31.10.09
30.10.09
முன்னாள் மாணவர்- ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இது நாள் வரை நமது பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் நம் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் அனைவரும் வந்திருந்து தங்கள் பசுமையான நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்
-------------------------------
இந்த நிகழ்ச்சி பற்றிய அனைத்து விபரங்களும் நமது இந்த வலைப்பதிவில் விரைவில் எதிர்பாருங்கள். இன்ஷா அல்லாஹ்
23.10.09
ஓரியண்டல் பள்ளியின் மேல் தளம் திறப்பு விழா
பள்ளிக் கூட வகுப்பறையை பள்ளிவாசலாக்கி தொழுதது ஒரு காலம். பிறகு தனியாக ஒரு சின்னஞ்சிறு புதிய கூடம் பள்ளிவாசலானது. இப்போது பாருங்கள் நமது ஓரியண்டல் பள்ளிவாசல் அழகிய மினாராவுடன் அற்புதமாகக் காட்சி அளிக்கிறது. இப்போது பெண்கள் தொழுவதற்கு முதல் தளம் திறப்ப விழா செய்யப்பட்டுள்ளது. இப்போதைய தாளாளர் சங்கைக்குரிய அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்களின் சீரிய முயற்சியால் நம் பள்ளி பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்
9.10.09
படிப்பதற்கு வட்டியில்லா கடனுதவி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தகவல்!
மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்துவிட்டதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே படிப்பிற்காக வங்கி போன்ற வற்றில் கடன் பெறும் மாணவர்கள் வட்டி செலுத்த தேவையில்லை.
தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நோக்கம். இதன் அடிப்படையில் தான் மூன்று ஆண்டுகலாக வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு அதிகபட்சமாக நான்கு லட்சம் ரூபாய் வரை எந்தவித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் தகுதியின் அடிப்படையில் 16 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் கல்விக்கடனுக்கான வட்டி தள்ளுபடி என்ற புரட்சிகரமான திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாத வருமானம் 38 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்குக் குறைவாகவும் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்கு குறைவாகவும் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் படிப்பைத் துவங்கியது முதல், முடித்த ஆறு மாதங்கள் வரை கல்விக் கடனுக்கான வட்டி செலுத்த வேண்டாம்.
மாணவர்களைப் படிக்க வைப்பதால் பெற்றோருக்கு ஏற்படும் சுமையைக் குரைப்பதற்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மத்தியஅரசு 300 முதல் 400 கோடி ரூபாய் வரை கூடுதலாக மானியம் வழங்க வேண்டியது வரும். இத்திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் மாணவர்கள் வரை பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வட்டியில்லா கல்வி கடன் கொடுக்கும் பட்சத்தில் முஸ்லீம் மாணவ மாணவியர்களுக்கு இது பெரும் பயனுள்ளதாக இருக்கும்
http://www.tntj.net/?p=5583: