Showing posts with label மேற்கல்வி. Show all posts
Showing posts with label மேற்கல்வி. Show all posts

12.1.10

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

நாமும் கலெக்டராவோம் (IAS) கமிஷ்னராவோம் (IPS)
- வெரும் 70 ரூபாய் செலவில் தயாராகுங்கள் பட்டதாரிகளே !!!








இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான நுழைவு தேர்வு (IAS, IPS, IFS etc…) விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முதல் நிலை தேர்விற்க்கான விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுவிலும் தேர்சி பெற்று நேர்முக தேர்வுவில் தேர்வு பெற்றால் 24 உயர் பதவியியில் ஒன்றை பெறலாம். இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசு பதவிக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெருவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும் (கலெக்டர்), காவல் துறை ஆணையராகவும் (கமிஷ்னர்) முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான், பெண்களுக்கு ரூ.20 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும், குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாதது (அல்லது மிக குறைவாக இருப்பது) மிக முக்கிய காரணங்களில் . சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் நாம் IPS, IAS -இல் தேர்வாகி காவல் துறை ஆனையாளராகவும், மாவட்ட கலெக்டராகவும் ஆனால் மட்டுமே நமது சமுதாயத்திற்க்கு பதுகாப்பு அளிக்க முடியும். சமுதாய முன்னேறத்திற்க்கும் பாதுகாப்பிற்க்கும் அரசியல் தீர்வல்ல, படித்து இது போன்ற பதிவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அரசியல் மாயை காட்டி உங்களின் உழைப்பில் பதவி சுகம், பணம் அடையதுடிப்பவர்களை தூக்கி எறியுங்கள், நேரத்தை வீணாக்காமல் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.
இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பாட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வருங்கள் என உங்களை மாணவர் அணி அன்புடன் அழைகின்றது.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்க்கு மற்றும் ஓர் காரணம் , இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் (ன்று தங்களை சொல்லிகொள்பவர்கள்). இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய பட்டதாரிகளின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC ( IAS,IPS,IFS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுறித்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


தங்கள் பிள்ளைகளை இலச்ச கணக்கில் பணத்தை கட்டி படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் 70 ரூபாயில் எழுதப்படும் இந்த தேர்வை எழுத தங்கள் பிள்ளைகளை தூண்டுவதில்லை. இதில் நாம் பெற்றோர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பொதுவாகவே நமது சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிவதில்லை, மேலும் வழிகாட்ட யாரும் முன் வருவதில்லை, அல்லது அவர்களின் வழிகாட்டல் மிக குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே உள்ளது (இப்போது உங்களுக்கு வழிகாட்ட நமது மாணவர் அணி தயாராக உள்ளது). இது வரை முஸ்லீம் இயக்கங்களை நடத்திய தலைவர்கள் இதில் அக்கரை காட்டாமல் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் அரசியலை பிடித்துக்கொண்டு முஸ்லீம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அரசியலைவிட கல்வி முன்னேற்றம் தான் ஒரு சமூகத்திற்க்கு பாதுகாப்பையும், சுகாதாரத்தையும், சுய சிந்தனையும் கொடுக்கும். அரசியல்வதிகள் ஐந்து வருததில் மாறிவிடுவார்கள் ஆனால் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) போன்றவர்கள் பல வருடங்கள் பணியாற்றி சமுதாயத்திற்க்கு பாதுகாப்பும் முன்னேற்றமும் வழங்க முடியும். எனவே தான் நமது மாணவர் அணி கல்வி முன்னேற்றத்தை கையில் எடுத்து இதுவரை யாரும் செய்திராத கல்வி வளர்ச்சி பணியை தமிழகத்தின் மூளை முடுக்கெள்ளாம் செய்து வருகின்றது.


IAS, IPS நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு UPSC தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.





ஆக்கம் :
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி








11.12.08

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

நம் சமுதாய மாணவர்கள் சமீப காலமாக உயர் கல்வி கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அவ்விதம் உயர் கல்வி கற்பதில் எந்த வகையான உயர் கல்வியைத் தேந்தெடுக்கலாம் என்பதற்கு போதுமான வழிகாட்டுதல் கிடைக்காமல் பல மாணவர்களும், பெற்றோரும் தவிக்கின்றனர். அத்தகையவர்களுக்கு இந்த நூல் அழகான வழியைக் காட்டுகிறது. வாசகர்கள் படித்துப் பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யும்படி வேண்டுகிறோம்.
நூலாசிரியர் இளையான்குடி டாகடர் ஜாகிர் உசேன் கல்லூரி பேராசிரியர் ஆபிதீன் அவர்களுக்கும், வெளியிட்ட Nellai Eruvadi Educational Association(NEEA)க்கும் நன்றி. நூலைப் படிக்க கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்

19.10.08

கல்விச்சேவை தகவல்கள்!


கல்விச் சேவை பற்றிய சில தகவல்களையும் அவற்றை அளிக்கும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்! - சத்தியமார்க்கம்.காம்

நான்கு ஆண்டு பி.பி.ஏ.,
நான்கு ஆண்டு பி.பி.ஏ., டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படிப்பை ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி நடத்துகிறது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனத் துடன் இணைந்து நடத்தும் இந்தப் படிப்புக்கு, ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது!
மேலும் விவரங்களுக்கு: www.nithm.ac.in
ஐ.ஓ.சி., ஸ்காலர்ஷிப்
விளையாட்டு வீரர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குகிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஜூனியர் லெவல் விளையாட்டு வீரர்கள், அத்லெட்டிக்ஸ், டென்னிஸ், கேரம், ஹாக்கி, கோல்ஃப், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போட்டிகளில் விளையாடுபவர்களும் இந்த உதவித் தொகை பெற விரும்பினால், வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., இன்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்கள் 450 பேருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவிருக்கிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!
மேலும் விவரங்களுக்கு: www.iocl.com

ஐ.ஐ.டி-யில் எம்.பி.ஏ.,
மும்பை, டெல்லி, கான்பூர், கோரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.டி-க்களில் மேலாண்மைப் படிப்புகள் படிக்க தனியே நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் (Joint Management Entrance Test). கான்பூர் ஐ.ஐ.டி நடத்தும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், அக்டோபர் 17-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். டிசம்பர் 14-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்!
மேலும் விவரங்களுக்கு: http://www.iitk.ac.in/gate

தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட்.,
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைநெறிக் கல்வி இயக்ககம் நடத்தும் பி.எட்., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு, அக்டோபர் 18-ம் தேதி நடைபெறஇருக்கிறது. இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீயரிங்
நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீ யரிங் துறையில் போஸ்ட் டிப்ளமோ படிப்பில் சேரலாம். ஓராண்டுப் படிப்பு இது. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் படிப்புகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றமாணவர் கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 27. விண்ணப் பங்களை செப்டம்பர் 22-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.nptisr.com

சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சென்னை அண்ணா நகரில் உள்ள 'அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்' பயிற்சி அளிக்கிறது. வருகிற டிசம்பர் முதல் 6 மாதங்களுக்குப் பயிற்சி. முழு நேரப் பயிற்சி அல்லது பகுதி நேரப் பயிற்சி என வசதிக்கேற்ற பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். முழு நேரப் பயிற்சிக்கு 200 மாணவர்களும் பகுதி நேரப் பயிற்சிக்கு 100 மாணவர்களுக்கும் அனுமதி. முழு நேரப் பயிற்சி மாணவர்களுக்கு விடுதி வசதி உண்டு. அனுமதிக்கு நுழைவுத் தேர்வு உண்டு. நவம்பர் 9-ம் தேதி நுழைவுத் தேர்வில் பங்கேற்க, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கிடைக் கும்படி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.civilservicecoaching.com
பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை!
பேங்க் ஆஃப் பரோடாவில் ஆயிரம் கிளார்க் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறைந்தபட்சக் கல்வித் தகுதி பிளஸ் டூ என்றாலும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 6-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வு நவம்பர் 30-ம் தேதி!
மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.com
டெக்னிக்கல் ரைட்டிங் பயிற்சி
விளக்கக் கையேடுகள், பதிவேடுகள், பயனாளிகளுக்கான குறிப்புகள் போன்றவற்றை ஓர் இலக்கண வரையறையுடன் எழுதுவதுதான் டெக்னிக்கல் ரைட்டிங் அண்ட் டாகுமென்ட்டேஷன். இணையத்திலும் இந்தப் பணிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. டெக்னிக்கல் ரைட்டிங் அண்ட் டாகுமென்ட்டேஷன் குறித்த ஒரு மாதப் பயிற்சியை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.பி.டி.இ. மையம் வழங்குகிறது. எம்பெட்டட் சிஸ்டம் டிசைன் குறித்த மூன்று மாத குறுகிய காலப் பயிற்சியையும் இந்த மையம் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: 99400 18051, 04422201777
அட்வர்டைசிங்!
அகமதாபாத் முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் நிறுவனம் ஹூயூக்ஸ்நெட் குளோபல் எஜுகேஷன் நிறுவனத்துடன் இணைந்து அட்வர்டைசிங் அண்ட் பப்ளிக் ரிலேஷன் முதுநிலை சான்றிதழ் படிப்பைத் தொடங்கியுள்ளது. இந்த ஓராண்டுப் படிப்புக்குக் கட்டணம் ரூ.68,500. பட்டப் படிப்பை முடித்த மாணவர் களும் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களும் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.hnge.in
ரீ-டெய்ல் மேனேஜ்மென்ட் பல்கலைக்கழகம்
18 லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் சில்லறை வர்த்தகத் துறையில் தகுதி வாய்ந்த திறனாளர்களை உருவாக்குவதற்காக புனே அருகே புதிதாக நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உருவாகிறது. ரீடெய்ல் மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளை நடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணியில் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமுதாய வானொலிப் படிப்பு!
சமுதாய வானொலி குறித்த சான்றிதழ் படிப்பை வரும் ஜனவரி முதல் தொடங்கப்போவதாக இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ப்ளஸ் டூ முடித்த மாணவர்களும், சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம்!
கலைத்திறன் படைத்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை!
இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், கைவினைத் திறன் உள்பட கலைத் திறன் படைத்த 10 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கல்ச்சுரல் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 500 மாணவர்களுக்குத் தலா ரூ.3,600 வீதம் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிசம்பர் 31-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள சென்டர் ஃபார் கல்ச்சுரல் ரிசோசர்ஸ் அண்ட் டிரெயினிங் அமைப்புக்குக் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்!
மேலும் விவரங்களுக்கு: www.ccrtindia.gov.in
என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட்!
என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட் என்ற புதிய சான்றிதழ் படிப்பை இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. அமைப் பின் ஒத்துழைப்புடன் இந்தப் படிப்பு தொடங்கப் பட்டுள்ளது. ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் இப் படிப்பில் சேரலாம். பத்தாம் வகுப்பு படித்து மூன்று ஆண்டு தொண்டு நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர்களும் சேரலாம். விண்ணப்பம் அனுப்பக் கடைசித் தேதி அக்டோபர் 31.
ஆக்ஸ்போர்டு பல்கலையில் தற்கால இந்தியா!
இந்தியக் கலாசாரத்துக்கு இன்னொரு பெருமை. இந்தியாவைப் பற்றியும் அதன் கலாசார, பொருளாதார அம்சங்களைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்காக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தற்கால இந்தியா பற்றிய எம்.எஸ்ஸி., படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் முக்கியப் பொருளாதாரச் சக்தியாக உருவாகி வரும் இந்தியா பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அடுத்து இப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது!
டெல்லியில் லா ஸ்கூல்!
சட்டக் கல்லூரிகள் இருந்தாலும்கூட, அதைவிட லா ஸ்கூல்களில் படிக்கும் மாணவர் களுக்கு நல்ல வேலை கிடைத்துவிடுகிறது. டெல்லியிலும் நேஷனல் லா ஸ்கூல் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக் கட்டணம் ரூ.1.25 லட்சம் (இரண்டு செமஸ்டர் களுக்கு)!
வேலூர் சி.எம்.சி-யில் மருத்துவப் படிப்பு!
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.டி., எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு வருகிற டிசம்பர் 13-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப் படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
மாணவர்களுக்குக் கூடுதல் நேரம்!
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின் போது வினாத்தாள்களைப் படித்துப் புரிந்து கொள்வதற்காக ஏற்கெனவே 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது விடைத்தாளில் பதிவு எண்களைப் பூர்த்தி செய்வது உள்ளிட்டவற்றைப் பதற்றமில்லாமல் மாணவர்கள் செய்வதற்கு வசதியாக மேலும் 5 நிமிடங்கள் வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான ஆய்வுக் குழு அறிக்கையைப் பொறுத்து, இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்!

அஞ்சல் வழி மேற்படிப்பு:

அஞ்சல் வழி மேற்படிப்புகளுக்காக இந்திய அரசு ஒரு நடுவண் மையத்தை ஏற்படுத்தியுள்ளது.. அதன் பெயர் Distance Education Council (DEC). இந்த அமைப்பு அஞ்சல் வழி கல்வியை முறைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் வலையேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் வலைமனை www.dec.ac.in இந்தியாவில் Distance Education தற்போது மிக பலம் பெற்ற வகையில் வளர்ந்து வருகிறது. முதலாவது, Online Education Introduction - இது இன்னும் கருத்து நிலையிலே இருக்கிறது. இரண்டாவது, Convergence System - கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மற்றுமொரு பட்டப்படிப்பை படிக்க அனுமதி.. இவ்வளவு நாட்கள் அதை செய்திருந்தால் அது அனுமதிக்கப் பட்டதல்ல.. மூன்றாவது, அத்தனை பட்டப் படிப்புகளையும் முறையான வகையில், குறிப்பிட்ட தரத்துடன், தேவைக்கேற்ற நேரத்தில் படிக்க முடிகிறது. மேலதிக விபரங்கள் www.ignou.ac.in

தொகுத்தவர்கள்: எம். ரிஷான் ஷரீஃப் மற்றும் ஏ. அஹமத் ஜுபைர்
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

14.10.08

சுவீடனில் இலவசமாகப் படிக்கலாம் வாங்க

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் 'மாற்று' ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.
அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில் படிப்பு இலவசமாகத் தரப்படுகிறது என சொன்னபொழுது , எனக்குள் நீண்ட நாட்களாக மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கிடைத்தது. மனிதனின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்றான கூகிளில் தேட ஆரம்பித்தேன்.ஸ்கேண்டிநேவியா நாடுகள் என்பது டென்மார்க்,சுவீடன்,நார்வே,பின்லேந்து மற்றும் ஐஸ்லேந்து.
டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாலும், பின்லாந்து பல்கலைக் கழகங்கள் 75% மதிப்பெண் எதிர்பார்த்ததாலும் , நார்வே, ஐஸ்லேந்து குளிர் பிரதேசங்களாக இருப்பதாலும் எஞ்சிய சுவீடன் பற்றி தேட ஆரம்பித்தேன்.தேடலில் மிக மிக மிக அத்தியாவசியமான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவல் தரப்பட்டிருந்தது.
இந்தியாவில் தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புபடித்திருப்பவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக எனது மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்ததற்கு இந்த மொழித்தேர்வும் ஒரு காரணம். ஆகையால், மக்களே சுவீடனில் மேற்படிப்பு படிக்க IELTS/TOEFL போன்ற ஆங்கில மொழித்தேர்வுகள் எழுதத்தேவை இல்லை. இது பி.எஸ்.சி படித்திருப்பவர்களுக்கும் பொருந்தும். இந்த விபரத்துக்கான சுட்டியைப்படிக்க இங்கே சுட்டவும்.
ஐரோப்பாவில் அமைதியான நாடுகளில் ஒன்று என பொதுவாக அறியப்படும் சுவீடனில் படிப்புக்க்கட்டணம் கிடையாது. மொத்த படிப்புக்கான செலவும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அது எல்லா நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும்.
சுவீடனில் மொத்தம் 48 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசாங்கமே நடத்துபவை. இவற்றின் கல்வித்தரம் அனைத்திலும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறைய மக்களால் அறியப்படும் பல்கலைகழகங்களின் பெயர்கள், ராயல் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி(KTH, உப்பசாலா, கோதன்பர்க், சால்மர்ஸ், லுந்த் மற்றும் பிலெக்கிஞ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி ஆகியன.)(BTH- Blekinge Institute of Technology கல்லூரியில் தான் நான் Software Engineering படிக்கிறேன். BTH மென்பொருள் துறைக்காகவே அப்போது மிகவும் பின் தங்கி இருந்த பிலெக்கிஞ்ச் மாகாணத்தில் ரோன்னிபே,கார்ல்ஸ்க்ரோனா,கார்ல்ஷாம் ஆகிய மூன்று நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.)
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் நேரிடையாக அனைத்து பொறியியற் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பிக்கும் முறை வைத்திருப்பது போல, சுவீடனில் படிக்க Studera என்ற மையப்படுத்தப்பட்ட முறையின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அதற்கான இணையத்தளம் www.studera.nu
ஆங்கிலத்தில் இணையதளத்தைப்பார்க்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும். ஸ்டூடரா தளத்தில் உங்களுக்கான கணக்கைத் துவக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கான 4 விருப்பத்தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம்.(போன வருடம் 8 விருப்பத்தேர்வுகளை வைத்திருந்தார்கள். இந்த வருடம் 4 ஆக குறைத்துவிட்டார்கள்.)
இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்துவிட்டு , நமது சான்றிதழ்களை நோட்டரி பப்லிக் கையொப்பம் பெற்று சுவீடனுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
சுவீடன் பல்கலைகழகங்களில் வருடத்தில் ஜனவரியிலும் செப்டம்பரிலும் என இரண்டு முறை சேர்க்கை முறை இருக்கும். அடுத்த 2009 செப்டம்பர் சேர்க்கைக்கு 2009 பிப்ரவரி இரண்டாவது வாரம் கடைசியாக இருக்கும்.செப்டம்பரில் வருபவர்களுக்கு மே மாத இறுதியில் சேர்க்கை நிலவரம் அறிவிக்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் விசா விற்கு விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கிடைத்து விசா கிடைத்தவுடன் சுவீடனுக்கு பறக்க ஆரம்பிக்கலாம்.ஆகையால் அடுத்த செப்டம்பரில் இங்கு வர நினைப்பவர்கள் இப்பொழுதே பல்கலைக்கழகங்களைத் தங்களது விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற படி விபரங்களைத் தேட ஆரம்பியுங்கள்.
படிக்கும் காலங்களில் சிக்கனமாக இருந்தால், இரண்டு வருட மேற்படிப்பை 3 லட்சரூபாய்க்கும் குறைவாகவே முடித்துவிடலாம். இருந்த போதிலும் விசா பெறுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நம் வங்கிக் கணக்கில் காட்டவேண்டும். பெரும்பலான மக்கள் குறுகிய கால கடனாக நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி விசா பெறும் வரை கணக்கில் வைத்துவிட்டு பிறகு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.
பகுதி நேர வேலை என்பது சுவீடனைப் பொருத்த மட்டிலும் கொஞ்சம் கடினமே என்றாலும் சிறிய அளவிலான வேலைகள் கிடைக்கின்றன. வேலை அதிக அளவில் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் சுவீடீஷ் மொழி . சுவிடீஷ் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கு இங்கு எளிதாக வேலைக் கிடைக்கும்.
கல்விக்கட்டணம் இல்லை என்பதால், ஸ்காலர்ஷிப் கள் அதிக அளவில் கிடையாது. இருந்தபோதிலும் இந்த சுட்டியில் நீங்கள் சில ஸ்காலர்ஷிப் முறைகளைப்பார்க்கலாம்.
மேற்படிப்பு படிக்க அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருகின்றனர். 7.5 லட்சம் வரை பெற்றோர் மற்றும் Guarantor உறுதிமொழியுடன் தருகிறார்கள். 4 லட்சம் வரை பெற பெற்றோர் கையொப்பம் மட்டும் போதுமானது. 7.5 லட்சத்துக்கும் அதிகம் பெற சொத்து பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். சுவீடனைப்பொறுத்தமட்டில் 4 அல்லது 7.5 லட்சம் வகையில் கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்.
இந்தப்பதிவின் அதிமுக்கிய நோக்கம், 2010 ஆம் ஆண்டில் இருந்து சுவீடனும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இன்னும் அரசாங்க ஆணை ஏதும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனினும் மிகவிரைவில் செயற்படுத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மேற்படிப்பு படிக்க வருபவர்கள் 30 ECTS அதாவது நான்கு பாடங்கள் முடித்துவிட்டால் 48 மாதங்களுக்கு வேலைக்கான விசாவும்/தற்காலிக தங்கும் குடியுரிமையும் (Residence permit) உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி இந்த வருடம் டிசம்பர் 15 லிருந்து செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்து, ஆங்கிலப்புலமை குறைவு என்பதினாலோ அல்லது அதிகக் கட்டணம் கட்டவேண்டும் என்றோ இது நாள் வரை தவிர்த்து வந்தவர்களுக்கு சுவீடனில் படிக்கும் வாய்ப்பு ஒரு அரிய வரப்பிரசாதம்.
முக்கியமான விசயம், சுவீடனைப்பொருத்தமட்டில் எல்லாம் ஸ்டூடரா இணையத்தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர எனது கல்லூரி BTH போன்றவை நேரடியாகவும் அவர்களின் கல்லூரித்தளங்களில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
சுவீடனை பொருத்தமட்டில் நேரடியாக செய்ய வாய்ப்பு இருப்பதால் எந்த 'மேற்படிப்பு படிக்க உதவும் ஏஜென்சிகளையும் அணுக வேண்டாம். எந்த ஏஜென்சிக்கும் ஏனைய மேற்கத்திய கல்லூரிகளைப்போல சுவீடன் கல்லூரிகளால் உரிமம் கொடுக்க்கப்படவில்லை. ஏஜென்சிகளை அணுகினாலும் அவர்களும் இந்த ஸ்டூடரா வழியாகத்தான் விண்ணப்பிப்பார்கள். வீணாக 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கன்சல்டன்சி கட்டணம அழ வேண்டாம்.
சுவீடனில் மேலும் நிறைய தமிழ்க் குரல்களைக் கேட்க விருப்பம். மேற்படிப்பு படிக்க விரும்பும் தமிழ் நண்பர்களே வாருங்கள், சுவீடன் உங்களை வரவேற்கிறது.
அதி முக்கிய இணையத்தளங்கள்:
-----------------------------------
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

15.8.08

பெற்றோர்களே சுயநிதிக் கல்லூரிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்...


இன்று பிளஸ் டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர்களிடையே என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்கிற கவலை ஏராளமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த கவலை ஒட்டிக் கொண்டு விட்டது. மருத்துவம் படிக்கலாமா? பொறியியல் படிக்கலாமா? வேளாண்மை படிக்கலாமா? அல்லது சமையல் கலையைப் படிக்கலாமா? எதைப் படித்தால் கை நிறையச் சம்பாதிக்கலாம்? எதைப் படித்தால் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லலாம்? என்று அவர்களுக்குள் ஆயிரம் கேள்விகள்...இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேடி சிலர் ஏற்கனவே படிப்பை முடித்து தற்போது நல்ல வேலையிலிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் என்று தெரிந்தவர்களை எல்லாம் தேடிப் போகிறார்கள். தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கல்லூரிகளில் எந்தப் படிப்புக்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது? அந்தப் படிப்பு எந்தக் கல்லூரிகளில் எல்லாம் இருக்கிறது? என்று கடந்த ஆண்டு பிள்ளைகளின் படிப்புகளுக்காக அலைந்த பெற்றோர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த கல்லூரிகளின் பட்டியலையும் அங்கிருக்கும் படிப்புகளையும் விசாரணை செய்து தெரிந்து வைத்துக் கொள்ளும் சிலரும் உண்டு.தங்கள் பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்கிற விபரமே தெரியாமலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.பொதுவாகப் பெற்றோர்கள் ஒரு விஷயத்தை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தங்கள் பிள்ளைக்கு எந்தப் படிப்பின் மீது அதிக ஆர்வமுள்ளது என்பதுதான். அந்த ஆர்வம் உண்மையானதா அல்லது அவனுடன் படித்த நண்பர்கள் அந்தப் படிப்பின் மீது ஆர்வமாய்ச் செல்வதால் இவனும் அவனுடன் சேர்ந்து சொல்கிறானா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விருப்பப்பட்ட படிப்பைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் சிறப்பாகத் தேர்ச்சி அடையவும் முடியும்.இப்படி உண்மையிலேயே உங்கள் பிள்ளைக்கு ஆர்வமான படிப்பு என்று தெரிந்தால் அந்தப் படிப்பைப் பற்றித் தெரிந்தவர்களிடம் அந்தப் படிப்பு பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அந்தப் படிப்பு படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதற்கான இடங்கள், சம்பளம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு போன்றவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் பிறகு, அந்த படிப்பு தமிழ்நாட்டில் எந்தெந்த கல்லூரிகளில் இருக்கிறது? அந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியா? அரசு உதவி பெறும் கல்லூரியா? அல்லது சுய நிதிக் கல்லூரியா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தங்கள் தேர்வு முதலாவதாக இருக்கலாம். ஏனென்றால் அங்கு தேவையான கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், நூலகம், இணைய வசதிகள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். சுயநிதிக் கல்லூரிகளென்றால் முன்பே அந்தக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதா? கல்லூரிக்கு மத்திய / மாநில அரசின் தொடர் அங்கீகாரம் (Continuing Approval / Recognition), பல்கலைக் கழகத்தின் தொடர் இணைப்பு (Continuing Affiliation) பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்றிருக்கும் சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள போதுமான வசதிகளில்லாமல், வசதி குறைவு காரணமாக அந்தக் கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டிருக்கலாம்.பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டிடங்களை அழகாகக் கட்டி வைத்திருப்பார்கள். அங்கு தகுதியான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இல்லாத நிலை இருக்கும். இதை எப்படி தெரிந்து கொள்வது? என்பது என்கிற உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். அங்கு பயிலும் மாணவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். தாங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரியின் முதல்வராக இருப்பவர் முன்பு எங்கு பணியிலிருந்தார்? தகுதியானவர்தானா? அவர் இந்தக் கல்லூரியில் சிறப்பாகச் செயல்படுகிறாரா? தேவையான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்களா? அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் தொடர்ந்து பணியில் இருக்கிறார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அந்தக் கல்லூரியின் நிர்வாகம் சரியில்லாத நிலையில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்படி அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருக்கும் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்துதான் இருக்கும். சில கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்கள் பெயருக்குத்தான் இருக்கும். பாடத் திட்டத்திற்கு ஏற்ற கருவிகளோ, பொருட்களோ அங்கு இல்லாத நிலையிருக்கும். இதை அங்கு படித்து வரும் அல்லது படித்து முடித்த மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த கல்லூரிகளில் படிப்பதால் படித்து முடித்த படிப்புகளுக்குரிய செயல்முறைப் பயிற்சியில்லாமல் நிறுவனங்களில் நேர்முகத் தேர்வின் போது தவிக்க நேரிடும்.இதே போல் வளாகத் தேர்வுகளுக்கு கல்லூரி நிர்வாகம் கடந்த ஆண்டு எடுத்த முயற்சிகள் மற்றும் அதில் எந்தெந்த நிறுவனங்கள் பங்கு பெற்றன? எத்தனை மாணவர்கள் பணிக்கான வாய்ப்புகள் பெற்றனர்? போன்ற விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சில கல்லூரிகளில் பெயருக்கு நாம் கேள்விப் படாத சிறு நிறுவனங்களின் பெயரில் வளாகத் தேர்வு நடத்தப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாமல் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளேயே அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலையிருக்கும். இதுபோல் சில கல்லூரிகளில் மாணவர்களிடம் தேவையில்லாமல் அடிக்கடி அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாகச் செலுத்தச் சொல்லும் நிலையும் உள்ளது. இங்கு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்தான். நிர்வாகத்தின் பணத் தேவைகளுக்கு ஏற்ப அடிக்கடி அபராதம் விதிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த கல்லூரிகளையும் நாம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அடிக்கடி இது போன்ற கல்லூரிகளில் நம் பிள்ளைகளின் படிப்பு போய்விடக் கூடாதே என்கிற நிலையில் அவர்கள் விதிக்கும் அதிக அளவிலான அபராதத் தொகையை அடிக்கடி எந்தவித ரசீதுகளுமில்லாமல் நாம் செலுத்த வேண்டியிருக்கும். கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் யாரென்பதையும் கூடத் தெரிந்து கொள்ளுங்கள். சில நிர்வாகங்கள் அந்த கல்லூரியில் எந்த வசதியும் செய்து கொடுக்காமல் வேறு புதிய கல்லூரி அல்லது புதிய நிறுவனத்தினை உருவாக்கும் நோக்கத்துடன் கல்லூரிக்கு வரும் பணம் அனைத்தையும் மாற்றி விட்டு கல்லூரியில் பணியிலிருப்பவர்களுக்கு கூட மாதந்தோறும் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் பணியிலிருப்பவர்களுக்கு பணியில் ஈடுபாடில்லாமல் அந்தக் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருக்கும்.இப்படி சுயநிதிக் கல்லூரிகளில் சில தரம் குறைந்திருந்தாலும் பல சுயநிதிக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமான வசதிகளுடன் இருக்கின்றன. படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இது போன்ற நல்ல சுயநிதிக் கல்லூரிகளைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமையும். கூடவே அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
-தாமரைச் செல்வி
நன்றி: முத்துக் கமலம் இணைய இதழ்

3.8.08

உதவித் தொகையுடன் உயர்கல்விவரை படிக்கும் வழிகள்


திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப. சுரேஷ்குமார்.
அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது.
என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்!
தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி பிறந்திருக்கும்.
பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும், திறனாய்வு தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.

என்.சி.இ.ஆர்.டி.:-

தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மகளிர் கல்வி, அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது.
தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை, இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக் கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.

தேசிய திறனாய்வு திட்டம்:-

1963-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.

தேர்வு முறை:-
மூன்று நிலைகளைக் கொண்டு இந்த திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும்.
மாநில கல்வித்துறையின் அல்லது ïனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் "இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006'' என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி மாணவர்கள் "இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர், புதுச்சேரி-605 003'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்த தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்த தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்கு பின்பு நடத்தப்படும்.
தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும் www.ncert.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்வில் வெற்றி பெற வழிகள்:
மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம்.
8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.

இணையதளம் அளிக்கும் சேவை:-
மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.
நன்றி: தினத்தந்தி இளைஞர்மலர்