26.5.10

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;
4 பேர் 2-வது இடம்
10 பேர் 3-வது இடம்
.
Tirunelveli புதன்கிழமை, மே 26, 10:30 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
 
 நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;
 
 4 பேர் 2-வது இடம்: 10 பேர் 3-வது இடம்

சென்னை, மே. 26-
பத்தாம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு 8.56 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவுகள் இன்று (புதன்) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.

எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநில அளவில் திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் முதல் இடத்தைப்பிடித்துள்ளார். அவர் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவி ஜாஸ்மின் 100க்கு 100 மதிப்பெண் வாங்கி உள்ளார். அவர் ஒவ்வொரு பாடத்திலும் வாங்கியுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 98

மொத்தம் - 495 


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 4 பேர் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

1. கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கே. நிவேதிதா 494 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-
 
தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

2. கரூர் கல்வி மாவட்டம் தலப்பட்டியில் உள்ள பி.ஏ. வித்யாபவன் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். சிவப்பிரியா 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 97

மொத்தம் - 494

3. புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.தமிழரசன் 494 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டவர்களில் ஒருவரா வர். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 98

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

மாணவர் தமிழரசன் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழில் மட்டும் ஓரிரு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்திருப்பார்.

4. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங் கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம். பிரியங்கா 494 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 98

கணிதம் - 98

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடத்தை 10 மாணவ- மாணவிகள் எடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலா 493 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். அந்த 10 மாணவ- மாணவிகள் விபரம் வருமாறு:-

1. தென்காசி கல்வி மாவட்டம் புளியங்குடியில் உள்ள ஏ.வி.எஸ். மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ரம்யா 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல்- 100

மொத்தம் - 493

மாணவி ரம்யா 3 பாடங்களில் 100க்கு 100 வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

2. பாளையங்கோட்டை சாராதக்கர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ஜெயிலின் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாடவாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

3. பரமக்குடி ஏ.வி. மேல் நிலைப்பள்ளி மாணவி பி.திலகவதி 493 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 98

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

4. பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர் பிரதீப்குமார் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 98

மொத்தம் - 493

5. மதுரை சவுத்கேட் பகுதியில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.ஜெயமுருகன் 493 மதிப்பெண் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 97

கணிதம் - 99

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

6. மதுரை புனித மேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கே.நாகராஜன் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

7. நாமக்கல் கல்வி மாவட்டம் அனியபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெ.இந்துஜா 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 96

கணிதம் - 99

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

8. கரூர் கல்வி மாவட்டம் புன்னம் சத்திரம் சேரன் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ராஜ்சூர்யா 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

9. புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.ரேவதி 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் எடுத்த மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

10. ஆரணியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நசீரீன் பாத்திமா 493 மதிப்பெண்கள் பெற்று 3-வது இட சாதனையில் ஒருவராக உள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 99

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 100
மொத்தம் – 493
 

0 comments: