18.5.08

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு


திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்றுஇஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கியமாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடுமே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.
சிறப்பு நிகழ்வுகள்
கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு
தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Themeof the Conference ) இருக்கும்.
1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்டமுஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்
பேராளர் :
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமேபேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்துதரப்படும்.
பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை
கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்துஅனுப்ப வேண்டும்.கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
மாநாட்டுச் சிறப்பு மலர் :
சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்குமிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்வரவேற்கப்படுகின்றன.
விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்
மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ
ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000
மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரக் குழு
அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்
வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAMஎன்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )
செயல்திட்டங்கள்
1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ‘இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்பண்பாட்டு இருக்கை’யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக ‘இஸ்லாமிய ஆய்வு இருக்கை’யைபிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.
3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி ‘மாயின்அபூபக்கர்’ பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒருபல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.
5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.
8. இவ்வாண்டும் ‘அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபாஅறக்கட்டளை’ சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்வழங்கப்படுகிறது.
9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மதுஅவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.
10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
நூல் வெளியீடு
மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கவேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்அனுப்பி வைக்க வேண்டும்.
நூல் அன்பளிப்பு
பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
அரிய நூல் பதிப்பு
இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்வெளியிடப்படவிருக்கின்றன.
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
சிறப்பு நெறியாளர்கள்
பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்
நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்
அமீரக ஒருங்கிணைப்பாளர்
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433
விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :
எஸ்.எம். ஹிதாயத்துல்லாபொதுச்செயலாளர்இஸ்லாமிய இலக்கிய கழகம்எண் 27 உட்ஸ் சாலைஅண்ணா சாலைசென்னை 600 002தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067
மாநாட்டுப் புரவலர்கள்
1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர் தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர் தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )
———- Forwarded message ———-From: Anwar Zamaan <anwar.zamaan@gmail.com>Date: Fri, Mar 21, 2008 at 3:50 PMSubject: Please publish in the internet ALL Tamil Muslims forumsTo: muduvaihidayath@gmail.com
ISLAAMIYA ILAKKIYA KAZHAKAM.MAANILA MAANAADU, TRICHY.MAY 18, 2008
Please publish in the internet ALL Tamil Muslims forums.
இம் மாநாட்டை முன்னின்று நடத்தும் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் S.M. ஹிதாயத்துல்லாஹ் அவர்களும். அமீரக ஒருங்கிணைப்பாளர் முத்துப்பேட்டை M. அப்துல் ரஹ்மான் அவர்களும் நமது ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் என்பது நம் பள்ளிக்கும் நமக்கும் பெருமையளிக்கும் செய்தியாகும்.

0 comments: