12.6.08

வழக்கறிஞராக ஆசையா?


சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் ,மனித உரிமையை நிலை நாட்டும் வழக்கறிஞராக ஆசையா? உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது.+2 மற்றும் டிகிரி முடித்த மாணவர்கள் தொடர்பு கொள்ளவும்.டிகிரி முடித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை,முதலில் தொடர்பு கொள்ளும் பத்து மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் கட்டணத்தை மாணவரணி ஏற்றுக் கொள்ளும். (இன்ஷா அல்லாஹ்..)
தொடர்புக்கு....வழக்கறிஞர்.மு.ஜைனுல் ஆபிதின்.(மாநில மாணவரணி செயலாளர்)தொடர்பு எண் : 9994292932

அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம்(ஜூன்) 13லிந் தேதி விண்ணப்பம் அனுப்ப கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டில் நெல்லை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 6 இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர சேலத்தில் தனியார் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. சென்னையில் பி.ஏ.,பி.எல்(ஹானர்ஸ்) என்ற 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான கல்லூரி ''ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் இன் லா'' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு பி.எல் சட்ட படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு டாக்டர்.அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிளஸ்லி2 முடித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேரலாம். பி.எல் படிப்புக்கான விண்ணப்பங்களை அனைத்து சட்டக்கல்லூரி முதல்வரிடம் இருந்து மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பங்களை பெற ''பதிவாளர், தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்'' என்ற பெயரில் 400 ரூபாய்க்கு டி.டி எடுத்து சட்டக்கல்லூரி முதல்வரிடம் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தபா­ல் பெற 450 ரூபாய்க்கு டி.டி எடுத்து ''பதிவாளர், தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம், பூம்பொழில், 5, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600028'' என்ற முகவரிக்கு கடிதம் எழுதி பெற்றுக்கொள்ளலாம்.
பி.ஏ.,பி.எல்(ஹானர்ஸ்) படிப்புக்கு நேரடியாக விண்ணப்பங்களை பெற 500 ரூபாய்க்கு டி.டி எடுக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற 550 ரூபாய்க்கு டி.டி எடுத்து அனுப்ப வேண்டும்.
28.5.2008 தேதிக்கு பின்னர் எடுக்கப்பட்ட டி.டிக்கள் தான் செல்லுபடியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க அடுத்த மாதம்(ஜூன்) 13லிந் தேதி கடைசி நாள் ஆகும். 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்,
நன்றி: www.tmmkonline.org

0 comments: