9.11.09

ஐஐடி யில் முஸ்லீம்கள் – மாணவர்களே! கனவை நினைவாக்க களமிறங்குங்கள்!

img_3141 அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவர்களை சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான வேலை கிடைக்கவில்லை என்ற குறைபாடு முஸ்லீம் சமுதாயத்தில் அதிகமாகவே உள்ளது.

கற்பனை செய்துபாருங்கள் : மிக குறைந்த செலவில் உலக தரத்தில் நல்ல தரமான கல்வி, கல்வி கட்டணம் (பீஸ்) கட்ட வசதி இல்லாத மாணவர்களுக்கு உடனடியாக இலவச கல்வி உதவி தொகை, படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை, மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு, கேட்க எவ்வளவு நன்றாக இருக்கின்றது, இது கற்பனை அல்ல இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருக்கின்றது. அதுதான் மத்திய அரசால் நடத்தப்படும் சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஐஐடி.

இங்கு படிக்க மிக குறைந்த கட்டணமே, வசதி இல்லாத மாணவர்களுக்கு மத்திய அரசே கல்வி செலவை ஏற்க்கும் ( ஐஐடி-யில் படிக்கும் சிறுபாண்மை மாணவர்களுக்கு மத்திய அரசு சிறப்பான இலவச கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றது). இங்கு உலக தரத்தில் கல்வி கற்று கொடுக்கப்படுகின்றது.

படித்து முடிப்பதற்க்குள் மாதம் பல ஆயிரம் சம்பளத்தில் வேலை (தற்போது ஐஐடி-யில் படிக்கும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மாத சம்பளம் ரூ.1,00,000 இருந்து ரூ.30 ஆயிரம் வரை). மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளிநாட்டில் மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள். இவை அனைத்தும் உள்ள ஒரே கல்வி நிறுவனத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.

இங்கு படிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இங்கு சேர மத்திய அரசு பல்வேறு நுழைவு தேர்வுகளை நடந்துகின்றது, அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும்,

இட ஒதுக்கீடு : ஐஐடி-யில் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கா 27% இட ஒதுக்கீடு உள்ளது.

IIT-JEE 2010 : தற்போது ஐஐடி-யில் (IISc-யையும் சேர்த்து) +2 படித்த மாணவர்கள் 2010 ஆண்டு பொறியியல் படிப்பிற்க்கு சேர்வதற்க்கான நுழைவு தேர்வின் (IIT-JEE 2010) விண்ணப்பம் விணியோகிக்கப்பட்டு வருகின்றது. (தேர்வை பற்றிய விபரங்கள் கீழே இடம் பெற்றுள்ளது).

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

ஐஐடி-யில் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லி கொள்பவர்களின் ஆதிக்கம் : ஐஐடி-யில் பெறும்பாலும் படிப்பதும், ஆசிரியர்களாக இருப்பதும் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்ளும் பார்பனர்கள், , இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, ஐஐடி-யில் சேருவது மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

அரசு இட ஒதுகீடு என்று அறிவித்த பிறகும் இவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி (ஐஐடி-யில் அதிகார மட்டத்தில் இவர்களே அதிகம் உள்ளனர்) இட ஒதுக்கீட்டை கிடைக்கவிடாமல் செய்வது, சென்ற ஆண்டு மாணவர் சேர்கையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் கோட்டாவில் சேர்க்க தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி 1,100 இடங்கள் காலியாக வைத்து, அதே போல 53 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களில் சேர்க்கவும் தகுதியான மாணவர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, இதனால் அனைத்து இடங்களும் பொதுக் கோட்டாவுக்கு மாற்றுகின்றோம் என்று கூறி அந்த இடத்தையும் இவர்களே எடுத்து கொண்டனர். இது சம்ந்தமாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தும் எந்த பலனும் இல்லை .

மாணவ மாணவியர்களே!

இதை மாற்ற நாமும் ஐஐடி-யில் படிக்க வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்களை படிக்கவைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகின்றது நமது மாணவரணி, உங்களுக்கு வழிகாட்ட ஐஐடி-யில் படித்த சகோதரர்களும் நமது மாணவரணியில் உள்ளனர். உயர் கல்வி கற்க முஸ்லீம்களை ஊக்குவிக்க தமிழகத்தின் மூலை முடுக்குகளெள்ளாம் விழிபுணர்வு பிராசாரங்களையும் வழிகாட்டும் முகாம்களையும் நடத்தி வருகின்றோம்.

ஐஐடி நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது TNTJ மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு ஐஐடி தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வுகள் பற்றியும், விண்ணப்ப படிவங்கள் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.
2. K. ஹஸன் B.E – 9940611315
e-mail : tntjedu@gmail.com

IIT-JEE 2010 தேர்வை பற்றிய முழு விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :
(ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம்)
டிசம்பர் – 19 (19/12/09) இன்ஷா அல்லாஹ்

தேர்வு நடைபெறும் தேதி
ஏப்ரல் – 11 (11/04/10)
இரண்டு தேர்வுகள் (காலை மற்றும் மாலை) இன்ஷா அல்லாஹ்

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி
மே – 26 (26/05/10) இன்ஷா அல்லாஹ்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Chairmen, JEE, IIT Madras, Chennai – 600036
Phone : 044-22578220

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
இந்தியன் வங்கி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள Help line சென்டர்கள்
விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஐஐடி – மெட்ராசின் ஹெல்ப் லைன் எண் (Help line Number)
044-2250 4500 (காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை)

விண்ணப்பத்தின் விலை :
Rs.1,000,
(ஆன்லைனில் சமர்பிக்கும் விண்ணப்பம் ரூ. 900)

வயது வரம்பு
அக்டோபர் 1, 1985 ஆம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
a) +2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள்,
b) +2 வொகேஷனல் (vocational) குரூப் படிக்கும் மாணவர்கள்.
c) 3 ஆண்டு டிப்ளமோ படித்த மாணவர்கள்

குறைந்தபட்ச மதிப்பெண்
+2-வில் குறைந்த்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

TNTJ மாணவரணியின் சிறப்பு குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.
2. K. ஹஸன் B.E – 9940611315

செய்தி:

S.சித்தீக்.M.Tech
TNTJ மாநில மாணவரணி செயளலா
நன்றிTNTJ.net

7.11.09

சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்ட நூல்கள்

இவ்வாண்டு சமச்சீர் கல்வி முறையின் புதிய பாடத்திட்ட நூல்களை தமிழ்நாடு அரசு இணையத்தில் வெளியிட்டுள்ளது
அனைத்து வகுப்புகளுக்கான அனைத்து பாடத்திட்ட நூல்களையும் கீழ்க்காணும் இணைய தள சுட்டியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்

http://www.pallikalvi.in/Students/Students.aspx

31.10.09

INVITATION


30.10.09

முன்னாள் மாணவர்- ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி

இறைவனின் திருப் பெயரால்.......

ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி
ஆக்கூர் 609301
-------------------
நாள் : 1-11-2009 ஞாயிற்றுக்கிழமை
காலை முதல் மாலை வரை
------------------
இடம்: பள்ளி வளாகம்
ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி
ஆக்கூர்
------------------------------------------------
நிகழ்ச்சி ஏற்பாடு
முன்னாள் மாணவர் கூட்டமைப்பு
--------------
தொடர்புக்கு: sheik.sne@gmail.com
Cell - 9444 00 9880
------------------------------------------------------------

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இது நாள் வரை நமது பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் நம் பள்ளியில் பணிபுரிந்த முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் அனைவரும் வந்திருந்து தங்கள் பசுமையான நினைவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்

-------------------------------

இந்த நிகழ்ச்சி பற்றிய அனைத்து விபரங்களும் நமது இந்த வலைப்பதிவில் விரைவில் எதிர்பாருங்கள். இன்ஷா அல்லாஹ்

23.10.09

ஓரியண்டல் பள்ளியின் மேல் தளம் திறப்பு விழா

பள்ளிக் கூட வகுப்பறையை பள்ளிவாசலாக்கி தொழுதது ஒரு காலம். பிறகு தனியாக ஒரு சின்னஞ்சிறு புதிய கூடம் பள்ளிவாசலானது. இப்போது பாருங்கள் நமது ஓரியண்டல் பள்ளிவாசல் அழகிய மினாராவுடன் அற்புதமாகக் காட்சி அளிக்கிறது. இப்போது பெண்கள் தொழுவதற்கு முதல் தளம் திறப்ப விழா செய்யப்பட்டுள்ளது. இப்போதைய தாளாளர் சங்கைக்குரிய அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்களின் சீரிய முயற்சியால் நம் பள்ளி பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்

9.10.09

படிப்பதற்கு வட்டியில்லா கடனுதவி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தகவல்!

மாணவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்துவிட்டதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. எனவே படிப்பிற்காக வங்கி போன்ற வற்றில் கடன் பெறும் மாணவர்கள் வட்டி செலுத்த தேவையில்லை.

பார்க்க

கல்விக்கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதால், மத்திய அரசு 400 கோடி ரூபாய் வரை கூடுதலாக மானியம் வழங்க வேண்டியது வரும்.
ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக செலவழிக்கப்படும் இந்தத் தொகை மத்திய அரசுக்குப் பெரிய விஷயமே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது

தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நோக்கம். இதன் அடிப்படையில் தான் மூன்று ஆண்டுகலாக வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு அதிகபட்சமாக நான்கு லட்சம் ரூபாய் வரை எந்தவித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் தகுதியின் அடிப்படையில் 16 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் கல்விக்கடனுக்கான வட்டி தள்ளுபடி என்ற புரட்சிகரமான திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாத வருமானம் 38 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்குக் குறைவாகவும் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்கு குறைவாகவும் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்கள் படிப்பைத் துவங்கியது முதல், முடித்த ஆறு மாதங்கள் வரை கல்விக் கடனுக்கான வட்டி செலுத்த வேண்டாம்.

மாணவர்களைப் படிக்க வைப்பதால் பெற்றோருக்கு ஏற்படும் சுமையைக் குரைப்பதற்காகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மத்தியஅரசு 300 முதல் 400 கோடி ரூபாய் வரை கூடுதலாக மானியம் வழங்க வேண்டியது வரும். இத்திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் மாணவர்கள் வரை பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிப்பைப் பாதியில் விடும் மாணவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது. இதுபோன்று ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள கல்விக் கடனுக்கும் வட்டி சலுகை கிடையாது. தகுதியுடைய மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கடன் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்டந்தோறும் வங்கி சார்பில் இதுபோன்று கல்விக்கடன் மேளா நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
இது வெரும் அறிவிப்பாக இல்லாமல் உண்மையாக நடைமுறை படுத்தபட்டால் முஸ்லீம்கள் கல்வியில் வளர்ச்சி அடைய பெரும் உதவியாக இருக்கும்.

அரசு வட்டியில்லா கல்வி கடன் கொடுக்கும் பட்சத்தில் முஸ்லீம் மாணவ மாணவியர்களுக்கு இது பெரும் பயனுள்ளதாக இருக்கும்

http://www.tntj.net/?p=5583:

5.2.09

மாணவ மாணவிகளுக்கு பயிற்சி முகாம்

10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி முகாம்
நாள் : 8-02-09 ஞாயிற்றுக் கிழமை (இன்ஷா அல்லாஹ்)
நேரம் : காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை
பயிற்சி அளிப்பவர் :

நஸிர் அஹமது.B.E
(சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர்)

இடம்

: TNTJ மாநில தலைமையகம்,
30, அரண்மனைக்காரன் தெரு
மண்ணடி,
சென்னை- 600001.
மாணவிகளுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ மாணவர் அணி.

தொடர்பிற்கு : 9884235802