22.7.07

ஓர் அறிமுகம்

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்.....

அகிலமெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலப் பள்ளி
முன்னாள் மாணவர்களுக்கு அஸ்ஸலாமு லைக்கும்.

பல்வேறு காலகட்டங்களிலும் ஆக்கூர் ஓரியண்டலில் பயின்று இன்று பல்வேறு நாடுகளிலும் பரவி வாழ்ந்து வரும் நண்பர்கள் ஒருவருக் கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், தங்கள் பள்ளி வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளவும், பள்ளி நாட்களில் தொடங்கிய நட்பை வாழ்நாள் முழுதும் தொடரவும், இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இன்று 22-07-2007 ஞாயிற்றுக்கிழமை நமது ஓரியண்டல் தனது பொன்னான பொன் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த இனிய நந்நாளில் இந்த வலைப் பதிவு பதிவேற்றம் செய்யப் படுகிறது. அல் ஹம்து லில்லாஹ்.

நமது பள்ளியில் அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகள் விழாக்கள் பற்றிய விபரங்கள், படிப்படியாக நமது பள்ளி அடைந்து வரும் முன்னேற்றம் பற்றிய விபரங்கள் ஆகியவை இப்பதிவில் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்.

நமது பள்ளியில் பயின்றதால்; தங்கள் வாழ்வில் அடைந்த வெற்றிகள் குறித்து முன்னாள் மாணவர்கள் எழுதும் கட்டுரைகள், நமது பள்ளி வாழ்க்கையில் கிடைத்த சக வகுப்பு நண்பர்கள் மற்றும் சமகால நண்பர்களால் பயனடைந்த அனுபவங்கள், ஆகியவை இப்பதிவை அலங்கரிக்கும்.

இந்த வலைப் பதிவின் மூலம் ஆக்கூர் ஓரியண்டலில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரும் ஒருவருக்கொருவர் உதவிகள், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதோடு மட்டுமின்றி நம்மை வளர்த்து ஆளாக்கிய நமது பள்ளிக்கு நமது நன்றிக்கடனாக நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதும் நமது நோக்கமாக இருக்கட்டும். பொருளாதார உதவியாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, பள்ளியின் வளர்ச்சிக்கு நமது மேலான ஆலோசனைகளை வழங்குதல், சமுதாய கல்வி நிறுவனங்களுக்கு பேருதவிகள் புரியும் தயான சிந்தனையுள்ள கொடைவள்ளல்களிடம் நமது பள்ளியைப் பரிந்துரைத்தல், ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும் நமக்;குத் தெரிந்த மாணவர்களை நமது பள்ளியில் சேர்த்தல் ஆகிய வழிகளிலும் நமது உதவிகள் இருக்கலாம்.

இந்த வலைப் பதிவை பார்வையிடும் ஆக்கூர் ஓரியண்டல் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் இந்த வலைப் பதிவை அறிமுகம் செய்து வைக்கும்படியும், இந்த வலைப் பதிவை மென்மேலும் மெருகேற்ற தங்கள் அன்பான ஆலோசனைகளை வழங்கும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வலைப் பதிவு குறித்து தங்கள் மேலான அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் அன்புடன் வரவேற்கிறோம்.
நட்புடன்
A.அப்துஸ்ஸலாம் 'மஸ்தூக்கா'(திருப்பந்துருத்தி)
1976 ஆம் ஆண்டு O.S.L.C மாணவர்
மேலதிகத் தொடர்புகளுக்கு
செல்: 00966551038865


0 comments: