவதில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், நாட்டில் சுய கவுரவத்துடன் மதிக்கப்படுவதற்கும் அதிகார, ஏகாதிபத்திய, ஃபாஸிஸ சக்திகளால் அநியாயமாக ஒடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறவும் தேவையான அதிகாரங்களிலும் உயர் வேலை வாய்ப்புகளிலும் மட்டும் முஸ்லிம்களின் சதவீதத்தை ஒப்பு நோக்குவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.
அத்தோடு, காலனித்துவ காலத்திலிருந்தே மேற்கு வங்காளத்தின் ஆரம்பப் பள்ளிகளில் இடம் பெற்று வந்த ஆங்கிலக் கல்வி, கடந்த 1980இல் இடதுசாரி மார்க்ஸிஸ்ட்-இன் ஆட்சிக் காலத்தில் முற்றிலும் நீக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.
"ஆங்கிலம் கற்காததால் உயர் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் இடம் கிடைக்காமல் முன்னேற முடியாமல் போராடும் முஸ்லிம் மாணவர்கள் அதிகரித்துள்ளதால், ஆங்கில மீடியம் மத்ரஸாக்களின் தேவை இன்றிமையாதது!" என்கிறார் நூருல் இஸ்லாம். இவர் மேற்கு வங்காளத்திலுள்ள கலத்பூர் மத்ரஸாவின் தலைமை ஆசிரியர் ஆவார்.
இத்தகைய ஆங்கில மீடியம் மத்ரஸாக்கள், ஆங்கிலக் கல்வியறிவு பெற வசதியற்ற முஸ்லிம் மாணவர்கள் இதுநாள்வரை கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, எதிர்காலச் சமுதாயக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் உயர் கல்விகளிலும் வேலை வாய்ப்புகளிலும் நவீன தொழில் சந்தைகளில் நிலவும் போட்டிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் தரமான கல்வியை வழங்கி நவீன தொழில் சந்தையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்களையும் ஃபாஸிஸ, அதிகார வர்க்கங்களின் அடக்குமுறைகளையும் முறியடிக்கத் தயாராகும் என்று எதிர்பார்ப்போம்.
ஆக்கம்: அபூ ஸாலிஹா

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

 

  رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم

 "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" .  (2:127)

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."  (2:128)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)

 رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!"  (2:250)

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

 "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"  (2:286)

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!  (3:8)

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்".  (3:9)

 رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே!  நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)

 ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக".  (3:147)

رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" .  (3:191)

رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ

"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" .  (3:192)

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ

"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!".  (3:193)

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.  (3:194)

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" .  (7:23)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" .  (7:47)

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" .  (10:85)

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை."  (14:38)

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" .  (14:41)

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" .  (18:10)

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" .  (23:109)

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!  (40:7)

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ

 "எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" .  (59:10)

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,"  (60:4)

 رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" .  (66:8)

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"  (14:40)

 

 


 


23.12.09

தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்

TNTJ மாணவர் அணி நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம் (இன்ஷா அல்லாஹ்)

 
இராமநாதபுரத்தில்
நாள் : 25/12/09- வெள்ளி கிழமை

நேரம் : காலை 9: 30 மணி

சிறப்புரை : சகோ.கலீல்.MBA (மண்டல மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்), இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்பிற்கு : யாஸின்  9894652633


மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.

 
பரங்கிபேட்டையில் (கடலூர் மாவட்டம்)
 
நாள் : ஞாயிற்று கிழைமை (27/12/2009) நேரம் : காலை 9: 30 மணி
இடம் : பரங்கிபேட்டை ஷாதி மஹால், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்
சிறப்புரை :  S.சித்திக்.M.Tech- மாநில மாணவர அணிச செயலாளர
தொடர்பிற்கு :  9790325478, 9600613630
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடலூர்  மாவட்ட மாணவர் அணி.
 



20.12.09

தேர்வுக்கு தயாராகுங்கள்

இன்றைய சமூக சூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும் மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறது, ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலையும் இல்லை என்றால் குறைந்த பட்சம் பல ஆண்டுகளுக்காவது தீர்மானிக்க கூடியதாக உள்ளது. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அந்த மாணவன் தன் கல்விக்காக வருங்காலங்களில் செலவிடப்போகும் பணத்தை, அவன் தந்தையோ, தாயோ படப்போகும் பாட்டை தீர்மானிக்கிறது. இச்சூழ் நிலையில் மாணவர்கள் கல்வியின் ஆற்றலை உணர வேன்டும், மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக மதிப்பெண்களை எடுக்க முயற்சிக்க வேண்டும் இதற்கு உதவி செய்யும் குறிப்புகளை கீழே காணலாம்.

1. படிப்பது ஒரு முறை என்றால் அதைப் பரிட்சையில் வெளிப்படுத்துவது மற்றொரு முறை ஆகும்.தேர்வு எழுவது ஒரு நுணுக்கமான அணுகுமுறை, படித்ததை எல்லாம் வெளிப்படுதுவதற்கல்ல தேர்வு. தேவையானவற்றை தெளிவாக உணர்த்துவதுதான் நல்ல விடைகள்.

2.அதிகமாக எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் எனும் தவறான மனப்பான்மை மாணவர்களிடம் காணப்படுகிறது, அதிக பக்கங்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுத்தராது.

3.வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள் முழுவதுவமாக எழுதி முடித்தவுடன் வினாவை மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் வினாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கதை மட்டும் படித்து விட்டு எழுதியதால் இது போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது எனவே வினாத்தாளை முழுவதுமாக வாசிக்க வேண்டும்.

4. பத்து நிமிடங்கள் எந்த வினாவிற்கும் பதில் எழுதாமல் நன்கு தெரிந்த வினாக்களை அடையாளங்கண்டு கொள்ள வேண்டும்

5. எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியும் என்றால் அவற்றில் நன்கு தெரிந்த பதிலை முதலில் எழுதுவது நல்லது. திருத்துபவர் மனதில் முதலில் ஏற்படுத்தும் தாக்கம் சிறந்த தாக்கமாக அமையும் (the first impression is the best impression) எனவே நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுவது நல்லது.

6. நன்றாக தெரிந்த வினாவிற்கு தேவைக்கு அதிகமாக எழுதி தேர்வின் பாதி நேரத்தை வீணடித்து விடக் கூடாது ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்க வேண்டும். எக:- 3 மனி நேரம் பரீட்சை என்றால் 10 நிமிடம் - கேள்வி தாளை முழுவதுமாக ஒரு பார்வை பார்க்க 5 நிமிடம் - தெரிந்த விடைகளை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்த அடுத்து ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்கி எழுத வேண்டும்.

7. பொது தேர்வுக்கு முன் பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கூறிய முறையை பயிற்சி செய்து கொள்ளவும்.அழகான கையெழுதுக்காக பயிற்சி செய்யவும், அழகிய முறையில் எவ்வாறு தேர்வு எழுதுவது என்பதையும் காண்போம்

8. தேர்வில் அழகாக, மற்றும் தெளிவாக எழுதுவதன் மூலமாக திருத்துபவரின் சிரமம் குறைகிறது, அவர் சிரமம் குறைந்தால் நம் மதிப்பெண் அதிகரிக்கும்.

9. பரிட்சை தாளை திருத்துபவர் எல்லா பலவீனங்களும் கொண்ட மனிதன் என்பதால் அழகாக முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் தெளிவாக எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எழுத்தைக் கொண்டே ஒருவருடைய மனப்பான்மையை ஒரு வகையில் யூகிக்க முடிகிறது என்று கூறுகிறார்கள், அதிக அடித்தல் திருத்தலுடன் எழுதுவது ஒருவருடைய நிலையற்ற மனப்பான்மையை எளிதில் காட்டி விடும்.

10. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவதற்கு பெரும் சாதனை செய்ய வேண்டிய்தில்லை, பொது தேர்வு தொடங்க இன்னும் நாட்கள் உள்ள இந்த தருணத்தில் வெறும் படிக்க மட்டும் செய்யாமல் படித்ததை சிரமம் பர்க்காமல் எழுதி விடுவது நாம் பரிட்சையில் செய்யும் பல தவறுகளை நமக்கு அடையாளம் காட்டி விடும். பயிற்சித் தேர்விலும் பொதுத் தேர்விலும் கீழ்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலமாக சிறந்த முடிவுகளை பெற முடியும். அ) ஒவ்வொரு வார்தைக்கும்,வரிக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு எழுதவும். ஆ) ஒரு பதிலில் உள்ள முக்கியமான கருத்துக்களை அடிகோடிட்டு காட்டவும். இ) அடிக்கோடிடுவதற்க்கு 2B என்ற கருமை அளவுடைய பென்சிலை உபயோகிப்பது நல்லது. வண்ண எழுதுகோல்கள் (ச்கெட்ச் அன்ட் சொலொஉர் பென்ச்) உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. ஏனெனில் முட்டாள் தனமான வண்ணங்களை அடிக்கோடிட உபயோகிப்பது திருத்துபவரின் எரிச்சலை கூட்டும் நம் மதிப்பெண்ணை குறைக்கும். எனவெ சற்று கூடுதல் கருமையான (2B) பென்சில்களை உபயோகிப்பது நல்லது. ஈ) அறிவியல் பாடங்களில் வரையும் படங்களை அழகாக வரைவதுடன் அனைத்து பாகங்களையும் கட்டாயம் குறித்து காட்டுங்கள். முடிந்தால் நகல் எடுத்தது போல் வரைவது நல்லது (இதற்காக அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம்) உ) முதல் கேள்வியில் அழகாக எழுதத் தொடங்கி , செல்ல செல்ல கோழிக் கிறுக்கலாக மாறிவிடக் கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்கி எழுதுவதன் மூலமாக தேர்வின் கடைசி நிமிடத்தில் நடைபெறும் இது போன்ற தவறுகளை திருத்திக் கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை படிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

11. எவ்வாறு கேள்வித் தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்க கூடாதோ அதைப் போலவே கடைசி வினாடி வரை எழுதக் கூடாது,குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்னதாக எழுதி முடித்துவிட்டு கீழ்க்கண்டவற்றை சரி பார்க்கவும். > ஒவ்வொரு பதிலுக்குமான கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி பார்க்கவும் இது மிக மிக முக்கியம். > ஒவ்வொரு பதிலிலும் முக்கியமான புள்ளிகள் அடிக்கோடிடப்பட்டுள்ளதா என்பதை சரிபர்க்கவும். > கணிதமாக இருந்தால் விடையின் கடைசியை அல்லது தீர்வை அடிக்கோடிட்டு உள்ளீர்களா என்பதை சரி பார்க்கவும். > சூத்திரங்கள் பெட்டிக்குள் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.

12. மிகவும் முக்கியாமான ஒன்றை கவனத்தில் கொள்ளவும்.எக்காரணம் கொண்டும் 786(!), நாகூர் ஆண்டவர் துணை (!) பிஸ்மில்லாஹ், முருகன் துனை, போன்ற வாசகங்களை விடைத் தாளில் எழுத வேன்டாம். இது முதல் பார்வையிலேயே உங்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்ப்படுத்தலாம்.திருத்துபவர் மாற்று நம்பிக்கையாளர் ஆகவோ அல்லது இறை நம்பிக்கை அற்றவராக இருக்கும் பட்சத்தில் இவை எதிர் மறை விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது.எனவே பக்தியை எழுத்தில் காட்டாமல் மனதில் நினைத்து எழுத தொடங்கி விடுவது நல்லது. குறிப்பு: 786, நாகூர் ஆண்டவர் துணை என்பதெல்லாம் இஸ்லாத்திற்கு எதிரானவை.

13. எல்லாவற்றிக்கும் மேலாக கடின உழைப்பும், அதிகமாக பயிற்சி தேர்வுகளை எழுதுவதும் உஙகள் மதிப்பெண்களை கூட்ட உதவும். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை புரிய பிரார்த்திக்கிறோம்.

- என். அல் அமீன். மாணவர் அணி

--
With Regards

Al Ameen.N

TNTJ-STUDENT WING

18.12.09

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கட்டுரை பாகம்-2

நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். இந்த காரியம் நம்மால் இயலாததாக இருக்கலாம் ஆனால் நம்மை படைத்த இறைவனால் இயலாத காரியம் ஏதும் இல்லை
இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைவைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
உறுதியான ஈமான் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் அடைய முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான்,
“(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்”. (அல் குர் ஆன் : 33:3 ).
நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை. உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, அறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் .
“…..நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது”. (அல் குர் ஆன் : 30: 47 ).
நாம் அதிகமாக மதிப்பென் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம், நமக்கு அல்லாஹ் இருக்கின்றான்.
“அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்”. (அல் குர் ஆன் : 26 : 62).
ஆர்வம்
எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது, கடினமான பாடம் என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
மறதி : மாணவர்கள் பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது என பல மாணவர்கள் கூறுவார்கள். இது மறதி என்று கூற முடியாது நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது உனிப்புடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, , டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது,இப்படி படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை,
                              தொடர்ந்து படிக்க...........

17.12.09

12 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவனை

பிளஸ்-2 தேர்வு அட்டவணை:

2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.

2 - தமிழ் இரண்டாம் தாள்.

4 - ஆங்கிலம் முதல் தாள்.

5 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.

8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.

13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல்,நர்சிங்(ஜெனரல்), புள்ளியியல்.

15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்.

19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.

22 - வணிகவியல், மனையியல், புவியியல்
 
 
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

மார்ச் 23 -தமிழ் முதல்தாள்.

24 - தமிழ் இரண்டாம் தாள்.

26 - ஆங்கிலம் முதல்தாள்.

29 -ஆங்கிலம் இரண்டாம் தாள்.

ஏப்ரல் 1 - கணிதம்.

5 - அறிவியல்.

7 - சமூக அறிவியல்.

மெட்ரிக்குலேஷன் தேர்வு அட்டவணை:

மார்ச் 23 - தமிழ் முதல் தாள்

24 - தமிழ் இரண்டாம் தாள்

25 - ஆங்கிலம் முதல் தாள்

26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

29 - கணிதம் முதல் தாள்

30 - கணிதம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்

5 - அறிவியல் இரண்டாம் தாள்

7 - வரலாறு மற்றும் குடிமையியல்

9 - புவியியல் மற்றும் பொருளாதாரம்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வு அட்டவணை:

மார்ச் 23 - மொழித்தாள்

25 - ஆங்கிலம் முதல் தாள்

26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

29 - கணிதம் முதல் தாள்

30 - கணிதம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்

5 - அறிவியல் இரண்டாம் தாள்

7 - வரலாறு மற்றும் குடிமையியல்.

9 - புவியியல்

ஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:

மார்ச் 23 - தமிழ்.

24 - மொழித்தாள்-1 சமஸ்கிருதம் மற்றும் அரபி.

26 - ஆங்கிலம் முதல்தாள்

27 - மொழித்தாள்-2 சமஸ்கிருதம் மற்றும் அரபி.

29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.

ஏப்ரல் 1 - கணிதம்.

3 - சிறப்பு மொழித்தாள்-3, சமஸ்கிருதம் மற்றும் அரபி.

5 - அறிவியல்.

7 - சமூக அறிவியல்.

தேர்வு நேரம்:

பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடைபெறும்.

பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12-45 மணிக்கு முடியும்.



 
Rajaghiri Gazzali

--

15.12.09

கோட்டக்குப்பத்தில் டி.ன்.டி.ஜே மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்...)

கடந்த 13.12.2009 அன்று விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி சார்பாக‌ மாபெரும் கல்வி கருத்தரங்கம் நடத்தப்பட்டது இதில் விழுப்புரம் மாவட்ட தலைவர் சகோ. சாகுல் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கல்வி கருத்தரங்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டல மாணவர் அணி செயலாளர் சகோ.கலீல்லூர் ரஹ்மான் கல்வியின் அவசியத்தைப் பற்றியும் மாணவரனியின் செயல்பாடுகள் மற்றும் நோக்கத்தை பற்றியும் உரை நிகழ்த்தினார். பிறகு மாநில மாணவர் அணி செயலாளர் சகோ.சித்திக் அவர்கள் "அதிக மதிப்பென் பெறுவது எப்படி? " என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினார்.



 அதன் பிறகு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மாநில மாணவர் அணி செயலாளர் சகோ.சித்திக் அவர்கள் பதில் அளித்தார். இறுதியாக அழைப்பு பணியின் அவசியம் மற்றும் கல்வி பணியின் அவசியம் பற்றி சகோ. சித்திக் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி கல்வி கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.

இதில் பல மாணவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியுடன் இனைந்து அழைப்பு பணியில் ஈடுபடுவதாக வாக்குறுதி அளித்தனர்.
நன்றி
T.H.Khaleelur Rahman

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? – கட்டுரை பாகம்-1

தற்போது தேர்வுகாலம் பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும்
குறைவான மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் விளைவுகள் :
நல்ல கல்லூரியில் இடம் : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரிளில் இடம் கிடைப்பதில்லை, அல்லது நல்ல கல்லூரிகள் இடம் வேண்டும் என்றால் லட்ச்ச கணக்கில் பணம் கேட்கின்றனர். அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் அண்ணா பல்கலை கழகம் மற்றும் சிறந்த கலை, அறிவியல் கல்லூரிகள், IISc, IIT, NIT என்று உயர் கல்வி நிறுவனக்களில் படிக்கும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகின்றது.
நல்ல தரமான கல்வி : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைகாததால் கல்வி தரம் குறைவாக உள்ள கல்லூரிகளில் சேர வேண்டிய கட்டயம் ஏற்படுகின்றது, இதானால் நமக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை, பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் பெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) இல்லாமல் போகின்றது.
வேலை வாய்ப்பு : மதிப்பெண் குறைவாக எடுத்து தரம் குறைவான கல்லூரியில் சேர்வதினால் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. இதனால் நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities) வளர்த்து கொள்ள முடியாமல் போகின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேறுவதற்கு ஆங்கில பேச்சாற்றல் (English speaking skill) மற்றவர்களோடு கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம்.
மேலும் படிக்கும் காலத்தில் பிற கல்லூரிகளில் நடக்கும் நாம் படிக்கும் துறை சார்ந்த போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும் வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கு வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.
                                                மேலும்.........

9.12.09

மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?

 TNTJ மாணவர் அணியின் இந்தவார கல்வி சேவை நிகழ்ச்சி
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்
(இன்ஷா அல்லாஹ்)
 
1. திருவண்னாமலையில்
நாள் : சனி கிழைமை (12/12/2009)
நேரம் : மாலை 4 :00 மணிக்கு
இடம் : TNTJ மர்கஸ், கோபால் தெரு, தர்கா சந்து, தவ்ஹீத் நகர், திருவண்னாமலை
சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர அணிச செயலாளர
தொடர்பிற்கு : 9486371472, 9787669010
மாணவ மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவண்னாமலை மாவட்ட மாணவர் அணி.
 
2.  கோட்டை குப்பத்தில் (விழுப்புரம் மாவட்டம்)
நாள் : ஞாயிற்ற கிழைமை (13/12/2009)
நேரம் : கால10 :00 மணிக்கு
இடம் : TNTJ மர்கஸ், மோர்சார் தெரு, கோட்டை குப்பம், விழுப்புரம் மாவட்டம்
சிறப்புரை : S.சித்திக்.M.Tech- மாநில மாணவர அணிச செயலாளர
தொடர்பிற்கு : 9600827946
மாணவ மாணவிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ  விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி.

5.12.09

கண்டடைந்த கனவு ~ ‘என்’ எழுத்து இகழேல்

தமிழ் இணைய உலகில் கொடிகட்டிப் பறக்கும் சகோதரி சுமஜ்லா அவர்கள் தமது பள்ளிக்கூட நாட்களை தமது வலைப்பதிவில் இடம் பெறச் செய்துள்ளார். மறக்க முடியாத அந்த மலரும் நினைவுகளை அனுபவித்தவர்களுக்குத் தான் அதன் அருமைப் புரியும். நம் பள்ளி வலைப்பதிவில் இடம் பெற த்தகுதியான இந்தப் பதிவை நன்றியுடன் இடம் பெறச் செய்கிறோம்.
கண்டடைந்த கனவு ~ ‘என்’ எழுத்து இகழேல்