12.6.08

ஜூலை 11-ந்தேதி என்ஜினீயரிங் கவுன்சிலிங்


தொழிற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அட்டவணை அறிவிப்பு ஜூலை 11-ந்தேதி என்ஜினீயரிங் கவுன்சிலிங்
என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சிலிங்கையும் முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியான மறுநாளில் (10-ந்தேதி) இருந்தே என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் தாமதமாக வெளிவந்தன. இதனால் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் மே 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதி வாய்ப்பு எண் (ரேண்டம் நம்பர்) வழங்கப்படுகிறது (ஒரே கட் ஆப் மார்க்கினை ஒனறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பெறும் சூழ­ல் முன்னுரிமை அளிக்க வசதியாக இந்த ரேண்டம் நம்பர் கொடுக்கப்படுகிறது). ரேங்க் பட்டியல் ஜூன் 25-ந் தேதி வெளியிடப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஜூலை 3-ந்தேதி என்ஜினீயரிங் கவுன்சலிங் தொடங்குகிறது. முதல் நாளான அன்றைய தினம், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. தொழிற்கல்வி (வொகேஷனல்) பாடத்திட்ட மாணவர்களுக்கான கவுன்சலிங், ஜூலை 4லிந் தேதி தொடங்கி, ஜூலை 8லிந் தேதி வரை நடக்கிறது.
வெளிமாநில மாணவர்களுக்கான கவுன்சி­ங், ஜூலை 9லிந் தேதி நடைபெறுகிறது. உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சி­ங் ஜூலை 10லிந் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கவுன்சி­ங் ஜூலை 11லிந் தேதியும் நடக்கிறது. ஆகஸ்டு 31லிந் தேதி கவுன்சி­ங் முடிவடைகிறது.
எம்.பி.பி.எஸ்லிபி.டி.எஸ். கவுன்சி­ங்
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது. விண்ணப்பங்களை பெறுவதற்கும், சமர்ப்பிப்பதற்கும் கடைசி நாள் ஜூன் 17லிந் தேதி ஆகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 18லிந் தேதி மதியம், வாய்ப்பு எண் (ரேண்டம் நம்பர்) வழங்கப்படுகிறது. ரேங்க் பட்டியல் ஜூன் 28-ந் தேதி வெளியிடப்படுகிறது.
முதல்கட்ட கவுன்சி­ங் ஜூலை 4-ந் தேதி தொடங்குகிறது. அது ஜூலை 11-ந் தேதி முடிகிறது. முதல் கட்ட கவுன்சி­ங்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தத்தம் வகுப்புகளில் சேர கடைசி தேதி ஜூலை 21 ஆகும். இவர்களுக்கு ஆகஸ்டு 4லிந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சி­ங், ஆகஸ்டு 25லிந் தேதி தொடங்குகிறது. இது ஆகஸ்டு 28லிந் தேதி வரை தொடர்ந்து நடக்கும். இரண்டாம் கட்ட கவுன்சி­ங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், வகுப்புகளில் சேர 'ஆகஸ்டு 30' கடைசி தேதி ஆகும். அனைத்து பிரிவுகளுக்குமான சேர்க்கை செப்டம்பர் 30லிஆம் தேதியுடன் நிறைவடையும்.
என்ஜினீயரிங் கவுன்சலிங்குக்காக வெளியூரில் இருந்து சென்னைக்கு பஸ் மற்றும் ரெயில்களில் வரும் மாணவர்களுக்கு, கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பயணக் கட்டணம் (வந்து போகும் செலவு) கிடையாது.
(24.05.2008) அன்றைய நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேர 11/2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் வாங்கிச் சென்றுள்ளனர். இதில், 20 ஆயிரம் பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டனர். மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் இருப்பது போல் இந்த ஆண்டும் 16 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,645 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 247 இடங்கள் சென்றுவிடும். தருமபுரியில் புதிய மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டில் வரும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு தொழில் படிப்புகளில் சிறுபான்மைப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடு திட்டம் அமல்படுத்தப்படும். மொத்தம் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 410 இடங்களில், அரசு ஒதுக்கீட்டுக்கு 251 இடங்கள் கிடைக்கும். இவையும் கவுன்சி­ங் மூலம் நிரப்பப்படும்.
தனியார் சுயநிதி தொழில்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட நீதிபதி பாலசுப்பிரமணியம் கமிட்டி அறிக்கை, அடுத்த வாரத்தில் (திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும்.
கூடுதலாக 1,440 என்ஜினீயரிங் இடங்கள்
தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீடு 35 சதவீதமும் அளிக்கப்படும். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் தலா 50 சதவீதம் பகிர்ந்து கொள்ளப்படும். இதுதவிர, இந்த ஆண்டு தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 360 இடங்கள் உள்பட மொத்தம் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில், 1,440 இடங்கள் கூடுதலாக அதிகரிக்கும்.
புதுபிரிவு பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்'
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் என்ற புதிய படிப்பு தொடங்கப்படுகிறது. இந்த ஆண்டில் மொத்தத்தில் 4 புதிய படிப்புகள் தொடங்கப்படுகின்றன..அடுத்த ஆண்டு முதல் ஆன்லிலைனிலேயே (இன்டர்நெட் மூலமாக) அறிவியல் மற்றும் கலை பிரிவு பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். என்ஜினீயரிங் பாடங்களுக்கு இவ்வாண்டில் இருந்தே விண்ணப்பங்களை வினியோகிக்க முடியும்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடு அமல்
தமிழகத்தில் என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர சிறுபான்மையின மக்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் (முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், கிறித்தவர்களுக்கு 3.5 சதவீதமும்) என்று அரசு அறிவித்தது. இது இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட முஸலிம்களுக்கும் தலா 49 இடங்கள் ஒதுக்கப்படும் (என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒதுக்கப்படும். இடங்கள் பின்னர் தெரியவரும்).
ரேண்டம் நம்பர் என்றால் என்ன?
என்ஜினியரிங், மருத்துவம் விண்ணப்பித்úத்ôருக்கு, 'ரேண்டம் நம்பர்' என்று ஒரு எண் ஒதுக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் உத்தேசமாக ஒதுக்கப்படும் அந்த எண், 6 அல்லது 7 இலக்கம் கொண்டவையாகும். ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு கட்லிஆப் மார்க் சமமாக வரும் பட்சத்தில் முதலில், மாணவர்களின் கணித மதிப்பெண்களின் கணித மதிப்பெண் (மருத்துவ படிப்பாக இருந்தால் உயிரியல்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணும், ஒருவேளை அதுவும் சமமாக இருந்தால் வேதியியல் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பெரும்பாலும் இந்த நிலையிலேயே முடிவு தெரிந்துவிடும்.
ஒருவேளை, வேதியியல் மதிப்பெண்ணும் சமமாக இருந்துவிட்டால், மாணவர்களின் பிறந்த தேதியை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வயதில் மூத்தவருக்கு அதுவும், சமமாக இருந்து விட்டால் கடைசியாக முன்பு ஒதுக்கபட்ட ரேண்டம் நம்பரை பார்ப்பார்கள். யாருடைய நம்பர் குறைந்த மதிப்பில் உள்ளதோ (உதாரணத்துக்கு 1,00000, 2,00000 என்று இருந்தால் அதில் 1,000000 எண் உள்ள மாணவருக்கு சீட் அளிக்கப்படும்) இதுவே ரேண்டம் எண் எனப்படுகிறது.
நன்றி: http://www.tmmkonline.org/news/999889.htm

0 comments: