Showing posts with label கல்வி உதவித் தொகை. Show all posts
Showing posts with label கல்வி உதவித் தொகை. Show all posts

7.1.10

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாணவிக‌ள் க‌வ‌ன‌த்திற்கு

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாணவிக‌ள் க‌வ‌ன‌த்திற்கு

அல்ஹாஜ் டாக்ட‌ர் ஏ. ஜ‌மீர் பாஷா ‍ ஹாஜியா ஷ‌கீலா த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் டாக்ட‌ர் எம்.எஸ். அஷ்ர‌ஃப் ஹாஜியா ஜீன‌த் த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் ஹெச். க்யூ. ந‌ஜ்முதீன் ஹாஜியா சைய‌து பாத்திமா த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் ஏ. ப‌ஷீர் அஹ்ம‌த் ஹாஜியா அப்ரோஜா க‌னி த‌ம்ப‌திக‌ள்

வ‌ழ‌மை போல் இவ்வ‌ருட‌மும் எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் தேர்வில் அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ முஸ்லிம் மாண‌விக‌ளுக்கு ந‌ர்கிஸ் சார்பில் ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கி பாராட்ட‌ இருக்கிறார்க‌ள்.

அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து ம‌திப்பெண் சான்றித‌ழ்க‌ளை ஜுன் 30 க்குள் கைப்ப‌ட‌ எழுதிய‌ க‌டித‌ம், வீட்டு முக‌வ‌ரி, தொலைபேசி எண், 1 புகைப்ப‌ட‌ம், ரிப்ளை க‌வ‌ர் இணைத்து ந‌ர்கிஸ் முக‌வ‌ரிக்கு அனுப்பித் த‌ர‌ வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாண‌விக‌ள் என்று க‌வ‌ரில் குறிப்பிட‌வும்.

முக‌வ‌ரி :

எம். அனீஸ் ஃபாத்திமா
ஆசிரியை, ந‌ர்கிஸ்
54 ம‌ரிய‌ம் ந‌க‌ர்
ம‌ல்லிகைபுர‌ம்
திருச்சி 620 001
--------------------------------

இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் - துபாய்

24.10.08

FREE Scholarship, கல்வி உதவித்தொகை

SOME USEFULL DOMAINS WILL BE DISCUSSED HERE: FREE Scholarship, கல்வி உதவித்தொகை

27.9.08

சிறுபான்மை கல்வி உதவித்தொகை பெற......


சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற வருமான சான்றிதழ் தேவை இல்லைஉத்தரவிட்ட கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மை ஆணையம் நன்றி
சென்னை, செப்.27-
பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற அதிகாரிகள் அளிக்கும் வருமான சான்றிதழ் தேவை இல்லை என்று உத்தரவிட்ட முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம், சிறுபான்மை ஆணையம் நன்றி தெரிவித்தன.
கல்வி உதவித்தொகை
பள்ளி மற்றும் கல்லூரிகளில் (தொழில் கல்வி உள்பட) படிக்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஆணையிட்டது.
இந்த மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வுகளில் 50 சதவீத மார்க்கு எடுத்து இருக்கவேண்டும். 1-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். இறுதி தேர்வில் 50 சதவீத மார்க்கு எடுத்து இருக்கவேண்டும். ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களின் பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்கவேண்டும். தொழில்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி உத்தரவு
இந்த உத்தரவுப்படி வருவாய் அலுவலரின் சான்றிதழ், நோட்டரி பப்ளிக் சான்றிதழ் ஆகியவை தேவைப்பட்டது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். எனவே அந்த சான்றிதழ்கள் இல்லாமல் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அதை அந்த நேரமே ஏற்று உடனடியாக சான்றிதழ் இல்லாமல் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினத்தவர் என்பதற்கான சாதி பற்றிய விவரங்கள் ரூ.10 மதிப்புள்ள கோர்ட்டு சாரா முத்திரை தாளில் எழுதி பெற்றோர் அல்லது பாதுகாவலர் உறுதி மொழி சுய கையொப்பம் இட்டு சமர்ப்பித்தால் போதும். நோட்டரி பப்ளிக் கையொப்பம் தேவை இல்லை, வருவாய் அலுவலரிடம் இருந்து சான்று பெறத்தேவை இல்லை. வருமான அதிகாரியிடம் இருந்து வருமான சான்று பெற்று தரவேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல இது குறித்து அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவன அதிகாரிகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி
முதல் அமைச்சரை சந்தித்த இஸ்லாமிய இலக்கிய கழக சிறப்பு நெறியாளர் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் கேப்டன் என்.ஏ.அமீர் அலி, பொதுசெயலாளர் எஸ்.எம்.இதயதுல்லா, துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ்.ஷாஜகான், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோர் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
ரம்ஜான் பரிசு
கடந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டையும், இந்த ஆண்டு ரம்ஜான் பரிசாக சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை பெற எளிமைப்படுத்தி உத்தரவிட்டு எங்களை மனநிறைவு ஏற்படுத்தியதற்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பல மாநிலங்கள் சிறுபான்மை மாணவர்களின் உதவித்தொகைக்கு ஒதுக்கிய தொகையை செலவழிப்பதில்லை. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவர்களும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பயன் அடைந்தனர்.
ஆனால் இந்த வருடம் தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்க உள்ளனர். எனவே பிற மாநிலங்களில் பயன்படுத்தாத தொகையை தமிழ்நாட்டுக்கு திருப்பும் படி மத்திய அரசுக்கு கருணாநிதி கடிதம் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=441006&disdate=9/27/2008
நன்றி:

imantimes@googlegroups.com on behalf of Muduvai Hidayath

15.7.08

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

பாபநாசம், ஜூலை 14: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.
இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.
உதவித் தொகை பெற விரும்புவோர், தலைவர் மற்றும் செயலர், ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி, பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். (தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).

13.6.08

சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அரசு அறிவிப்பு

சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
அரசு அறிவிப்பு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சிறுபான்மையினர் மாணவ மாணவியர் களுக்கு பள்ளிப்படிப்பு தொடர்பான கல்வி உதவித்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மத்திய அரசால் வெளியிடப்பட்ட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை மத்திய மாநில அரசின் நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 15340 சிறுபான்மையின மாணவ மாணவியர்க்கு நடப்பு 2008-2009 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் ஏழாயிரத்து முந்நூற்றி இருபது முஸ்லிம் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள்:
மாணவ மாணவிகள் பள்ளி இறுதித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண் களுக்கு குறையாமல் பெற்றிருத்தல் வேண்டும். முதல் வகுப்பு மாணவ மாணவியர்கள் வருமான வரம்பு இருத் தல் போதுமானது. பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 2008 லி 2009 ஆம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது. இந்த ஒதுக்கீட்டில் 30 விழுக்காடு மாணவியர்களுக்கு வழங்கப்படும். போதுமான மாணவியர்கள் இல்லாத பட்சத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர் களுக்கு வழங்க இயலாது. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். மாணவ மாணவியர் களின் வருகை சீராக இருக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் இது தொடர்பாக வருமான சான்று ரூ.10 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத் தாளில் இணைய தளத்தில் உள்ள மாதிரி படிவத்தின் படி ஆச்ச்ண்க்ஹஸ்ண்ற் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இக்கல்வி உதவித் தொகையில் சேர்க்கை, கற்பிப்பு மற்றும் பராமரிப்புக் கட்டணங்களில் உள்ளபடியான தொகை அல்லது உதவித் தொகை, இதில் எது குறைவானதோ அது வழங்கப்படும் இதன் படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான சேர்க்கை கட்டணம் விடுதியில் தங்கி படிப்பவர், விடுதியில் தங்காது படிப்பவர் என இரு பிரிவினருக் கும் தலா ரூ.500 மட்டும் வழங்கப்படும். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான கற்பிப்பு கட்டணம் அதிகப்பட்சமாக ஒரு மாதத்திற்கு ரூ.350 மட்டும் வழங்கப்படும்.
பராமரிப்புக் கட்டணமாக 10 மாதங்கள் மட்டும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு விடுதியில் தங்கி பயில்பவருக்கு 10 மாதங்களுக்கு, மாதத்திற்கு ரூ. 600 வழங்கப்படும். விடுதியில் தங்காது பயில்பவருக்கு 10 மாதங்களுக்கும் ரூ.100 வீதம் மாதம் தோறும் வழங்கப்படும். இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் 30.06.2008க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப் படிவம் www.minority affairs.gov.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.tmmk.in/
This post was submitted by முதுவை ஹிதாயத்.
நன்றி: சற்றுமுன்

7.6.08

அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை

சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பெளத்தர்கள் ஆகியோர் சிறுபான்மையினர் ஆவர். இச்சிறுபான்மை இனத்தவரைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர உதவித் தொகை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சிறுபான்மையினராகிய நமது முஸ்லிம் சமுதாயத்தின் தகுதி உள்ளவர்கள், உரிய முறையில் அணுகி அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

திட்டம் பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் பெற இங்கே கிளிக்கவும்

18.5.08

கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு இலவச ஆலோசனைகள்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம் எதிர்காலத்தில் எல்லா வகையிலும் உயர்வு பெற்ற சமுதாயமாகத் திகழ, பரந்த நோக்குடன் பல்வேறு திட்டங்களுக்கு நல்வழிகாட்டுகிறது தஞ்சை வல்லத்தில் கடந்த மே 10, 11 ஆகிய தேதிகளில் நடை பெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு.
மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் பல்வேறு வழிகாட்டுதல்கள் தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்குங்கள். உங்களைச் சார்ந்தோர் அனைவருக்கும் அறிமுகம் செய்யுங்கள்.