4.4.08

ஜகாத் தொகையை கணக்கிட ஒரு கால்குலேட்டர்

இறைவன் நமக்கு அளித்த பொருட்செல்வத்தை எவ்விதம் செலவு செய்தோம்? என்பது குறித்து நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம். குறிப்பாக நாம் செலுத்த வேண்டிய ஜகாத் என்னும் ஏழை வரியை முறையாகக் கணக்கிட்டு செலுத்தினோமா? என்பது குறித்து நிச்சயமாக விசாரிக்கப்படுவோம். எனவே மறுமை வங்கிக் கணக்கின் சேமிப்பை எவ்வளவுக் கெவ்வளவு அதிகப்படுத்துகிறோமா அவ்வளவுக்கு மறுமையில் நாம் பயன் பெறலாம்.
நமது அனைத்து சொத்துக்களுக்கான ஜகாத் விகிதத்தைக் கணக்கிட இதோ ஒரு கால்குலேட்டர்.

2 comments:

பாத்திமா ஜொஹ்ரா said...

எனக்கு ஒரு மனை உள்ளது.அதன் மதிப்பு சுமார் ஆறு லட்ச ரூபாய்.இந்த மனையை நான் இரண்டு எண்ணத்தில் வைத்துள்ளேன்.ஒன்று வீடு கட்டி குடியேறலாம்,அல்லது அதை விற்று தொழில் செய்யலாம்.இது என் மனத்தில் உள்ளது.நான் இப்போது இதற்கு ஜகாத் கொடுக்க கடமைப்பட்டவள் என்பதை பல்வேறு ஜகாத் பற்றிய இணைய தளங்கள் மூலம் அறிந்துள்ளேன்,அல்ஹம்துலில்லாஹ்.இப்போது எனக்குள்ள கேள்வி.

நான் ஜகாத் கொடுக்கும் நேரத்தில் என்னிடம் பணமோ அல்லது நகையோ அல்லது வேறு எந்த வித வருமானமும் இல்லை,அதை விற்று விட்டு,என் மனைக்கு ஜகாத் கொடுக்க.எனவே இந்த சமயத்தில் நான் என்ன செய்வது?கடன் வாங்கி ஜகாத் கொடுப்பதா?அல்லது அந்த மனையை விற்று விட்டு,அதற்குரிய ஜகாத்தைக் கொடுப்பதா?அல்லது வேறு வழி உண்டா?எனக்கு குரான்,மற்றும் ஹதீஸ் மூலம் மட்டுமே பதில் தரவும்.

ஜசாக்கல்லாஹு க்ஹைர்

மஸ்தூக்கா said...

அன்புச் சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் மார்க்கப் பேணுதல் குறித்து மகிழ்கிறோம். அல்லாஹ் தங்களின் தூய எண்ணங்களைப் பொருந்திக் கொள்வானாக. தங்களின் கேள்வி மார்க்க அறிஞர்களின் மேலான பார்வைக்கும் பல்வேறு அறிஞர்கள் பங்களிக்கும் மடல் குழுமங்களிலும் வைக்கப்பட்டுள்ளது பதில் கிடைத்ததும் தெரிவிவிக்கிறோம்.