இணையதள முகவரி: www.educationsupport.nic.in
மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம். கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.
அன்புடன்,மு.சாதிக்.
நன்றி: http://a1realism.blogspot.com/
20.4.08
18.4.08
மேற்கல்வியைத் தொடர மேலான உதவிகள்
கல்வியில் பின் தங்கியுள்ள இஸ்லாமிய சமூகத்தை எதிர்காலத்தில் கல்வியில் வளம்பெற்ற சமூகமாக வார்த்தெடுக்க பல்வேறு இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை நல்கி வருகின்றன. இவ்வகையில் 'சமூக நீதி அறக்கட்டளை' மேற்கல்வி கற்க ஆர்வமுள்ள, அதேசமயம் வறுமை காரணமாக தொடர இயலாத ஆதரவற்ற முஸ்லிம் மாணவர்கள் தங்கள் மேற்கல்வியைத் தொடர அருமையான திட்டங்களை வகுத்து மாணவர்களை ஊக்குவிக்க முன்வந்துள்ளது.
ஆதரவற்ற மாணவர்கள் தாங்கள் பள்ளி இறுதி வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், அத்துடன் ஆதரவற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தி ஊர் ஜமாஅத் தலைவர், அல்லது தாங்கள் சார்ந்துள்ள ஏதேனும் இஸ்லாமிய இயக்கக் கிளைகளின் அத்தாட்சிகளுடன் சமூக நீதி அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் வலைத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது சமூக நீதி அறக்கட்ளையின் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
இஸ்லாமிய சமூகம் கல்வியில் உயர்வு பெற, இத்தகவலை தங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி சமுதாய சேவையில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
வலைத்தள முகவரி
http://samooganeethi.org/
ஆதரவற்ற மாணவர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டிய முகவரி
SAMOOGA NEETHI ARAKATTALAI
NEW NO : 129, OLD NO : 64
THAMBUCHETTY STREET
CHENNAI – 600 001
TAMIL NADU
PHONE : +91 9382 155 780.
கல்வி உதவித் தொகை!
புதன், 16 ஏப்ரல் 2008
மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள்.
உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.
கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள்? அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு? ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்
4.4.08
ஜகாத் தொகையை கணக்கிட ஒரு கால்குலேட்டர்
இறைவன் நமக்கு அளித்த பொருட்செல்வத்தை எவ்விதம் செலவு செய்தோம்? என்பது குறித்து நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம். குறிப்பாக நாம் செலுத்த வேண்டிய ஜகாத் என்னும் ஏழை வரியை முறையாகக் கணக்கிட்டு செலுத்தினோமா? என்பது குறித்து நிச்சயமாக விசாரிக்கப்படுவோம். எனவே மறுமை வங்கிக் கணக்கின் சேமிப்பை எவ்வளவுக் கெவ்வளவு அதிகப்படுத்துகிறோமா அவ்வளவுக்கு மறுமையில் நாம் பயன் பெறலாம்.
நமது அனைத்து சொத்துக்களுக்கான ஜகாத் விகிதத்தைக் கணக்கிட இதோ ஒரு கால்குலேட்டர்.