27.8.07

பொன் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள்

S,M.HIDAYATHULLAH (PARTHIBANUR)
CHENNAI Cell 9840040067
--------------------------------------
M.ABDUL RAHMAN (MUTHUPETTAI)
DUBAI Cell 0097150424990
---------------------------------------
A.MOHAMED ABDULLAH (PALLAPPATTI)
PONDICHERRY 0431-4210704
---------------------------------------
Afzalul Ulama M.AHMADULLAH (ARUMBAVUR)
ARANTHANGI
----------------------------------------
A.MOHAMED SADAKATHULLAH (PALLAPPATTI)
MADURAI Cell: 9443190102
---------------------------------------
M.J.HASHIM
MADURAI Cell: 9942226027
----------------------------------------
Afzalul Ulama
M.MUHAIYUDEEN ABDUL KADAR M.A.BEd
RAMNAD Cell: 9443582037
---------------------------------------
M.MOHAMED ZAKARIYA
CHENNAI Cell: 9380162828
--------------------------------------
E.ADAM MOOSA
CHENNAI Cell : 9884284886
--------------------------------------
A.MOHAMED MASOOD
CHENNAI Cell: 9382102995
------------------------------------
A.MOHAMED ANWAR
CHENNAI Cell: 9555251764
------------------------------------
I.A.MOHAMRD MUSTHAFA
CHENNAI Cell: 9840244047
------------------------------------
A.MOHAMED YUSUFF
CHENNAI Cell 9840275388
-----------------------------------
I.SHAIK ISMAIL
CHENNAI Cell: 9444009880
Email: tayseer@eth.net
-----------------------------------
S.ALI HUSSAIN (THIRUMULLAIVASAL)
MAYILADUTHURAI Cell : 9443224968
Email: sah_bismi@rediffmail.com
------------------------------------
T.NISAR AHMAD
THIRUCHEMBALLI
------------------------------------
S.HASANUDEEN
CHIDAMBARAM Cell : 92441404417
------------------------------------
M.ISADEEN AHAMED
PONDICHERRY Phone: 2223096
------------------------------------
P.MOHAMED RAFI
THRUPPUR Cell: 9443478883
-----------------------------------
K.AKBAR ALI
THIRUPPUR Cell : 9843711998
-----------------------------------
A.IMDADULLAH
CHENNAI Cell: 9444295366
-----------------------------------
E.S.HAMEED CHENNAI
Cell 9840035402
Phone 044-28490070
-----------------------------------
ABDUL RAZACK
COIMBATORE
Phone: 0422-2595051
-----------------------------------
ABUBACKAR SIDDIQ
NEYVELI Cell : 95142363023
----------------------------------
C.M.SYED SULTHAN
CHINNAMANUR
----------------------------------
O.MOHAMED YUSUFF
ADIRAMPATTINAM
---------------------------------
S.SHARBUDEEN
ADIRAMPAATINAM
----------------------------------
A.ABDUL RAFEEK
MAYILADUTHURAI Ph: 04364-220835
-----------------------------------
S.ZAKIR B.com CHENNAI
-----------------------------------
A.JAINULABIDEEN CHENNAI
-----------------------------------
M.A.RAHMATHULLAH KOLLAM KERALA
Cell: 9387306189
-----------------------------------
M.A.HAJA MOHINUDEEN NAGARCOIL
-----------------------------------
S.M.ABDUL RAHEEM KEERANUR
Ph:04545-23527 Cell: 9360386660
-----------------------------------
A.AZEEZURRAHMAN (PALLAPPATI)
PONDICHERRY Cell: 9443239042
------------------------------------
A.M.SIBUHATHULLAH ( PALLAPPATTI)
PONDICHERRY
------------------------------------
H.SHAMSUDEEN AYANGUDI
K.S.A 015480679
-----------------------------------
M.A.SADIQ BATCHA PANRUTTI
-----------------------------------
B.SULTHAN (THRUMULLAIVASAL)
MAYILADUTHURAI Cell: 9842992324
-----------------------------------
J.MOHAMED ARIFF CHENNAI
Ph 044-9520905 Cell: 944409886
-----------------------------------
A.ABDUL RAHEEM
THIRUCHEMBALLI
-----------------------------------
K.UBAIDURRAHMAN
KOTTAIKUPPAM
Ph:0413-2238519
-----------------------------------
A.MOHAMED YASEEN
PALAYAPPATTINAM
-----------------------------------
M.MOHAMED ALI
VILAR. THANJAVUR
Cell: 9443153163
----------------------------------
N.NAZEER
THIRUKKALACHERY
----------------------------------
B.MALIMAR (THIRUMULLAIVASAL)
MAYILADUTHURAI
Cell: 9842323081
Ph: 04364-223080-225372
----------------------------------
M.A.NOORDEEN
NAGARCOIL
---------------------------------
M.A.ANSAR MOHAMED NIDUR
Ph: 04364-250507
----------------------------------
M.SYED MUSADIQ
PRANGIPPETTAI
----------------------------------
N.P.SADAKATHULLAH
KADAYANALLUR
Cell:9842888697
-----------------------------------
A.SIDDEEQ AHAMED
THUVAKUDI TRICHY
Ph: 0431-2500689-2421285
----------------------------------
K.M.FAROOK
CHIDAMBARAM
Cell: 9442424374
---------------------------------
A.K.JABARULLAH ERODE
210858-215638
--------------------------------
K.M.JAWAHAR MAIDEEN
SHARJAH U.A.E
--------------------------------
J.JAHABAR SADIQ CHENNAI
Ph: 044-538249
--------------------------------
M.JABARULLAH CHENNAI
Cell: 9840112368
---------------------------------
Dr.N.ABDUL JABBAR
SALEM
---------------------------------
A.MOHAMED MEERAN
KOTTAYAM KERALA
Ph:0481-585477-300577
--------------------------------
M.MOHAMED SULAIMAN
THINDIVANAM
-------------------------------
M.ABDUL RASHEED
SANKARAPURAM
VILUPPURAM DIST
-------------------------------
Alhaj S.C. NOOR MOHAMED
YERCAUD
------------------------------

மனதில் நிறைந்த மாமனிதர்கள் 4

மறக்க முடியாத மாமனிதர்கள் வரிசையில் ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே இது வரை கண்டோம். பாடம் நடத்திய ஆசிரியர்கள் மட்டுமல்ல நம் காலத்தில் நம் மனதில் இடம் பெற்ற இன்னும் சில பெருந்தகைகளும் இருந்தனர். அவர்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அப்போது தான் இத் தொடர் முழுமை பெறும்.

சுல்தான் சார்

பள்ளி அலுவலகத்தின் தலைமை எழுத்தர். மிகவும் இனியவர். வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்டவர் எனினும் மாணவர்களின் இதயங்களுக்கு இப்பாற்பட்டவர். மிக நீண்ட காலம் பணியாற்றிவர். கையெழுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். அலுவலகத்தின் தலையாய பணிகள் அனைத்தும் இவர் தலை மீது தான். தம் பணியை இடை நிறுத்தம் செய்து கொண்டு பிராண்ஸ் சென்று விட்டதாக அறிந்தோம். எங்கிருந்தாலும் வாழ்க.

சம்பந்தம் சார்

அப்போது அலுவலகத்தின் துணை எழுத்தர். அதன் பிறகு இவர் தான் தலைமை எழுத்தர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிலேயே மிகவும் சிறிய வயதுடையவர் (அப்போது). மாணவர்களுக்கு மத்தியில் நல்ல பெயர் உண்டு. அலுவலகத்தில் எதுவும் உதவி நாடிச் சென்றால் அக்கரையுடன் செய்து கொடுப்பார். நற்குணம் கொண்ட நல்ல அலுவலர்.

இப்ராஹீம் பாய் (பியூன்)

பள்ளி வரலாற்றில் மிக நீண்ட காலம் பியூனாகப் பணியாற்றிய ஒரு நல்ல மனிதர். இவரைத் 'தொப்பி' என்று மாணவர்கள் அழைப்பார்கள். இது இவரைப் பழிக்கும் விதமான பட்டப் பெயர் அல்ல. பஜ்ர் தொழுகைக்கு மாணவர்களை எழுப்பும் போது உருது மொழியில் 'சொப் பீ உட்டோ' (அனைவரும் எழுந்திருங்கள்) என்று சொல்வார். நாளடைவில் அதுவே இவரது பெயராயிற்று. இது இவரை அவமதிக்கும் பெயர் அல்ல என்பதாலேயே இங்கு குறிப்பிட்டோம்.

பள்ளி வளாகக் கதவுகள் பூட்டப்பட்டு மாணவர்கள் வெளியில் செல்ல முடியாத கொடுமை நடந்த காலகட்டத்தில் பள்ளியின் உள்ளே இவர் வைத்திருக்கும் கடை தான் எங்களுக்கு சூப்பர் மார்க்கட்.
இறையடி சேர்ந்து விட்ட இந்த நல்ல மனிதரை நல்லோர்கள் கூட்டத்தில் அல்லாஹ் சேர்ப்பானாக!

பிள்ளை (வாட்ச் மேன்)

எப்போது நம் பள்ளியில் வாட்ச் மேனாகச் சேர்ந்தாரோ தொரியாது, ஆனால் இவரது இயலாத முதுமையிலும் கூட இவரை கனிவுடன் நடத்தியது நம் பள்ளி நிர்வாகம். அந்த அளவுக்கு பள்ளியுடன் பிண்ணிப் பிணைந்தது இவர் வாழ்க்கை.
ஆரம்பக் காலத்தில் விடுதிக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்ப்பதில் அரும்பாடுபட்டவர்.
பள்ளி வகுப்பறைகளிலாகட்டும், விடுதி அறைகளிலாகட்டும், இரவு நேரங்களில் அதிக நேரம் மின் விளக்குகள் எறிந்தால் 'கரண்ட் என்ன தண்ணியிலா ஓடுகிறது?' என்று உரிமையுடன் அதட்டுவார். இவரது அதட்டலுக்கு பயந்தே சீக்கிரம் விளக்குகளை அணைத்து விடுவோம்.

சமையற்காரர்கள்

1. ஹாஜியார் (ஹஜ் குழுவுக்கு சமையற்காரராகச் சென்று ஹஜ் செய்தவர் என்று சொல்வார்கள். ஹாஜியார் என்ற பெயரில் தான் பிரபலம்)
2. ஜலீல் பாய்
3. பஷீர் பாய்
4. அமானுல்லா
5. கலியமூர்த்தி
பல வருடங்கள் எங்களுக்கு உணவு சமைத்து அதைப் பக்குவமாகப் பரிமாரி எங்கள் பசி தீர்த்த (கவனிக்க! பரிமாரிய என்ற வார்த்தைக்கு முன் தான் பக்குவமாக என்னும் வார்த்தையைச் சேர்த்திருக்கிறோம்) இந்த நல்ல மனிதர்களும் மறக்க முடியாத மனிதர்களில் உள்ளவர்கள் தாம்.

இத் தொடரில் இரு முக்கியமானவர்ளையும் குறிப்பிட்டாக வேண்டும்.

தினமும் காலையிலும் மாலையிலும் சுடச்சுட மல்லிகைப்பூ போன்ற இட்லியுடன் மணக்கும் சட்னி சாம்பாரும் தந்து பள்ளி உணவு போதாத போது குறைந்த செலவில் (நாலணாவுக்கு நான்கு இட்லிகள்) எங்கள் பசி தீர்;த்து எங்கள் மனதில் இடம் பெற்ற இட்லிப்பாட்டி,

வெகு தொலைவிலிருந்து தினமும் நம் பள்ளிக்கு வந்து 5 காசுக்கு அருமையான தயிர் தந்து உண்ணுகின்ற உணவை கொஞ்சம் சுவையாக உண்ணவைத்த தயிர் பாட்டி

ஆகிய இரு மகராசிகளும் நம் மனதில் நிறைந்தவர்களில் உள்ளவர்கள் தாம்.
இந்த நல்லவர்களை நாம் நன்றியுடன் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.


நாம் பயின்ற காலகட்டத்தில் நமக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே நினைவில் உள்ளவரை தொகுத்திருக்கிறோம். இவர்களில் விடுபட்ட ஆசிரியர்கள் இருப்பின் நண்பர்கள் யாராவது அத்தகைய ஆசான்களை நினைவு கூர்ந்து எழுதினால் இதன் தொடர்ச்சியாக வெளியிடுகிறோம்.
எழுதப்பட்டுள்ள தகவல்களில் மாற்றங்கள், மற்றும் தவிர்க்கவேண்டியவை, சேர்க்க வேண்டியவை ஆகியவற்றை தயவு செய்து நண்பர்கள் தெரிவித்தால் நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறோம். திருத்திக் கொள்கிறோம்.
நாம் பயின்ற 1970 முதல் 1976 காலகட்டம் வரையிலான ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே இத் தொடரில் நினைவு கூர்ந்திருக்கிறோம். அதற்குப் பின் வந்து சேர்ந்த ஆசிரியர்கள், தற்சமயம் கல்விச்சேவைப் புரிந்து கொண்டிருக்கும் கண்ணியத்திற்குரிய ஆசிரியப் பெருந்தகைகள் குறித்து சமீப காலத்தில் வெளியேறிய மாணவர்களிடமிருந்து ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். இதன் தொடர்ச்சியாக நன்றியுடன் வெளியிடுவோம். இன்ஷா அல்லாஹ்.

மனதில் நிறைந்த மாமனிதர்கள் 3

அப்துல் காதிர் மரைக்காயர் உமரி

1971 ஆம் ஆண்டில் நம் பள்ளியில் அரபி ஆசிரியராகப் பொறுப்பேற்று தம் சேவைக்காலம் முழுதும் நம் பள்ளியிலேயே கழித்து இப்போது ஓய்வும் பெற்று விட்டார்கள்.

மாணவர்களுக்கு மத்தியிலும் சரி சக ஆசிரியர்களுக்கு மத்தியிலும் சரி இறுதி வரை நல்ல பெயரும் புகழும் பெற்று திகழ்ந்தவர். அனைத்து மாணவர்களிடமும் அன்பாகப் பழகுவார்.
மிக நீண்ட காலம் ஹாஸ்டல் வார்டனாகவும் பணியாற்றியவர்.

மாணவர்கள் பேச்சுப் பயிற்சியில் சிறந்து விளங்க மன்பவுல் பயான் மாணவர் மன்றத்தில் அதிக கவனம் செலுத்தியவர். இவரது முயற்சியில் சர் செய்யத் அஹமது கான் படிப்பகம் என்னும் பெயரில் மாலை நேரப் படிப்பகம் உருவானது. மாணவர்கள் இஸ்லாமிய வார மாதப் பத்திரிகைகளைப் படிக்க அருமையான ஏற்பாட்டைச் செய்தவர். வார்டன் பொறுப்பிலிருந்து இவர் விலகிய பின்னர் அந்தப் படிப்பகம் நின்று போனது.

பள்ளியின் முன்னேற்றத்தில் அதிக அக்கரைச் செலுத்தியவர். சிறந்த பண்பாளர். மாணவர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டாதவர். மறக்க முடியாத ஆசிரியர்களில் இவருக்கும் இடமுண்டு.

ராமசுப்பிரமணியம் சார்

அறிவியலையும் ஆங்கில இலக்கணத்தையும் அழகாகப் போதிப்பதில் அசகாய சூரர். இவர் பள்ளியில் வந்து சேர்ந்தது முதல் மிக நீண்ட காலம் வரை ஒரு நாள் அணிந்த சட்டையை மறுநாள் அணிய நாங்கள் பார்த்ததே இல்லை. வருடம் முழுதும் கவனமாக நாங்கள் கவனித்தும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சட்டை தான்.

மாணவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்துவார். மாணவர்களும் இவர் மீது அதிகப் பாசம் கொண்டிருப்பார்கள்.

கலிய பெருமாள் சார்

விளையாட்டு ஆசிரியர் என்றாலும் கூட மாணவர்கள் மிகவும் பயப்படுவார்கள். விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவருக்கும் அவர்களைப் பிடிக்கும். தவறு செய்யும் மாணவர்களுக்கு இவர் கொடுக்கும் டக் வாக் (வாத்து நடை) தண்டனை மிகவும் பிரசித்தம். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தபடி தாவித் தாவி ஓட வேண்டும். கொஞ்ச தூரம் ஓடிப்பார்த்தால் தான் உங்களுக்குத் தெரியும்.

ஆரம்பத்திலிருந்தே மாணவர்களுக்கு மத்தியில் இவர் மீது பயம் ஏற்பட்டு விட்டதே தவிற மற்றபடி மனதால் மிகவும் நல்லவர். இவரது காலத்தில் ஆக்கூர் ஓரியண்டல் மாணவர்கள் பேட்மின்டன் விளையாட்டில் மாவட்ட அளவில் விளையாடி பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்க்pன்றனர்.

ராஜாஜி சார்

கணித ஆசிரியராக இருந்த இவர் கொஞ்சம் அதிக கண்டிப்புடன் இருப்பார். மாணவர்கள் இவருக்கு மிகவும் அஞ்சுவார்கள்.

பேட்மின்டன் போட்டிகளில் மாணவர்கள் வெளியூர் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று விளையாடி வெற்றி பெறும் அளவுக்கு மாணவர்களுக்கு அதிகப் பயிற்சி கொடுத்தவர். மாணவர்களுடன் சரிசமமாகச் Nசுர்ந்து பேட்மின்டன் விளையாடுவார்.

தலைமை ஆசிரியர் அறையிலிருந்து அறிவிக்கும் அறிவிப்பை அனைத்து வகுப்பு மாணவர்களும் கேட்கும்படி பள்ளியில் முதன் முதல் ஸ்பீக்கர் வைத்து அறிவிப்பு செய்யும் ஏற்பாட்டைச் செய்தவர்.

இடையிலேயே ஓரியண்டலை விட்டு விலகி வேறு பள்ளிக் கூடத்திற்கு சென்று விட்டார்.

ராமசாமி சார்

மிகவும் அமைதியானவர். மாணவர்களிடம் கடிந்து பேசமாட்டார். சில வகுப்புகளுக்குத் தமிழ்ப் பாடமும் நடத்துவார். தமிழ்ப்பாடமும் நடத்துவதாலோ என்னவோ தமிழாசிரியர்களுக்கு மட்டுமே உரித்தான கனிவும் காருண்யமும் இவரிடம் இருக்கும். எங்களுக்கு 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் நடத்தியிருந்தாலும் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் வரை எங்கள் மீது அன்பு செலுத்தியவர். அரைக்கை சட்டை தான் அணிந்தாலும் அதையும் கூட கொஞ்சம் மடித்து விடுவது இவரது ஸ்டைல்.

ஆபிரகாம் லிங்கன் அய்யா

நாங்கள் பள்ளி இறுதி ஆண்டு படித்த சமயம் எங்கள் தமிழய்யா சிவசங்கரன் சார் அவர்கள் முனைவர் பட்டம் பெற பல்கலைக் கழகம் சென்று விட்ட போது, அவர்களுக்கு பதிலாகப் புதிய தமிழாசிரியராக வந்து சேர்ந்தவர் தான் ஆபிரகாம் லிங்கன் அய்யா அவர்கள்.

தமிழாசிரியர்களுக்கே உரித்தான அன்பும் அரவணைப்பும் இவரிடமும் இருக்கும். புதிய ஆசிரியர் என்ற போதிலும் கூட மிகவும் அன்னியோன்யமாகப் பழகுவார். மாணவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்துவார். எந்த ஒரு மாணரையும் ஒருமையில் விளித்ததில்லை. மரியாதைப் பன்மையில் தான் விளிப்பார்.

பள்ளி இறுதித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் நாங்கள் அதிக மதிப் பெண்கள் பெற்று புதிதாக வந்து சேர்ந்த இந்தத் தமிழய்யாவின் பெயரை காப்பாற்றினோம்.

அஹ்சன் ஹஜ்ரத்

அரபி ஆசிரியராக இருந்தவர். வந்து சேர்ந்த புதிதில் 'புது ஹஜ்ரத்' என அழைக்கப்பட்டு மிக நீண்ட காலம் அப்பெயரே நிலைத்தது. சில ஆண்டுகள் விடுதி வார்டானாகவும் இருந்தார்.

மாணவர்கள் காலையிலும் மாலையிலும் வெளியில் சென்று வருவதற்கு தொன்று தொட்டு இருந்து வந்த சுதந்திரம் இவர் வார்டனாக இருந்த போது,பறிக்கப்பட்டது.


உணவுக் கூடத்தில் மாணவர்கள் வரிசையில் நின்று உணவு வாங்கும்போது இறுதி வகுப்பு மாணவர்கள் மட்டும் வரிசையில் நிற்காமல் நேராகச் சென்று வாங்கிக் கொள்ளும் சிறப்புச் சலுகை கூட இவர் காலத்தில் தான் பறிக்கப்பட்டது


மனதில் நிறைந்த மாமனிதர்கள் பட்டியல் தொடரும்.....
இன்ஷா அல்லாஹ்.

22.8.07

மனதில் நிறைந்த மாமனிதர்கள் 2

ஏ.முஹம்மது இக்பால் சார்

இத் தொடரைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன், எங்கே இன்னும் இக்பால் சார் பெயர் வரக் காணோமே! என ஏங்குவது நமக்குப் புரிகிறது. இந்த உயர்ந்த மனிதருக்காக தனியொரு வலைப் பதிவு தொடங்கினால் கூடத் தகும்.

நமக்கு அறிவுக் கண் திறந்த நமது ஆசிரியப் பெருந்தகைகளில் யாரையும் வேறுபடுத்திப் பார்க்க நமது மனம் இடம் கொடுக்க வில்லை தான், இருந்தாலும் என்ன செய்ய? ஒரு பெற்றோர் தமது குழந்தைகள் அனைவர் மீதும் சரிசமமாகப் பாசம் காட்ட வேண்டும் என்பது நியாயமாக இருந்த போதிலும் கூட ஒரு குழந்தை மீது அவர்களையும் அறியாமல் அதீதப் பாசம் ஏற்படுவது இயற்கை. எங்கள் இக்பால் சார் மீது நாங்கள் கொண்டிருக்கும் பாசம் அப்படிப்பட்டது தான்.

1970 ஆண்டு எம்முடன் ஓரிண்டலில் 6 ஆம் வகுப்கு மட்டுமே பயின்று விட்டு அதன் பிறகு வேறு பள்ளிக் கூடத்திற்கு மாற்றலாகிப் போய்விட்ட ஒரு நண்பரை 35 வருடங்களுக்குப்பின் எதிர்பராமல் சந்திக்க நேரிட்டது. அவர் என்னிடம் இக்பால் சார் எப்படி இருக்கிறார்கள்? என விசாரித்தார். இந்த ஒரு ஆசிரியரின் பெயர் மட்டுமே நினைவில் இருப்பதாகவும் சொன்னார்.

ஆறாம் வகுப்பு மாணவர் முதல் இறுதி வகுப்பு மாணவர் வரை, மிகக் குறுகிய காலம் மட்டுமே பள்ளியில் பயின்ற மாணவர் உட்பட அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்ற இந்த ஆசானைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.

பிரதமரை எனக்குத் தெரியும், ஆனால் பிரதமருக்கு என்னைத் தெரியாதே! என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. எங்கள் இக்பால் சாரைப் பற்றிக் கூறும் போது இந்த வாசகம் பொய்த்துப் போகும்.

சில ஆண்டுகளுக்கு முன் ஓரியண்டலில் நடை பெற்ற 'முன்னாள் மாணவர் சந்திப்பு' நிகழ்ச்சியின் போது அந்த நிகழ்ச்சிக்கு இக்பால் சார் வந்து கலந்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில், வந்திருந்த பல முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சி முடிந்த மாலைப் பொழுதில் ஆக்கூரிலிருந்து அப்படியே பொறையாருக்குப் பயணமானோம். ஆம் எங்கள் இதயம் நிறைந்த இக்பால் சார் அவர்களின் இல்லத்திலேயே சென்று அவர்களைச் சந்தித்தோம்.

அனைவரையும் வரவேற்று உபசரித்த அப் பெருந்தகை ஒவ்வொரு மாணவரின் பெயரையும் ஊரையும் சொல்லி விசாரித்தது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களில் சிலர் 20 ஆண்டுகள் கழித்தும் சிலர் 25 ஆண்டுகள் கழித்தும் சிலர் 30 ஆண்டுகள் கழித்தும் முதன் முறையாக இக்பால் சார் அவர்களை இப்போது தான் சந்திக்கின்றனர். அப்படியே அசந்து போனோம்.

இதை விட ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்ன தெரியுமா? வந்திருந்த மாணவர்களில் சிலர் தம் மகன்களையும் அழைத்து வந்திருந்தனர். எல்லோரும் கூடியிருந்த அக்கூட்டத்தில் சில சிறுவர்களைக் குறிப்பிட்டு நீ இன்னாருடைய மகன் தானே? எனக்கேட்டார்கள். அருகிலிருந்த அச்சிறுவர்களின் தந்தைகளிடம், 'நீ முதன் முதல் ஆறாம் வகுப்பில் வந்து சேர்ந்த போது இப்படித் தான் இருந்தாய்' என்றார்கள்.

இப்போது சொல்லுங்கள்! எங்கள் ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருந்த இப்பெரு மேதையை நாங்கள் ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!

மாணவரின் குடும்பப் பிரச்சினைகள் முதற் கொண்டு அக்கரையுடன் விசாரித்து அதற்கேற்ற தீர்வு சொல்வார்;. ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்துவார்;. அதனாலேயே அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆசிரியரை மிகவும் பிடிக்கும்.

சில ஆசிரியர்களைப் போல் தம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல், நியாயமானவற்றில் மிகுந்த கண்டிப்புடன் இருப்பார். தவறு செய்பவர்களைத் தண்டித்தாலும் அத் தண்டனை நியாயமானதாக இருக்கும்.எனவேதான் இக்பால் சாரைக் கண்டால் யாருக்கும் பயம் வராது. இக்பால் சாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்கள் மிகவும் கவனமாக இருப்பர்.

பெற்றோரைப் பிரிந்து வெகு தொலைவிலிருந்து வந்து விடுதியில் தங்கிப் படிக்கும் சிறுவர்களாகிய நாங்கள் கவலையுடன் கண்ணீருகுக்கும் தருணங்களில் அன்னையாக தந்தையாக அன்புடன் அரவணைத்து ஆறுதல் சொன்னவர்.

குடும்பத்தைப் பிரிந்து வந்து நிராதரவாக நின்ற சின்னஞ்சிறு பிஞ்சு நெஞ்;சங்களில் பதிந்து போன அந்த அன்பும் அரவணைப்பும் ஆறுதலும், என்றென்றைக்கும் நினைவில் நிற்கும். வையகத்தில் நாங்கள் வாழுகின்ற காலமெல்லாம் இந்த நல்லாசிரியரின் நினைவு எங்கள் இதயத்தில் நிறைந்து நிற்கும்.

தற்போது ஓய்வு பெற்று, சொந்த ஊரில் வசித்து வருகிறார். தம்மிடம் கல்வி கற்று உயர்ந்த மாணவர்கள் பலரின் இதயங்களிலும் தான்.

அப்துல் கனி சார்

விடுதி மாணவர் சேர்க்கையில் முக்கியப் பங்காற்றியவர். இலவச விடுதி உணவு வழங்கும் பொறுப்பும் சிறப்பு விடுதி பொறுப்பும் பல ஆண்டுகள் இவரிடம் தான் இருந்தது. இவர் பேசுகின்ற விதமே தனி, மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அடுக்கு மொழி பேசுவதில் அனைவரின் மனம் கவர்ந்தவர்.

'விண்ணையும் மண்ணையும் படைத்து, அதில் உன்னையும் என்னையும் படைத்து, பக்கத்திலே தென்னையும் படைத்து' பொதுக் கூட்டங்களில் பேசும் போது இவ்விதம் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவார். பாடம் நடத்தும் போது கூட இப்படி வார்த்தைகளால் ஜாலம் புரிவார்.

கரும் பலகையில் இவர் பாடம் எழுதிக் கொண்டிருக்கும்போது வகுப்பின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் 'மறைக்கிறது' எனச் சொன்னால் அப்படியே மறு பக்கம் நின்று இடது கையால் எழுதுவார். இரு கைளாலும் கரும்பலகையில் எழுதும் எழுத்துக்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.

மறக்க முடியாத ஆசிரியர்கள் எனச் சிலரைப் பட்டியலிட்டால் கண்டிப்பாக அந்தப் பட்டியலில் பெருமேதை கனி சாரின் பெயரும் இடம் பெரும்.

தம் வாழ்நாள் முழுதும் நம் ஓரியண்டலில் கல்விச் சேவையாற்றிய இப் பெருமேதை ஓய்வு பெற்ற சில தினங்களிலேயே இறையடி சேர்ந்து விட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் இம் மாமனிதரின் பாவங்களை மன்னித்து நல்லோர்களின் கூட்டத்தில் சேர்ப்பானாக ஆமீன்.


முஹம்மது கவுஸ் சார்

சீர்காழி அருகே உள்ள 'திருமுல்லை வாசல்' என்னும் ஊர் எண்ணற்ற மாணவர்களை மட்டுமல்ல ஈடற்ற ஓர் ஆசிரியரையும் எங்களுக்குத் தந்தது. ஆம் கவுஸ் சார் என்னும் கண்ணியமிக்க ஆசிரியர் தான் அவர்கள். இக்பால் சாருக்கு ஓர் ரசிகர் மன்றக் கூட்டம் இருப்பது போல், இந்த கவுஸ் சாருக்கும் ஒரு பெரும் ரசிகர் மன்றக் கூட்டமே இருக்கிறது.

நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாணவர்கள் மத்தியில் இந்த ஆசிரியருக்கு இருந்த பேரும் புகழும், நமக்கு ஒரு பாடத்திற்காவது இந்த கவுஸ் சார் அவர்களை நியமித்திருக்கக் கூடாதா? என்று எங்களை ஏங்க வைத்திருக்கிறது.

பாடத்தைத் தெளிவாகப் புரியவைப்பதிலும், பக்குவமாக மாணவர்களை வழிநடத்துவதிலும், கவுஸ் சாருக்கு நிகர் கவுஸ் சார் தான். கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் கடைசி மாணவன் கூட கவுஸ் சார் பாடம் நடத்தும் போது தன் தூக்கத்தை தொலைத்து விட்டு பாடத்தைக் கவனிப்பான்.

பள்ளிக் கூட வகுப்பறையில் பாடம் நடத்தும் போது, கல்லூரியில் பேராசிரியர் விரிவுரை நடத்துவது போலிருக்கும். உயர் வகுப்பில் நாங்கள் உட்கார்ந்திருந்தாலும், எங்களையும் அறியாமல் எங்கள் செவிகள் கீழ் வகுப்பில் கவுஸ் சார் பாடம் நடத்துவதை கேட்டுக் கொண்டிருக்கும்.

ஏராளமான மாணவர்களின் இதயங்களில் இடம் பிடித்த இந்த கவுஸ் சார் அவர்கள் ஏனோ தெரியவில்லை இடையிலேயே நம் பள்ளியை விட்டு விலகி வடகால் என்னும் ஊருக்குச் சென்று விட்டார்கள். நம் பள்ளி ஒரு மிகச் சிறந்த அறிவு ஜீவியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டது.

பள்ளிக்குப் பல ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் எங்கள் சமகால மாணவர்களுக்குக் கிடைத்த ஒரு ஞானப் பொக்கிஷம் பிற்கால மாணவர்களுக்குக் கிடைக்காமல் போனதில் எங்களுக்குச் சற்று வருத்தம் தான்.

'மனதில் நிறைந்த மாமனிதர்கள்' பட்டியல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.......

19.8.07

மனதில் நிறைந்த மாமனிதர்கள் 1

நமது ஆக்கூர் ஓரியண்டலின் வரலாற்று ஏடுகளைச் சற்று புரட்டிப் பார்த்தால் பள்ளியின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட மாமனிதர்கள் நம் மனக் கண் முன்னே காட்சி தருகின்றனர். நம் மனதில் நிறைந்த மாமனிதர்கள் சிலரை அன்புடன் இங்கே நினைவு கூர்கிறோம்.

V.Aமுஹம்மது சாதிக் ஹஜ்ரத்

பெரிய ஹஜ்ரத் என்று மாணவர்களாலும், சாதிக் மௌலானா என்று பெரியோர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்தப் பெருந்தகை ஓரியண்டலின் அரபி ஆசிரியராகவும் அத்துடன் ஆரம்ப கால வரலாற்றில் பள்ளியின் தாளாளராகவும் அதன் பின் சில ஆண்டுகள் விடுதிக் காப்பாளராகவும், பணியாற்றி யிருக்கிறார்கள். மிகவும் கண்டிப்பு நிறைந்த இந்த ஹஜ்ரத் அவர்களைக் கண்டால் பெரும் பெரும் மாணவர்கள் கூட அஞ்சி நடுங்குவார்கள். மாணவர்கள் மீது அதிக அக்கறையும் கவனிப்பும் செலுத்தும் இந்த அரபி ஆசிரியரை மாணவர்கள் மட்டுமின்றி சக ஆசிரியர்களும் கூட மிகவும் மதிப்பார்கள்.

பூர்வீகம் கேரளாவாக இருந்தும் இவர்கள் பேச்சில் சிறிதும் மலையாள வாடை வீசாது. பலருக்கு இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதே தெரியாது. பாகவி உமரி அப்ஸலுல் உலமா என்று பல்வேறு பட்டங்களைப் பெற்ற இவர் அரபி மொழியை அவ்வளவு அழகாகப் போதிப்பார். 1970 களின் துவக்கத்தில் ஓய்வு பெற்று விட்ட பிறகு முதுமையிலும் கூட பல ஆண்டுகள் திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் தம் கல்விச் சேவையைத் தொடர்ந்தார்கள். ஓரியண்டல் வரலாற்றில் மட்டுமல்ல மாணவர்கள் மனதிலும் இவர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு.


V.முருகேசன் சார் (அய்யா)

பொதுவாகவே தமிழாசிரியரைத் தான் எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் அய்யா என்பார்கள். ஆனால் நம் பள்ளியில் மட்டும் இந்த வி எம் சார் அவர்களை அய்யா என்றழைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.

தமிழகத்தில் நம் பள்ளி மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த கால கட்;டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியராக மிக நீண்ட காலம் பொறுப்பு வகித்த இந்தப் பெருந்தகையின் நடையழகே தனி. பள்ளியின் காலைப் பிரார்த்தணைக் கூட்டத்திற்கு தலைமை ஆசிரியரை பள்ளி மாணவர் தலைவர் அழைத்து வரும்போது இவர் நடந்து வரும் கம்பீர நடை வேறு யாருக்கும் வராது. கிட்டத்தட்ட 500 மாணவர்கள் கூடியிருக்கும் கூட்டமும் அப்படியே நிசப்தம்.

கல்வியை முடித்துச் சென்ற மாணவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைந்த பின்னர் மறுபடியும் நம் பள்ளியைக் காண வந்தால் இந்த அய்யாவைக் காணும் போது மட்டும் கூனிக் குறுகி நிற்பார்கள். அந்த அளவுக்கு இவர் மீது மரியாதை மாணவர்களுக்கு எப்போதும் இருக்கும். இது பயத்தினால் ஏற்படும் மரியாதை அல்ல. அந்த கம்பீர தோற்றத்தைக் கண்டு ஏற்படும் மரியாதை.

மிகச் சிறந்த நிர்வாகத் திறன், கண்டிப்பு, ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற இந்தப் பெருந்தகை இப்போது ஓய்வு பெற்று விட்டாலும் பள்ளியின் பொன் விழாக் கொண்டடாத்தின் போது நடை பெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்து கௌரவித்ததை நன்றியுடன் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.


A.R.கலிய பெருமாள் சார்

A.R.K சார் என்று மிகுந்த மரியாதையுடன் எல்லோராலும் அழைக்கப்பட்ட ஏ ஆர் கலிய பெருமாள் சார் அவர்கள் மிக நீண்ட காலம் துணைத் தலைமை ஆசிரியராக இருந்து, அய்யா அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர்.

அய்யாவுக்கு அடுத்து மாணவர்கள் அஞ்சி நடுங்கியது இந்த ஏ ஆர் கே சாருக்குத் தான். 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பாடம் நடத்துவார்கள். ஆங்கில இலக்கணத்தை இவரைப் போல் வேறு யாரும் அவ்வளவு தெளிவாக நடத்த முடியாது. டைரக்ட் இன்டைரக்ட் ஸ்பீச் பாடத்தை இவர் நடத்த ஆரம்பித்தால் ஆங்கில இலக்கணம் இவரிடம் அடிபணிந்து போகும்.

நாங்கள் பயின்ற காலத்தில் ஒரு நாள் கூட இவர் விடுப்பு எடுத்ததாக எவ்வளவு நினைவு படுத்திப் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை. ஒரு நாள் கூட வீண் பேச்சு பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் பாடம் பாடம் பாடம் தான். மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அதன் மூலம் மாணவனும் எதிர் காலத்தில் சிறக்க வேண்டும். பள்ளிக்கும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதில் கண்ணும் இருந்து அதற்காகவே காலமெல்லாம் பாடு பட்டவர்.

சில ஆண்டுகள் தலைமை ஆசிரியராக இருந்து இப்போது ஓய்வு பெற்று விட்டார்கள்.

C. சிவசங்கரன் சார்

தமிழுக்கு அமுதென்று பேர், அந்த அமுதுக்கு சி. எஸ் என்று பேர். பொதுவாகவே மாணவர்கள் கல்வியில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு கோபம் வரும். மாணவர்களின் எதிர் கால நலனைக் கருத்திற் கொண்டால் இதனைக் குறை கூற முடியாது. ஆனால் இந்த முகத்தில் கோபம் என்பதையே நாங்கள் கண்டதில்லை. ஆசிரியர் என்றாலே கையில் பிரம்பு வைத்திருக்கும் காட்சி தான் மாணவர்களின் மனக் கண் முன்னே தோன்றும். ஆனால் கையில் பிரம்புடன் எங்கள் தமிழ் ஆசிரியராகிய இந்த சி.எஸ் சார் அவர்களை நாங்கள் கனவில் கூட கண்டதில்லை.

ஓரிண்டலில் பயின்ற மாணவர்கள் அனைவரையும் அழைத்து பள்ளி வாழ்க்கையில் ஒரு அடி கூட உங்களை அடிக்காத ஆசிரியர் யார்? என்று வாக்கெடுப்பு நடத்தினால் சிந்தாமல் சிதறாமல் ஒட்டு மொத்த வாக்குகளும் அப்படியே எங்கள் தமிழாசிரியர் சி எஸ் சார் அவர்களுக்குத் தான் விழும்.

செந்தமிழின் இலக்கணமும் இலக்கியமும் கற்பித்து எங்கள் சிந்தைக் குளிர வைத்த இந்தச் செந்தமிழ் ஆசான் முனைவர் பட்டம் பெற்றச் செய்தியைச் செய்தித்தாள்களில் படித்த போது எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்தது. தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வுப் பெற்று பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற 'முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி' ஓரியண்டல் வரலாற்றில் ஒரு திருப்பு முணையை ஏற்படுத்தியது எனலாம்.

அந்த விழாவில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. விழாவைத் தொடங்கி வைத்த தலைமை ஆசிரியர் திரு சிவசங்கரன் சார் அவர்கள் தம் உரையை இப்படித் தொடங்கினார்,

'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய இறைவனின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்'
ஆகா! என்ன அற்புதமான வார்த்தைப் பிரயோகம்! இந்த அற்புதமான வார்த்தைப் பிரயோகத்துக்காகவே தமிழ் கூறு நல் உலகு,இவருக்கு இன்னொரு முனைவர் பட்டம் தரலாம்.
சில ஆண்டுகள் ஓரியண்டலின் தலைமை ஆசிரியராக சீரியப் பணி புரிந்த இந்தத் தமிழய்யா இப்போது ஓய்வு பெற்று விட்டார்கள்.

F.அப்துல் ஹமீது ஆமிர் உமரி ஹஜ்ரத்

பெரிய ஹஜ்ரத்(சாதிக் ஹஜ்ரத்) ஓய்வு பெற்ற பிறகு இவர்கள் தான் பெரிய ஹஜ்ரத். ஏகத்துவக் கொள்கையை அப்போதே எங்களுக்கு உணர்த்தியவர் என்றாலும் இன்னும் சற்று உரத்த குரலில் முழங்கி யிருக்கலாமோ?

அரபி மொழியைப் போதிப்பதிலும், ஆணித்தரமாகப் பேசுவதிலும், அடக்கி ஆள்வதிலும் வல்லவர். வார்டன் ஹஜ்ரத் இல்லாத சனிக்கிழமை ஸ்டடி நேரத்தில் அங்கும் இங்கும் அலைந்து சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் அப்துல் ஹமீத் ஹஜ்ரத் வெளிக் கதவைத் திறந்தால் போதும் அவ்வளவு பேரும் கப்சிப்.

மாணவர்களை நல்வழிப்படுத்த சில ஆசிரியர்கள் கடுமையாக நடந்திருக்கலாம்.நம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த நாம் சில சமயம் கடுமையாக நடந்துக் கொள்வதில்லையா? இப்போது நமக்குப் புரிகிறது, ஆனால் அப்போது அதைப் புரிந்துக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கவில்லை.
படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய மாணவர்கள் இவரைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். மற்ற மாணவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பணம்.

ஓரியண்டலில் நீண்ட காலம் சேவை புரிந்த இவர்கள், 1977 ஆம் ஆண்டு இங்கிருந்து விலகி தாம் பயின்ற உமராபாத் அரபிக் கல்லூரிpல் தம் கல்விச் சேவையைத் தொடர்ந்தார்கள். தற்சமயம் தமது சொந்த ஊராகிய குமரி மாவட்டம் கோட்டாரில் ஓய்வெடுக்கிறார்கள்.

M.ராமானுஜம் சார்

தரங்கம்பாடியிலிருந்து வரும் இந்த வானம்பாடி எட்டாம் வகுப்பின் வகுப்பாசிரியராக இருந்தாலும், அனைத்து வகுப்பு மாணவர்களும் அஞ்சி நடுங்குவார்கள். தமிழ்ப்பாடமாகட்டும் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களாகட்டும், சிங்கமென கர்ஜிப்பார்.

இலக்கிய மன்றக் கூட்டங்களில் இவர் பேசும் போது வார்த்தைகள் இவர் வாயில் நர்த்தனமாடும். மிகச் சிறந்த பேச்சாளர், எழில் மிகு எழுத்தாளர், கவின்மிகு கவிஞர், ஆற்றல் மிகு அறிஞர்.

மாவட்ட அளவிலானப் பேச்சுப் போட்டிக்கு முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்களை மிக அருமையாகப் பயிற்சி கொடுத்து அனுப்பி வைத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.
ஓரியண்டலிலிருந்து விலகி பூம்புகார் அருகில் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து தம் கல்விப் பணியைத் தொடர்ந்தார்.

மாமனிதர்கள் பட்டியல் தொடரும் (இறைவன் நாடினால்)

15.8.07

நெஞ்சிருக்கும் வரை

ஆக்கூர் ஓரிண்டலில் கழித்த காலத்தை மலரும் நினைவுகளாக ஒரு முன்னாள் மாணவனாகிய நான் இங்கே அசை போடுகிறேன்.

ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் பயின்ற நண்பர்களின் வாழ்க்கை அதே சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களின் உயர் நிலைப்பள்ளியின் காலகட்டத்திலும் கழிந்திருக்கலாம். ஆனால் அது போல் சுதந்திரமும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்க வில்லை என்பது தான் உண்மை.

அந்தப் பள்ளிக்கூட நாட்களில் அப்படி ஒரு சுதந்திரம் எனக்குக் கிடைக்க வில்லை என்று நான் ஏங்கியிருக்கிறேன். ஆனால் கட்டுப்பாடான அந்த ஆக்கூர் வாழ்க்கை எனக்கு அறிவைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப் பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது. இவையெல்லாம் எனது ஆரம்பப் பள்ளித் தோழர்கள் அனைவருக்கும் கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது.

மார்க்க விஷயங்களில் ஓரளவேனும் ஞானம் பெறுவதற்கு அந்த ஆக்கூர் வாழ்க்கை தான் எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தமிழில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவை ஊட்டியதும், நான் ஒரு எழுத்தாளன் ஆவதற்கு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதும் இந்த ஆக்கூர் வாழ்க்கை தான் என்றால் அது மிகையாகாது.

ஆக்கூரில் பயின்ற 6 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அங்கு பயின்றுக் கொண்டிருந்த காலத்தில் அது ஒரு சிறை வாழ்க்கையாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். மறுபடியும் அந்த வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டோமா? என்று தான் இதயம் ஏங்குகிறது.

மிகவும் கண்டிப்பு நிறைந்த நிர்வாகம், கடுமையான சட்டதிட்டங்கள், மனிதாபிமானம் கொண்ட ஆசிரியர்கள், சிறந்த கல்வி, சிறப்பான நல்லொழுக்கப் பயிற்சி இவற்றின் ஒட்டு மொத்தக் கலவை தான் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி. 'கற்க வாரீர்! சேவை செய்யத் திரும்புவீர்!' என்னும் அற்புதக் கொள்கையைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஓர் அற்புத நிறுவனம்.
ஆக்கூர் ஓரியண்டலைப் பற்றி நினைத்துப் பார்க்கும் மாணவர் எவருக்கும் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் என்றால் சங்கைக் குரிய இக்பால் சார் அவர்கள் தான். மிகச் சில நாட்கள் மட்டுமே இருந்து விட்டுச் சென்ற மாணவனும் நினைவில் வைத்திருக்கும் ஒரு ஆசிரியர் உண்டென்றால் அது இந்த நல்லாசிரியரைத் தான். எங்கள் மீது பரிவும் பாசமும் காட்டிய, நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர் பலர் இருந்தனர். ஒவ்வொருவரைப் பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். ஆனாலும் இக்பால் சார் அவர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் ஓரியண்டல் பள்ளி வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.

ஆக்கூர் வாழ்க்கை அதிகமான நண்பர்களைத் தந்தது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிலிருந்தும் நண்பர்கள் கிடைத்தார்கள். 6 ஆம் வகுப்பு என்னும் வண்டி புறப்படும் போது பயணத்தைத் தொடங்கியவர்கள் 90 பேர். வழி நெடுகிலும் பல ஊர்களில் (வகுப்புகளில்) சிலர் தம் பயணத்தை நிறுத்திக் கொண்டனர். சிலர் புதிதாக வண்டியில் ஏறிக் கொண்டனர். போக வேண்டிய ஊராகிய பள்ளி இறுதி வகுப்பை அடையும் போது முதலில் ஏறிய 90 பேர்களில் வெறும் 16 பேர் மட்டுமே எஞ்சினர். இடையில் ஏறிக் கொண்ட 8 பேரையும் சேர்த்து 24 பேர் மட்டுமே 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினோம். அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தோம்.
மற்றவர்கள் அதாவது மீதமுள்ள 74 பேர் இடைப்பட்ட வருடங்களில் சாப்பாடு சரியில்லை என்றும், அதிகமாக அடி விழுகிறது என்றும், கட்டுப்பாடுகள் அதிகம் என்றும், சுதந்திரம் இல்லை என்றும் பல்வேறு காரணங்களைக் கூறி வெளியேறி விட்டனர். அதிகமான கட்டுப் பாடுகள், கடுமையான தண்டனை ஆகிய காரணங்கள் இருந்தாலும், மாணவர்கள் சீர் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக இவற்றைக் குறை கூற முடியாது. ஆனால் இதையெல்லாம் விட முக்கிய காரணம் உணவு என்பதில் சந்தேகமில்லை.

ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதாது. அங்கு நாங்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டாக வேண்டும். குறை சொல்வது எனது நோக்கமல்ல வெனினும் எனது வாழ்க்கையில் நான் பட்ட பாடுகள், சந்தித்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் எழுத்தில் வடிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுகிறேன்.
பொதுவாக 10 வயது முதல் 20 வயது வரை உள்ள பருவம் தான் நன்றாக சாப்பிடவேண்டிய பருவம். ஆனால் அந்தக் கால கட்டத்தில் 6 ஆண்டுகள் வயிற்றுக்குப் போதுமான உணவோ, சத்துள்ள உணவோ எனக்குக் கிடைக்கவில்லை.

ஆரம்பக் காலத்தில் காலை உணவாகக் கஞ்சி கொடுப்பார்கள். அதுவாவது கொஞ்சம் வயிறு நிரம்பும் அளவுக்கு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கஞ்சியை நிறுத்தி விட்டு பழைய சோறு (நீராகாரம்) கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு அகப்பை சோறும் ஒரு அகப்பை தண்ணீரும் கிடைக்கும். தொட்டுக் கொள்ள பொட்டுக் கடலை சட்னி தருவார்கள்.தட்டில் நீராகாரத்தை வாங்கிக் கொண்டு நடந்தபடியே குடித்துக் கொண்டு போனால், சட்னி கொடுக்கும் இடம் வரும் போது தட்டில் சோறு தீர்ந்து விடும். சட்னியை கையில் வாங்கி, ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல், 'நான் அப்படியே சாப்பிடுவேனே' என்று அப்படியே சாப்பிட்டு விட வேண்டியது தான். 'சட்னி இங்கே சோறு எங்கே?' என்றெல்லாம் கம்யூனிசத் தத்துவம் பேசிக் கொண்டிருக்க முடியாது.

மதிய உணவு சாப்பிடும்போது எந்த மாணவனுக்கும் வீட்டு நினைவு வராமல் இருக்காது. அரை வயிற்றுக்குத் தான் உணவு. 'அரை வயிறு உணவு கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காலி, இது தான் ஆரோக்கியம்' என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதைச் சரியாகக் கடைப் பிடித்தது நாங்கள் தான்.

கட்டி கட்டியாக சோற்றை வெட்டி எடுத்து வைப்பார் எங்கள் சமையல் காரர் கலிய மூர்த்தி. கட்டியை உடைத்துப் பார்த்தால் உள்ளே வேகாத அரிசி இருக்கும். இப்படி ஒரு நூதனமான முறையில் அவரைத் தவிர வேறு யாருக்கும் சமைக்கத் தெரியாது.
உலையில் போடுவதற்கு முன் அரிசியல் கல்லைப் பொறுக்க அவருக்கு நேரம் இருக்காது. சாப்பிடும் போது நாங்கள் தான் சாப்பாட்டில் இருக்கும் கல்லை மிகவும் லாவகமாக நாக்கால் எடுத்து விடுவோம். ஆக்கூர் மாணவர்களுக்கு இந்தக் கலை அத்துப்படி.

வருடம் முழுவதும் பருப்புக் குழம்பு தான். அந்த கலர் தண்ணீருக்கு பருப்புக் குழம்பு என்று நாங்கள் தான் பெயர் வைத்துக் கொண்டோம். விஞ்ஞானப் பாடத்தில் படித்த 'வடித்தெடுத்தல்' முறையை எங்கள் விடுதி பருப்புக் குழம்பில் சோதனை செய்து பார்த்தால் இறுதியில் எதுவும் மிஞ்சாது.

தட்டில் சோற்றை வாங்கிக் கொண்டு அடுத்த கவுண்டருக்குச் சென்றால் அங்கே குழம்பு என்று நாங்கள் பெயர் வைத்த கலர் தண்ணீர் ஊற்றுவார்கள். நமக்கு ஒரு துண்டு உருளைக் கிழங்கு விழாதா? என்று துஆச் செய்துக் கொண்டே தட்டை நீட்டினால், துஆ கபூலானவர்களின் தட்டில் ஒரு துண்டு உருளைக் கிழங்கு வந்து விழும். ஒரு துண்டு உருளைக் கிழங்கு கிடைக்கப் பெற்றவன் பெரிய அதிர்ஷ்டசாலி. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் நடக்க, பின்னால் வருபவர்களுக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.

அது சரி, தொட்டுக் கொள்ள என்ன என்று தானே கேட்கிறீர்கள்? பக்கத்தில் உள்ளவரைத் தான் தொட்டுக் கொள்ள வேண்டும். பொரியல், கூட்டு என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். நாங்கள் பார்த்தது கூடக் கிடையாது. கறி, மீன் என்பதெல்லாம் கனவில் கூடக் கண்டது கிடையாது.

இரவு சாப்பாட்டுக்கு வருடம் முழுவதும் ரசம் தான். எங்கள் விடுதி ரசம் வெள்ளையாக இருக்கும். அது தேங்காய்ப்பால் ரசம் என்று எங்கள் சமையல் காரர் சொல்வார். ஒரு நாள் மாலை நேரத்தில் சோறு சமைக்க அரிசி களையும் போது சமையல்காரர் தன் உதவி ஆளிடம் 'தேங்காய்ப்பால் எடுத்து வைக்க ஒரு பாத்திரம் கொண்டு வா' என்று சொன்ன போது தான், தேங்காய்ப்பால் எதிலிருந்து எடுக்கப்படுகிறது என்னும் உண்மையைப் புரிந்துக் கொண்டோம்.

பல்வேறு சுக துக்கங்களுடன் ஆக்கூர் வாழ்க்கை மெது வாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இடையிடையே மகிழ்ச்சியான நாட்கள் என்றால் ஆக்கூரின் பணக்கார வீடுகளில் நடக்கும் திருமணம் நடக்கும் நாட்கள் தான். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருத்தளிப்பார்கள். மிகப் பிரமாதமான 5 கறிச் சோறு. இன்றும் அதன் ருசி மறக்கவில்லை. வாழ்க அந்தப் பேருள்ளங்கள்.

இறந்தவர்களின் வீடுகளில் குர்ஆன் மௌலூது ஓதக் கூப்பிடுவார்கள். நன்றாக ஓதும் சில மாணவர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும். அந்தப் பட்டியலில் என் பெயர் கண்டிப்பாக இருக்கும். நமக்குத்தான் எல்லா மௌலூதும் அத்துப்படி ஆயிற்றே. வகைவகையான திண்பண்டங்களும் வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். இடையிடையே கிடைக்கும் இது போன்ற விருந்துகள் தான் அந்தப் பாலைவன வாழ்க்கையில் வசந்தமாக வீசும்.

ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான். தினமும் இரவில் பெரியப் பள்ளிவாசலிலிருந்து அனைவருக்கும் நெய்ச்சோறு வந்து விடும். களி போன்ற சோற்றுக்கும் கண்ணீரை வரவழைக்கும் ரசத்துக்கும் 12 நாட்கள் விடுதலை. நபி (ஸல்) அவர்களுக்காக வருடமெல்லாம் மௌலூது ஓத மாட்டார்களா? எனத் தோன்றும். இது மார்க்கத்திலேயே இல்லாத செயல் என்றும் மாபெரும் பாவம் என்றும் அப்போது தெரியாதல்லவா?

ஆறு ஆண்டுக் காலம் உணவுக்காக நாங்கள் பட்ட பாட்டை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இதையெல்லாம் எழுதியிருக்கிறேன தவிற எங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆறு ஆண்டுகள் இலவசமாக சோறு போட்டு வளர்த்த ஒரு நிறுவனத்தைக் குறை கூறுவது எனது நோக்கமல்ல.

ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு உணவளிக்கவே பல பெற்றோர்கள் படாத பாடு படும்போது, கிட்டதட்ட 400க்கும் அதிகமான மாணவர்களுக்கு தினமும் மூன்று வேளை காலமெல்லாம் சோறு போடுவதற்கு அந்த நிர்வாகம் தான் என்ன செய்யும்? அவர்களைச் சொல்லிக் குறற்மில்லை.
இப்போதாவது மதிய உணவை அரசாங்கம் தருகிறது. அப்போது அதுவும் இல்லை. முழுக்க முழுக்க நிர்வாகம் தான் பொறுப்பு. ஒரு நாள் கூட எங்களைப் பட்டினி போடாமல் ஒவ்வொரு வேளையும் உணவளிக்க அதன் நிர்வாகிகள் என்ன பாடுபட்டிருப்பர்கள்!

ஓரியண்டலின் தாளாளர்களாக தன்னலம் கருதாது பாடுபட்ட கண்ணியத்திற்குரிய ஜனாப், ஓஜே முஹம்மது காசிம், மற்றும் சங்கைக்குரிய ஜனாப் அப்துல் ஹமீத் போன்றவர்களின் சேவைக்கு அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுமையில் நற்கூலி தருவானாக என்று அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக துஆச் செய்வார்கள்.

சமுதாயத்தின் பெரும் செல்வந்தர்கள் எவரேனும் இக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் தயவு செய்து இது போன்ற தரமான மார்க்கக் கல்வி ஸ்தாபனங்களுக்கு உங்கள் ஜகாத் ஸதகா போன்ற தருமங்களைச் செய்யுங்கள். ஏழை மாணவர்களின் துஆ எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும்.
'ஆக்கூரில் ஆறு வருடங்கள் பயின்ற மாணவன் உலகின் எந்தத் தீவுக்குப் போனாலும் பிழைத்துக் கொள்வான்' என்று தலைமை ஆசிரியர் முருகேசன் அய்யா அவர்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அதன் பிறகு சென்ற எந்த இடத்திலும் நாங்கள் உணவை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. எங்களை இப்படி ஒரு பக்குவத்துக்கு ஆளாக்கியது ஆக்கூர் வாழ்க்கை.

சாப்பிடுவதற்காக வாழ்பவர்கள் இந்த உணவை காரணம் காட்டி வெளியேறி விட்டனர். வாழ்வதற்காக சாப்பிடும் கொள்கையைக் கொண்டவர்கள் இந்த உணவுப் பிரச்சினையை ஒரு பொருட்டாக நினைக்காமல் தாங்கள் வந்த நோக்கமாகிய கல்வியைக் கற்பதில் கவனம் செலுத்தினார்கள். ஏனெனில் அவ்வளவு தரமாக கல்வி அந்த ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியில் எங்களுக்குக் கிடைத்தது. ஆக்கூரில் கற்று வெளியேறியவர்கள் பெரும் பாலும் நல்ல நிலையியே இருக்கின்றனர் என்பதைப் பிற்காலத்தில் காண நேர்ந்தது.

சமீபத்தில் சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துக் கொள்ள ஆக்கூர் சென்றிருந்தேன். இப்போதைய தாளாளர் சங்கைக்குரிய ஜனாப் அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்களின் நிர்வாகத்தின கீழ் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. முன்னாள் மாணவர்கள் பலர் வந்திருந்தனர். மிகவும் தரமான உணவு. சகல வசதிகளுடன் கூடிய விடுதி. சிறப்பான கவனிப்பு. பல்வேறு புதிய கட்டடங்கள். பள்ளியின் முன்னேற்றத்தைக் கண்டு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

படிக்கும்போது எந்த வகுப்பிலும் தோல்வி என்பதே கிடையாது. முதல் இடத்தைப் பிடிக்க முடியாவிட்டாலும், மூன்று முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விடுவேன். நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பட்டியலில் என் பெயர் இருக்கும்.

'மன்பவுல் பயான் மாணவர் மன்றம்' என்ற பெயரில் இயங்கி வந்த மன்றத்தின் வாரந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவுகளில் நடக்கும். ஒவ்வொரு வாரமும் பேச வேண்டிய மாணவர்களின் பட்டியல் அறிவிப்புப் பலகையில் எழுதி ஒட்டப்படும். பல மாணவர்கள் பெயர் வரும் போது லீவு போட்டு விடுவார்கள். 8 ஆம் வகுப்பு வரை நானும் அப்படித்தான்.
9 ஆம் வகுப்பு படிக்கும் போது, முதல் வாரமே மன்றத் தலைவரிடம் சென்று நானாகவே என் பெயரைப் பதிவு செய்துக் கொண்டேன். 'நபிகள் நாயகம்' என்ற தலைப்பைத் தேர்வு செய்திருந்தேன்.

பேச வேண்டிய நாள் வந்தது. என் பெயர் கூப்பிடப்பட்டது. மேடையில் ஏறினேன். கை கால்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. நாக்கு உலர்ந்து போனது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு என் உரையைத் தொடங்கினேன்.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அவர்களது தாயார் பெயர் ஆமினா. தந்தை பெயர் அப்துல்லா. 25 ஆம் வயதில் திருமணம் செய்தார்கள். 40 ஆம் வயதில் நபிப்பட்டம் பெற்றார்கள். 53 ஆம் வயதில் ஹிஜ்ரத் சென்றார்கள். 63 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்' என்று சொல்லி விட்டு ஓடிப் போய் உட்கார்ந்துக் கொண்டேன்.
எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். ஒவ்வொரு மாணவரும் பேசிய பிறகு தலைவர் விமரிசனம் செய்வது வழக்கம். நான் பேசிய பின்னர் தலைவர் எழுந்தார், அவர் செய்த விமரிசனம் அற்புதமானது. 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பலர் பேச நான் கேட்டிருக்கிறேன், ஆனால் இதைவிடச் சுருக்கமாக வேறு யாரும் பேச முடியாது' விமரிசனத்தைக் கேட்டு எனக்கே சிரிப்பு வந்து விட்டது.நான் முதன் முல் பேசிய இந்த மன்றக் கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் பள்ளப்பட்டி அப்துல்லாஹ் அவர்கள். அப்போது அவர் பள்ளி இறுதியாண்டு மாணவர்.

அன்று முதல் ஒரு வைராக்கியம் பிறந்தது. நானும் ஒரு பேச்சாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாரம் தவறாமல் பெயர் கொடுத்துப் பேசினேன். அதன் பின்னர் 3 ஆண்டுகள் தொடர்ந்து பேசினேன். நான் எப்போது பேசுவேன் என்று சக மாணவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு என் பேச்சின் தரம் உயர்ந்தது. இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் பேசத் தொடங்கினேன். பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றேன்.

பள்ளிக்கூடம் விடுமுறை விடும் போது ஊருக்கு வருவதற்கு ஆக்கூரை விட்டு பஸ் புறப்படும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கனத்த இதயம் இலேசானது போல் தோன்றும். அது போல் விடுமுறை முடிந்து மறுபடியும் ஆக்கூர் திரும்பும் போது பஸ் ஆக்கூரை நெருங்க நெருங்க உலகத்து வேதனையும் ஒன்றாக மனதில் வந்து சேரும். இது வெல்லாம் அங்கு படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தான்.

ஆக்கூரில் நாங்கள் கற்ற கல்வியால் அளப்பெரும் நன்மைகளை பிற்காலத்தில் அடையப் பெற்றோம். உயர் கல்வி கற்க அடுத்தடுத்து பல்வேறு கல்வி நிலையங்களுக்கு நாங்கள் சென்ற போது, மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களை விட உயர்ந்த அந்தஸ்தில் மதிக்கப்பட்டோம்.ஆக்கூர் ஓரியண்டலில் கற்ற கல்வியின் மகிமையை அப்போது தான் நாங்கள் புரிந்துக் கொண்டோம். நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் எங்களுக்கு மறந்து போயின.

உலகக் கல்வியையும், மார்க்கக் கல்வியையும் ஒரு சேரப் பயிலும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது போல் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. 11 ஆம் வகுப்பை முடித்து நாங்கள் வெளியேறிய போது கிட்டத்தட்ட அரபிக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற ஒரு மௌலவியின் தரத்தில் பாதியாவது ஆக்கூர் மாணவர்களாகிய எங்களிடம் இருந்தது என்று சொல்லலாம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்த நாங்கள், ஒருவருக் கொருவர் உறுதுணையாய், உற்ற நண்பர்களாய், அண்ணன் தம்பிகளாய், காலம் கழித்தோம். நட்பின் உண்மையான பொருள் புரிந்து நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இந்த வயதில் தானே வரும்.

எத்தனையோ நண்பர்களுடன் பழகும் வாய்;ப்பு கிடைத்தது. அந்த நண்பர்கள் அனைவரைப் பற்றியும் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. பள்ளி வாழ்க்கை முடிந்த பின்னர் அவரவரும் தம் எதிர் காலக் கனவுகளுடன் வாழ்க்கை எனும் வானத்தில் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டனர்.

சிலர் மனதில் நின்றனர். சிலர் மறந்து போயினர். சிலரைப் பார்த்தால் ஞாபகம் வரும், சிலரின் பெயர்கள் மட்டும் நினைவில் நின்றன, நிகழ்வுகள் மறந்து போயின. பிரிந்து சென்று 30 ஆண்டுகள் ஆனபின்பும் இன்றளவும் தொடர்;ந்து தொடர்பு வைத்திருக்கும் அற்புத நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

என் வாழ்க்கையில் முதன் முதல் நட்பு என்ற வார்த்தைக்குப் பொருள் சொன்ன வித்தகன், எவ்வளவோ முயன்றும் இன்றளவும் என்னால் மறக்க முடியாத மனிதன்,என்றென்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஏற்காட்டுச் செம்மல்S.N.K என்று நான் அன்புடன் அழைக்கும் காஜா மைதீன்,வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்கை நீண்ட காலக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்த, தற்சமயம் பிரான்ஸில் குடும்பத்துடன் வசிக்கும் கோட்டைக்குப்பம் நூஹ், மறக்காமல் அடிக்கடி கடிதம் எழுதும் சேலம் உஸ்மான், ஜமால் முஹம்மது கல்லூரில் பெருமைப் படத்தக்க விதத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் நல்லொழுக்கத்திற்குப் பேர் போன முஹ்யித்தீன் அப்துல் காதர், எழுத்துத் துறையில் எனக்கு ஆர்;வமூட்டிய கோட்டைக்குப்பம் S.அக்பர் அலி, இன்றளவும் என் மீது உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும் திண்டுக்கல் சுகர்னோ என்றழைக்கப்படும் ஷாஹுல் ஹமீத், குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொண்டு விட்ட அப்துல் ஹாதி, உயர்ந்த நிலையை அடைந்தும் உள்ளத்தால் மறக்காத முத்துப் பேட்டை ஷாஹ-{ல் ஹமீத், மாபெரும் தொழில் அதிபராக வளர்;ந்த பின்னும் நட்பை மறக்காத திருமுல்லைவாசல் அலி ஹுஸைன் இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

ஏகப்பட்ட சோகங்களுடனும் இடையிடையே சில சந்தோஷங் களுடனும் ஒருவாராகப் பள்ளி இறுதி வகுப்பாகிய 11 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாகிவிட்டது. இது தான் இறுதி ஆண்டு எங்கள் படிப்புக்கும் சரி நாங்கள் பட்;ட சிரமங்களுக்கும் சரி. அதிலும் அரசாங்கப் பொதுத் தேர்வல்லவா? வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் அனைவரும் பாடம் மட்டும் எடுக்க வில்லை. எங்களைப் பிழிந்தும் எடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது எங்கள் நன்மைக்குத் தானே என்று இப்போது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அப்போது எங்களுக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு பாட நேரமும் மாற மாற வெவ்வேறு ஆசிரியர்கள் வருவார்கள். வருபவர்கள் அனைவருமே ஒருவருக் கொருவர் சளைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும்.

தமிழ் ஆசிரியர் வரும் போது மட்டும் கொஞ்சம் எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வோம். அந்த வருடம் எங்கள் தமிழாசிரியர் சிவசங்கரன் அய்யா அவர்கள் டாக்டர் பட்டம் பெற சென்று விட்டதால் புதிதாக ஆபிரகாம் லிங்கன் அய்யா அவர்கள் வந்தார்கள். என்னமோ தெரிய வில்லை தமிழாசிரியர் அனைவருமே மென்மையாகத் தான் இருப்பார்களோ! இவரும் எங்களை அன்புடன் நடத்தினார். தமிழ் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகள் அனைத்தும் போர்க்களத்தைத் தான் நினைவு படுத்தும்.

அந்த ஒரு வருடம் நாங்கள் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் பொதுத் தேர்வு வரும் வரை நாங்கள் நிம்மதியாக உண்டதும் இல்லை, உறங்கியதும் இல்லை. இரவும் பகலும் படித்தோம். எதிர் காலத்தை நினைத்துப் படித்தோம். எங்களைக் கசக்கிப் பிழிந்த ஆசிரியர்கள் மீது எங்களுக்கு கோபம் வரவில்லை. நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்று எங்கள் எதிர் காலம் சிறப்பாக அமைய எல்லா வகையிலும் பாடுபட்ட அந்த ஆசான்களை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

ஒரு வழியாக பொதுத் தேர்வு எழுதி முடித்து நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம். நாங்கள் பட்ட சிரமங்களிலிருந்தும், ஆறு ஆண்டுக் காலம் உடலாலும் உள்ளத்தாலும் நாங்கள் பட்ட வேதனை களிலிருந்தும், விடுதலைக் கிடைத்து விட்டது. அன்றைய தினம் நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போல் ஒரு மகிழ்ச்சியை அது வரை எங்கள் வாழ் நாளில் நாங்கள் அனுபவித்ததே கிடையாது.
சிரமங்களிலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சி ஒரு புறம் என்றால் நண்பர்கள் அனைவரும் பிரியப் போகிறோம் என்னும் வேதனை மறுபுறம். ஆறு ஆண்டுக் காலம் ஒன்றாக உண்டோம், உறங்கினோம், கூடிக் களித்தோம், சுக துக்கங்களைப் பகிர்ந்துக் கொண்டோம், இன்று இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகிறோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே
பறந்து செல்கின்றோம்- நாமே பிரிந்து செல்கின்றோம்
இவை எங்களுக்காகவே எழுதப்பட்ட வரிகளோ!

பிரியா விடை பெற்றோம். ஒருவரையொருவர் ஆரத்தழுவியபடி அழுதோம். அவ்வப்போது ஏற்பட்ட மனக்கசப்புகளுக்காக மன்னிப்புக் கேட்டோம். மாலைக் கதிரவன் மறைந்துக் கொண்டிருக்கிறான். எவரும் புறப்பட்டதாகத் தெரியவில்லை. எங்களுக்கு அறிவமுதூட்டிய அன்னையைப் போன்ற எங்கள் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியை விட்டு, நாங்கள் ஓடி விளையாடிய திடலை விட்டு, உட்கார்ந்து படித்த இடத்தை விட்டு, உறங்கிய அறையை விட்டு, தொழுத பள்ளியை விட்டு, பேசப்பழகிய மாணவர் மன்றத்தை விட்டு, அறிவுக் குருடர்களாக வந்த எங்களின் அகக் கண்களைத் திறந்து வைத்த ஆசிரியப் பெருந்தகைகளை விட்டு, ஆயிரமாயிரம் கனவுகளுடன் இதோ புறப்பட்டு விட்டோம்.

அபுல் கலாம் ஆஸாத் கிராமம்
ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி
ஆக்கூர்


என்னும் கண்ணைப் பறிக்கும் அழகிய தோரண வாயில் வளைவு எங்கள் கண்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. ஆனால் இந்த வாழ்க்கை மட்டும் எங்கள் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.

பின் குறிப்பு:
1976 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது தேர்வு எழுதிய அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சி பெற்று எங்கள் பள்ளிக் கூடம் அதற்கு முந்திய 1975 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைத் தக்கவைத்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தோம். அல்ஹம்து லில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
----------------------------------

ஆக்கூர் ஓரியண்டலில் பயின்ற ஒரு முன்னாள் மாணவனின் மலரும் நினைவுகள் இவை. நீங்களும் ஓரியண்டல் வாழ்க்கை குறித்த உங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் அருமையான ஆக்கங்களை 'மலரும் நினைவுகள்' என்று தலைப்பிட்டு சாருகேசி அல்லது யுனிகோடில் தட்டச்சு செய்து எமக்கு அனுப்பி வையுங்கள். இந்த வலைப்பதிவில் வெளியிடக் காத்திருக்கிறோம்.
உங்கள் பெயர், ஊர், படித்த ஆண்டு ஆகியவற்றையும் அத்துடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட மறக்க வேண்டாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
masdooka@hotmail.com

6.8.07

முதன் முதல்....

இந்த வலைப்பதிவு உருவாக்கப்பட்டு இது பற்றிய அறிவிப்பை தெரியப்படுத்தியதும் அன்றைய தினமே முதன் முதல் இப்பதிவைப் பர்வையிட்டு வாழ்த்தி துஆச் செய்த நெஞ்சம்.......
அப்துல் காலிக் இளங்கா குறிச்சி (தம்மாம்)
செல் : 0569150570 மின்னஞ்சல் khaliq@guardianind.com
---------------------------------
இந்தப்பதிவு உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் ஒன்றாக நாம் குறிப்பிட்டிருந்த 'ஓரியண்டல் நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவுதல்' என்பதை கவனத்திற் கொண்டு ரியாதில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கும் செய்தியை உடனடியாகத் தொடர்பு கொண்டு தெரியப் படுத்திய நெஞ்சம்....

உபைதுர் ரஹ்மான் பள்ளப்பட்டி (ரியாத்)
செல் 0564382984 மின்னஞ்சல் urahman@savola.com
------------------------------------
இந்த வலைப்பதிவில் உங்கள் பெயரும் இடம் பெற தொடர்பு கொள்ளுங்கள் என்னும் அறிவிப்பைக் கண்டு பொறுப்பு எடுத்து தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்ட நெஞ்சங்கள்......தாயகத்திலிருந்து

அப்துல்லாஹ் பள்ளப்பட்டி
சதகத்துல்லாஹ் பள்ளப்பட்டி செல்: 9842127867
சிப்கத்துல்லாஹ் பள்ளப்பட்டி செல: 9842327862
மின்னஞ்சல் pondy@genesisbasics.com
-------------------------------
பொன் விழா நிகழ்ச்சிகளை நேரில் கண்டு வந்து விழா நகழ்ச்சிகளைப் புகழ்ந்துரைத்தவர்
மெளலவி சம்சுத்தீன் ஜமாலி (ஆயங்குடி) அல் கர்ஜ்
போன் 01 5480697 செல் 0504698151
---------------------------------- தொடரும்

.