12.5.08

எந்த கல்லூரியில் என்ன படிக்கலாம்?

எந்த கல்லூரியில் எந்த படிப்பில் சேரலாம் என்பது பற்றிய கண்காட்சிசென்னை பல்கலைக்கழகத்தில் 19-ந்தேதி தொடங்குகிறது
விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிக்கும் கண்காட்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. கல்வி கண்காட்சி
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. அடுத்து கலை அறிவியல் கல்லூரிகளில் என்ன படிப்பை படிக்கலாம் என்று மாணவர்கள் எண்ணம் அலை மோதும் நிலை இப்போது உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்கள் அவர்களின் மார்க்கு தகுதிக்கு ஏற்ப, பொருளாதார வசதிக்கு ஏற்ப எந்த கல்லூரியில் எந்த படிப்பை படிக்கலாம், எந்த படிப்பை படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள சென்னை பல்கலைக்கழகம் கண்காட்சி நடத்த உள்ளது.
இந்த கண்காட்சி 19-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடை பெற உள்ளது. இதற்காக சென்னை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகள் சென்னை பல்கலைக்கழகத்தில் அரங்குகள் அமைத்து என்ன பாடப்பிரிவுகள் அவர்கள் கல்லூரியில் இருக்கின்றன, அதற்கு கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய முழுவிவரமும் தெரிவிப்பார்கள்.
விண்ணப்பங்களை பெறலாம்
பிளஸ்-2 படித்த மாணவர்கள், மாணவிகள் கண்காட்சியில் கலந்து கொண்டு அவர்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தை எடுத்து படிக்க விண்ணப்பங்களை வாங்கிச்செல்லலாம். கல்லூரி நடைமுறைக்கு ஏற்ப கல்லூரியில் சேர்ந்து விடலாம்.
இது மாணவர்கள் நலன் கருதி இதற்கான ஏற்பாட்டை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராமச்சந்திரன் செய்துள்ளார்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.
நன்றி :சற்றுமுன்

0 comments: