23.6.10

அழகிய முன்மாதிரியாகத் திகழும் உஸ்வத்துன் ஹஸனா



அழகிய முன்மாதிரியாகத் திகழும் உஸ்வத்துன் ஹஸனா
  இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 50,000 –க்கும் அதிகமானோர் வசிக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் செயல்படும் முஸ்லிம் கல்விச்சங்கம் முஸ்லிம் மகளிர் முன்னேற்றத்துக்கென சிறப்பான தொரு கல்வி சேவையைச் செய்து வருகிறது.
  பெண்கள் அனைவரும் கல்வி ஒளிபெற்று அறியாமை இருளகற்றி அவனியில் உயர்வு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பள்ளபட்டி வாழ் பாரி வள்ளல்கள், கல்வி சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து 1974-ம் ஆண்டில் உஸ்வத்துன் ஹஸனா நடுநிலைப் பள்ளியினை மதுரை ஹாஜியா நல்லாசிரியர் கே. கமருன்னிஸாவை முதல்வராகக் கொண்டு துவக்கினர்.
  உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்என்பதற்கிணங்க எண்ணத்தால் உயர்ந்து நிற்கும் பள்ளபட்டி முஸ்லிம் கல்விச் சங்க நிர்வாகத்தின் கீழ்
  உஸ்வத்துன் ஹஸனா மழலையர்பள்ளி (1975 – 76)
  உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் மகளிர் ( 1976 – 77)
                                  மேல்நிலைப்பள்ளி
  உஸ்வத்துன் ஹஸனா தொடக்கப்பள்ளி (1973)
  உஸ்வத்துன் ஹஸனா உண்டுறை விடுதி (1978)
  உஸ்வத்துன் ஹஸனா மேல்நிலைப்பள்ளி (ஆங்கில வழி (1985)
  உஸ்வத்துன் ஹஸனா ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் நலன்
                                                  காப்பகம் (1987)
  உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அப்ஸலுல் உலமா
                                         அரபிக் கல்லூரி (1990 – 91)
  ஜாமியா உஸ்வத்துன் ஹஸனா ஆண்கள் அரபிக்கல்லூரி (1991 – 92)
  ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
  அரபிக் கல்லூரியில் 115 மாணவியர், மேல்நிலைப்பள்ளியில் 1646, தொடக்கப்பள்ளியில் 694, மழலையர் பள்ளியில் 305 என மொத்தம் 2750 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
  இவர்களில் உஸ்வத்துன் ஹஸனா ஆதரவற்ற முஸ்லிம் மகளிர் நலன் காப்பகம் மூலம் கல்வி உதவி பெறுவோர் மட்டுமே 1180 பேர், மாணவியரின் நோட்டுப் புத்தகங்கள், இலவச சீருடைகள், சத்துணவு என ஆண்டுக்கு மொத்தம் ரூ.7 லட்சம் செலவிடப்படுகிறது.
  அரசு அங்கீகாரப் பணியிடத்தில் 50 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் பள்ளபட்டியைச் சேர்ந்த மகளிருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மழலையர் பள்ளி ஆகியவற்றில் 54 பேர் நிர்வாகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
  பள்ளிக் கல்வியை முடித்த மகளிர் பொருளாதார முன்னேற்றம் அடைய, அவர்களுக்கென ஒருசுய தொழில்தேவை எனச் சிந்தித்த இச்சங்கம், மகளிருக்கு தையற் பயிற்சி, எம்பிராய்டரி, கூடை பின்னுதல், அலங்கார கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கம்ப்யூட்டர் பயிற்சி போன்ற தொழிற் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
  இதுவரை 412 தையல் இயந்திரங்கள், 23 எம்பிராய்டரி தையல் இயந்திரங்களை இலவசமாக வழங்கியுள்ளது. 50 மாணவிகளுக்கு கவுன், பர்மிடாஸ் தயார் செய்யும் வேலை வாய்ப்பும் கொடுத்து ஒரு நாளைக்கு ரூ.100 வரை ஊதியம் பெறுகின்றனர்.
  மாணவிகளின் மேற்படிப்பு, மருத்துவ சிகிச்சை இவற்றிற்கு பணமில்லாமல் அவதிப்படுவோருக்கு உதவவட்டியில்லா நகைக்கடன்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இச்சங்கம். அதற்காகஅல் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் ஃபண்ட் டிரஸ்ட்என்னும் வங்கி அமைப்பைத் தொடங்கி, வட்டியில்லாமல் நகையின் மதிப்பில் 60 சதத்துக்கு கடன் வழங்கப்படுகிறது.
  பள்ளப்பட்டியைச் சார்ந்த 26 வயது வரை திருமணம் ஆகாமல் இருந்த பெண்கள் 30 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருமண உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
  இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் கல்வி, பொருளாதார முன்னேற்றமடைவதுடன்தனித்திறன்பலவற்றில் முன் மாதிரிகளாகத் திகழ்கின்றனர்.
  10, +2 அரசு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி.
  10, +2 அரசு பொதுத் தேர்வுகளில் அரபி, தாவரவியல், விலங்கியல், ஆடை வடிவமைப்பும், அலங்காரமும் என்று பல பாடங்களில் தொடர்ந்து மாநிலத் தரம் (State Rank)
  பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் மாநில அளவில் பரிசுகள். குறிப்பாகஅண்ணா நூற்றாண்டு விழாகவிதை ஒப்புவித்தல் போட்டி மற்றும்இதயத்தைத் தந்து விடு அண்ணாஎன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய கவிதை ஒப்புவித்தல் போட்டி இவைகளில் மாநிலப் பரிசுகள்.
  துவக்கப்பள்ளிமாவட்டத்தில் சிறந்த பள்ளி  - என்ற விருது.
  சென்ட்ரல் வஃக்பு போர்டு அளித்த ‘The Best Muslim School of Tamilnadu’ என்ற பாராட்டு.
  துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியைகளுக்குடாக்டர் இராதா கிருஷ்ணன் விருதுகள்.
  கல்வி அதிகாரிகளின் பாராட்டுக்கள்
  இவை சில உதாரணங்கள்
  ஏழை மாணவிகள் மருத்துவம், பொறியியல், ஆசிரியப் பயிற்சி முதலிய உயர்கல்வி கற்க, பொருளாதார உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் முஸ்லிம் பெண் மருத்துவர்களும், பொறியியல் வல்லுனர்களும், ஆசிரியைகளும் உருவாகி இஸ்லாமிய சமுதாயத்தின் கரங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
  பள்ளப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பெண்கள் கல்லூரி இல்லாததால் பள்ளப்பட்டி மக்களின்கனவுத் திட்டமானமகளிர் கல்லூரியினை விரைவில் துவக்கிட கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க இஸ்லாமிய மார்க்கப் பேணுதல் அமைப்பில் கல்லூரி செயல்படும். ‘Islamic Cultural Studies’ என்ற பாடப் பிரிவுகளும் இடம் பெறும்.
  இஸ்லாமிய பெண்களைக் கல்வி, ஒழுக்கம், பொருளாதாரம், நாட்டுப்பற்று, ஆன்மீகம், அறிவியல் ஞானம் என்று பல வழிகளிலும் மேம்படுத்தும் வகையில்உஸ்வத்துன் ஹஸனா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரிஅமையும். இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக அனைவரின் துஆக்களையும் நாடுகிறோம்.

 நன்றி : மணிச்சுடர் ( 08/09 ஜுன் 2010 )

16.6.10

Jasmine is state first in SSLC Class X exam

9.6.10

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? – கட்டுரை


தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.
குறைவான மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் விளைவுகள் :
நல்ல கல்லூரியில் இடம் : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, அல்லது நல்ல கல்லூரிகளில் இடம் வேண்டும் என்றால் லட்ச கணக்கில் பணம் கேட்கின்றனர். பொதுதேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் அண்ணா பல்கலை கழகம் மற்றும் சிறந்த கலை, அறிவியல் கல்லூரிகளிலும், நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் IISc, IIT, NIT என்று உயர் கல்வி நிறுவனக்களில் படிக்கும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகின்றது.
நல்ல தரமான கல்வி : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காததால், கல்வி தரம் குறைவாக உள்ள கல்லூரிகளில் சேர வேண்டிய கட்டயம் ஏற்படுகின்றது, இதானால் நமக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை, பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) இல்லாமல் போகின்றது.
வேலை வாய்ப்பு : மதிப்பெண் குறைவாக எடுத்து தரம் குறைவான கல்லூரியில் சேர்வதினால் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. இதனால் நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities) வளர்த்து கொள்ள முடியாமல் போகின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேறுவதற்கு ஆங்கில பேச்சாற்றல் (English speaking skill) மற்றவர்களோடு கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம்.
மேலும் படிக்கும் காலத்தில் பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கு வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.

கல்வி உதவி : குறைவான மதிப்பெண் எடுப்பதினால் கல்வி உதவி கிடைப்பது கடினமாகின்றது, ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர்.
அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :
அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல கல்லூரிகளில் படிபதன் மூலம் நமக்கு நல்ல கல்வி கிடைக்கின்றது, கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும் நல்ல தரமான கல்வியினால் நமக்கு எளிதில் வேளையும் கிடைத்துவிடும். நம்முடைய எதிர்கால வாழ்வும் நலமாக இருக்கும். (இன்ஷா அல்லாஹ்). எனவே நாம் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யவேண்டும்.
அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்
நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.