31.5.08

மாணவர்களே உங்களுக்கு வழிகாட்ட உங்கள் ஊரைத்தேடி வருகிறார்கள்.

கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதலுக்காக தமிழகம் முழுவதும் TNTJ மாணவரணியின் சூறாவளி சுற்றுப் பயணம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணி கல்வி ஆண்டு துவங்க உள்ள இந்த இந்த நேரத்தில் தனது சேவையை அதி தீவிரமாக செய்யத் துவங்கி உள்ளது. கல்வி வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கு மாணவர்களுக்கு அவர்களின் ஊருக்கே சென்று கல்வி வழிகாட்டுவதற்காகவும் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தமிழகம் முழுவதும் சூரா வழி சுற்றுப் பயணம் மேற் கொண்டு வருகின்றது. இந்த சூறாவழி சுற்றுப் பயணத்தில், மாணவர்கள் எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? எந்த துறையை தேர்ந்தெடுத்தல் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்? என்பன போன்ற பல விஷங்கள் பற்றி மாணர்வகளுக்கு வழிகாட்டப்பட இருக்கின்றது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மாணவர் அணிச் செலயாளர் எஸ். சித்தீக் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.மாவட்டம் வாரியாக நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.
1.பாண்டிச்சேரி – மே 29 (வியாழக்கிழமை)

2. நீலகிரி - ஜுன்'7 (சனிகிழைமை)

3. ஈரோடு - ஜுன் 8 (ஞாயிற்று கிழைமை)4. வேலூர் Zone - ஜுன்'21 (சனிகிழைமை )(வேலூர், தர்மபுரி, திருவன்ணாமலை, கிருஷ்னகிரி)

5. சென்னை Zone - ஜுன்'22 (ஞாயிற்றுகிழைமை)(வட சென்னை, தென் சென்னை, காஞ்சி, திருவள்ளுர்)6. நெல்லை Zone - ஜுன்'28 (சனிகிழைமை)(நெல்லை,தூத்துக்குடி,குமரி)

7. மதுரை Zone - ஜுன்'29 (ஞாயிற்றுகிழைமை)Center: இராமநாதபுரம்(மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம்)

8. கடலூர் Zone - ஜுலை'5 (சனிகிழைமை)(கடலூர், விழுப்புரம், பெரம்பலூர்)9. தஞ்சை Zone - ஜுலை'6 (ஞாயிற்றுகிழைமை)Center : திருவாரூர்,(தஞ்சாவூர்(வடக்கு), தஞ்சாவூர்(தெற்கு),திருவாரூர்,நாகை(வடக்கு) நாகை(தெற்கு) காரைக்கால்)10. கோவை Zone - ஜுலை'12 (சனிகிழைமை)கோவை(வடக்கு), கோவை(தெற்க்கு)
11. திருச்சி Zone - ஜுலை'13 (ஞாயிற்றுகிழைமை)(திருச்சி,புதுக்கோட்டை,கரூர்,நாமக்கல், சேலம்)
தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் மொத்த 11 இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாணர்வகளும் அவர்களது மாவட்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்!

மாவட்ட வாரியாக தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி எண்கள்
District Contact Person Cell Number
Ramanathapuram Abdul Hameed 9443368527
South Chennai Shahul 9884452521
North Chennai Fayaz, Siddique 9940092998
9840684403
Kanchi (East) Shameem 9940205959
Kanchi (West) Nurullah 9841069924
Truvallure Abdul Karim 9952952703
Pudukottai S. Noor Muhammed 9443423741
Dindukkal M. Ismail set 9345008828
Nellai S. Yusuf Ali 9894180198
Erode Irfan 9842475225
Madurai Ilyaz, Kalil, Abdul Haheem 9842020051
9994898598
9443571267
Kumari Dasdagir 9791320205
9944179481
Namakkal A. Muhammed Asif 9443204088
Nahai ( North) H.M. Buhari 9894314523
Nahai ( South) Shahib maraikayar (Sethappa) 9444153378
Tiruvannamalai S. Ismail 9442811980
Tirupure Rahmadullah Bakavi 9843778600
Perambalure Shamshudeen 9443797372
Virudunagar Riyaz , S. Akbar Ali, 9787550920
9443544103
Thutukudi M.A. Liyakat li, Abdul Basith 9442835192
9840426584
Karur Abul Hasan 9865393299
Trichy Nasir 9894022287
Kadalure Abdul Razak 9944444482
Thanjavur ( North) Jaffar, Shahul 9894123898
9944338848
Thanjavur ( South) Sadik Basha 9442398390
Tiruvarur A. Ansari 9965986113
Selam Abdul Wahab 9942349566
Theni Jamal Moideen 9994747150
Sivagangai Abdul Karim, K. Rafik Muahmmad 9965948984
9865966670
Vilupuram I. Shahul Hameed 9865271550
Nilgiris Abdul Kalam Azath Ashik Iqbal 9865140287
9443574836
Karaikal Sultan abdul Kader 9842132958
Pondichery Jinna 9443242433
Kovai ( south) Reyaz 9865140287
9443574836
velure Fiyaz 9842132958
Darmapuri Jahangeer Basha 9443212388





















































29.5.08

SSCL, OSLC (X STD) தேர்வு முடிவுகள் இன்று

10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை 30-05-2008 காலை 9.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிடுகிறார்.
இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

http://tnresults. nic.in
www.indiaresult. com
www.tnresults. nic.in
www.dge2.tn. nic.in
www.dge3.tn. nic.in
www.worldcolleges. info
www.iteducationjobs .com
www.dinamalar. com
www.webulagam. com
www.timeschennai. com
www.chennaivision. com
www.indiaresults. com
www.tnagar.com
www.results. sify.com
www.squrebrothers. com
www.results. southindia. com
www.worldcolleges. info
நன்றி
S.M. Arif Maricar
http://www.tmcaonli ne.com
http://arifmaricar. blogspot. com

__._,_.___

26.5.08

முஸ்லிம்களின் கல்வி-பொருளாதார நிலை ஓர் ஆய்வு

கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லிம்சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமுகம் கடைசி நிலையில் உள்ளது.
2006-ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லிம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள். 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%, +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள்4.4%, பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே, 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்லிம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லிம்கள் தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.இதுதான் முஸ்லிம்சமூகத்தின் தற்போதைய நிலை, இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்சமுதாயம் மிகவும் பின் தங்கிவிடும்.
சில பெற்றோர்கள் உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக படிக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதன் அபாயத்தை அவர்கள் உணர்வதில்லை, இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இடத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது, இதனால் வீட்டு வாடைகையும் உயர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் நாம் சம்பாதிக்கும் 3 ஆயிரம், 5ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்றது இதனால் முஸ்லிம்கள் நிரந்தர நரகத்திற்கு அனுப்பும் வட்டியில் சிக்க நேரிடும், மேலும் பொருளாதார தேவையால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துவிடும்.கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும்.
பெரும்பாலான முஸ்லிம்இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இந்தியாவில் வேலை இல்லை என்று இவர்களாக முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல் நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், கணவன் இருந்தும் இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும் இல்லாத நிலையில் வளரும் பிள்ளை, இது முஸ்லிம்சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது.
ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள்.குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லிம்இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லிம்இளைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு. இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லிம்சமுதாயம். இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.
மருத்துவ துறையில் முஸ்லிம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லிம்கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லிம்சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும். மேலும் முஸ்லிம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது . இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லிம்மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.எனவே முஸ்லிம்களே! விழித்து கொள்ளுங்கள்! இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள்.
படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
யார் காரணம்?
இந்த அவலநிலைக்கு முஸ்லிம்களை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?முஸ்லீம் அரசியல் வாதிகள்:-
முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம்அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லிம்சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் :-
முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்லிம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆலிம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லியாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள்.
இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், ஷிர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.
சமுகத்தில் படித்த கல்வியாளர்கள் சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.
கல்விக் கூடம் நடத்துபவர்கள்: அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லிம்மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதில்லை. ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள்: உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.
ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லிம்களை தனிமை படுத்தி முஸ்லிம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள்( பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லிம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.
அதிகாரிகள், அரசியல் வாதிகள் பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லிம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
தீர்வு என்ன? பல்வேறு முஸ்லிம்அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான்.
முஸ்லிம்இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லிம்அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.
அனைத்து முஸ்லி்ம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும்.படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணக்காரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.
பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள கல்வி உதவி அமைப்புகளை பற்றிய தகவல்களையும் சேகரித்துள்ளோம்.
உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும்.
“”எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை .” அல்-குர்ஆன்(8:53)
நன்றி : தஞ்சை தவ்ஹீத் மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை

Tamilnadu SSLC Results 2008

Tamilnadu SSLC Results 2008

Posted using ShareThis

IAS தேர்வு முடிவுகள்

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ உமர் on Sunday, May 25th, 2008 (1 hour ago)
ஐ.ஏ.எஸ். (இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ். (இந்திய பாதுகாப்புப் பணி), ஐ.எஃப்.எஸ் (இந்தியாவின் வெளிவிவகார பணி) உள்ளிட்ட அகில இந்திய அளவிலான அதிகாரிகளாக பணிபுரியக் கூடிய வேலைக்கு மத்திய அரசு தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி) ஆண்டு தோறும் முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த வருடம் 27 முஸ்லிம்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள். தமிழ்நாடு அளவில் வெற்றி பெற்ற அனைவர்களில் சென்னையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் மர்யம் பர்ஸானா சாதிக் 30வது ரேங்க் எடுத்து தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளார். முஸ்லிம்கள் 27 பேரிலும் பர்ஸானாவே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்றவர்களில் கோவையை சேர்ந்த அஜிதா பேகம் மற்றொரு முஸ்லிம் பெண் ஆவார்.
மர்யம் பர்ஸானா சாதிக், முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வி அடைந்தார். அடுத்த முறையில் மெயின் தேர்வு வரை மட்டுமே அவரால் செல்ல முடிந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சியில் இறங்கினார். 3-வது வாய்ப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
2007-ம் ஆண்டு மே மாதம் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் விண்ணப்பித்த 3 லட்சத்து 27 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 469 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். மெயின் தேர்வுக்கு 9 ஆயிரத்து 266 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 670 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மெயின் தேர்வில் இருந்து 1,886 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 210 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நேர்முகத் தேர்வு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்தில் மார்ச் 31-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை நடந்தது.
இத்தேர்வில் அகில இந்திய அளவில் மொத்தம் 734 பேர் வெற்றிப் பெற்றுள்ளார்கள். இவர்களின் 580 பேர் ஆண்கள். 154 பேர் பெண்கள். மொத்தமுள்ள 734 பேரில் 286 பேர் பொதுப் பிரிவினர். இவர்களில் 12 பேர் உடல் ஊனமுற்றவர்கள். 266 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இவர்களில் 5 பேர் உடல் ஊனமுற்றோர். 128 பேர் ஆதிதிராவிடர்கள். அவர்களில் 5 பேர் உடல் ஊனமுற்றவர்கள். 54 பேர் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்.
இந்திய அரசின் ஆட்சிப் பணிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் மிகக் குறைவானதாகும். ஆட்சிப் பணிகளில் சுமார் 3 சதவீதமும், வெளி விவகார பணிகளில் 1.8 சதவீதமும் இந்திய பாதுகாப்புப் பணிகளில் 4 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள். கடந்த வருடம் ஐ.ஏ.எஸ் தேர்வில் மொத்தம் தேர்ச்சி பெற்ற 474 பேரில் முஸ்லிம்கள் 17 பேர் மட்டுமே. அதாவது கடந்த வருடம் முஸ்லிம்களின் தேர்ச்சி விகிதம் 3.58 சதவீதம்.
இந்த வருடம் மொத்தம் 734 பேரில் 27 பேர் முஸ்லிம்கள். அதாவது 3.67 சதவீதமாகும். சதவீதத்தில் கடந்தை வருடத்தை ஒப்பிடும் போது அதிக மாற்றம் இல்லையென்றாலும் வளர்ச்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வழிமுறைகள்
இத்தேர்விக்கான நாள் மற்றும் விண்ணப் படிவங்கள் ஆகியவை ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் மாத எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பத்திரிக்கையில் வெளியாகும். இத்தேர்வுகள் முதலில் முதல்நிலைத் தேர்வு என்றும் அதைத் தொடர்ந்து மெயின் தேர்வு என்றும் அடுத்து நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடைபெறும். மெயின் தேர்வில் பெற்ற உச்ச மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுவர். இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒருவர் தொடர்ந்தார் போல இவை அனைத்திலும் தேர்ச்சி அடைந்து செல்ல வேண்டும். உதாரணமாக ஒருவர் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வில் தோல்வி அடைவாரேயானால் மீண்டும் அவர் முதல்நிலைத் தேர்விலிருந்து தொடர வேண்டும்.
இறுதியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், தனித் திறமைகள் மற்றும் உடல் ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கண்ட துறைகளில் அமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கழைக்கழகத்தின் மூலமோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமோ அல்லது UGC Act 1956 ஆணையின் கீழ் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலமோ பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு இணையான கல்விச் சான்றிதழைப் பெற்றிருத்தல்.
பட்டப் படிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் மெயின் தேர்வு எழுதச் செல்லும் போது அவர்களின் தேர்ச்சி பெற்ற கல்விச் சான்றிதழ்களின் நகல்களை சமர்பிக்க வேண்டும்.
விதிவிலக்காக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் கலந்து கொள்ள அனுமதிச் சான்றிதழ் பெற்றவர்களும் இதில் பங்கு கொள்ளலாம்.
பட்டப்படிப்புகளுக்கு இணையான இதர டிப்ளமோ சான்றிதழ்கள் பெற்றவர்களும் இதில் அனுமதிக்கப்படுவர்.
MBBS இறுதியாண்டு தேர்ச்சி பெற்றவர்களும், அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்பு சான்றிதழ் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் இறுதியாண்டின் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் முதல்நிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
- செய்தித் தொகுப்பு: அபூ உமர்
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முதலில் தன்னம்பிக்கை வேண்டும். நல்ல வழிகாட்டுதல் தேவை. அத்துடன் ஒரே மனதுடன் திட்டமிட்டு படிக்க வேண்டும். அப்படி படித்தால் யார் வேண்டுமானாலும் இந்த தேர்வில் வெற்றி பெற்று விடலாம். கலெக்டர் ஆக வேண்டும் என்பது எனது சிறுவயது ஆசை. ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பொது அறிவுதான் அடிப்படை தேவை. இதற்காக டி.வி.யில் செய்தியை தவறாமல் கேட்பேன்.
-மர்யம் பர்ஸானா சாதிக்
நன்றி: இஸ்லாம் கல்வி டாட்கம்

18.5.08

கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு இலவச ஆலோசனைகள்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம் எதிர்காலத்தில் எல்லா வகையிலும் உயர்வு பெற்ற சமுதாயமாகத் திகழ, பரந்த நோக்குடன் பல்வேறு திட்டங்களுக்கு நல்வழிகாட்டுகிறது தஞ்சை வல்லத்தில் கடந்த மே 10, 11 ஆகிய தேதிகளில் நடை பெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு.
மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் பல்வேறு வழிகாட்டுதல்கள் தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்குங்கள். உங்களைச் சார்ந்தோர் அனைவருக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு


திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்றுஇஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கியமாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடுமே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.
சிறப்பு நிகழ்வுகள்
கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு
தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Themeof the Conference ) இருக்கும்.
1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்டமுஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்
பேராளர் :
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமேபேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்துதரப்படும்.
பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை
கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்துஅனுப்ப வேண்டும்.கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
மாநாட்டுச் சிறப்பு மலர் :
சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்குமிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்வரவேற்கப்படுகின்றன.
விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்
மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ
ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000
மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரக் குழு
அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்
வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAMஎன்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )
செயல்திட்டங்கள்
1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ‘இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்பண்பாட்டு இருக்கை’யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக ‘இஸ்லாமிய ஆய்வு இருக்கை’யைபிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.
3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி ‘மாயின்அபூபக்கர்’ பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒருபல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.
5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.
8. இவ்வாண்டும் ‘அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபாஅறக்கட்டளை’ சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்வழங்கப்படுகிறது.
9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மதுஅவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.
10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.
நூல் வெளியீடு
மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கவேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்அனுப்பி வைக்க வேண்டும்.
நூல் அன்பளிப்பு
பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
அரிய நூல் பதிப்பு
இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்வெளியிடப்படவிருக்கின்றன.
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
சிறப்பு நெறியாளர்கள்
பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்
நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்
அமீரக ஒருங்கிணைப்பாளர்
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433
விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :
எஸ்.எம். ஹிதாயத்துல்லாபொதுச்செயலாளர்இஸ்லாமிய இலக்கிய கழகம்எண் 27 உட்ஸ் சாலைஅண்ணா சாலைசென்னை 600 002தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067
மாநாட்டுப் புரவலர்கள்
1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர் தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர் தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )
———- Forwarded message ———-From: Anwar Zamaan <anwar.zamaan@gmail.com>Date: Fri, Mar 21, 2008 at 3:50 PMSubject: Please publish in the internet ALL Tamil Muslims forumsTo: muduvaihidayath@gmail.com
ISLAAMIYA ILAKKIYA KAZHAKAM.MAANILA MAANAADU, TRICHY.MAY 18, 2008
Please publish in the internet ALL Tamil Muslims forums.
இம் மாநாட்டை முன்னின்று நடத்தும் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் S.M. ஹிதாயத்துல்லாஹ் அவர்களும். அமீரக ஒருங்கிணைப்பாளர் முத்துப்பேட்டை M. அப்துல் ரஹ்மான் அவர்களும் நமது ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் என்பது நம் பள்ளிக்கும் நமக்கும் பெருமையளிக்கும் செய்தியாகும்.

12.5.08

எந்த கல்லூரியில் என்ன படிக்கலாம்?

எந்த கல்லூரியில் எந்த படிப்பில் சேரலாம் என்பது பற்றிய கண்காட்சிசென்னை பல்கலைக்கழகத்தில் 19-ந்தேதி தொடங்குகிறது
விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிக்கும் கண்காட்சி சென்னை பல்கலைக்கழகத்தில் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. கல்வி கண்காட்சி
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது. அடுத்து கலை அறிவியல் கல்லூரிகளில் என்ன படிப்பை படிக்கலாம் என்று மாணவர்கள் எண்ணம் அலை மோதும் நிலை இப்போது உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்கள் அவர்களின் மார்க்கு தகுதிக்கு ஏற்ப, பொருளாதார வசதிக்கு ஏற்ப எந்த கல்லூரியில் எந்த படிப்பை படிக்கலாம், எந்த படிப்பை படித்தால் வேலைவாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள சென்னை பல்கலைக்கழகம் கண்காட்சி நடத்த உள்ளது.
இந்த கண்காட்சி 19-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடை பெற உள்ளது. இதற்காக சென்னை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகள் சென்னை பல்கலைக்கழகத்தில் அரங்குகள் அமைத்து என்ன பாடப்பிரிவுகள் அவர்கள் கல்லூரியில் இருக்கின்றன, அதற்கு கட்டணம் எவ்வளவு என்பது பற்றிய முழுவிவரமும் தெரிவிப்பார்கள்.
விண்ணப்பங்களை பெறலாம்
பிளஸ்-2 படித்த மாணவர்கள், மாணவிகள் கண்காட்சியில் கலந்து கொண்டு அவர்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தை எடுத்து படிக்க விண்ணப்பங்களை வாங்கிச்செல்லலாம். கல்லூரி நடைமுறைக்கு ஏற்ப கல்லூரியில் சேர்ந்து விடலாம்.
இது மாணவர்கள் நலன் கருதி இதற்கான ஏற்பாட்டை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ராமச்சந்திரன் செய்துள்ளார்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.
நன்றி :சற்றுமுன்

10.5.08

முதுவை ஹிதாயத்: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - ஒரு பார்வை

முதுவை ஹிதாயத்: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - ஒரு பார்வை

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிய ஒரு இணைய தளம்
http://sarugu.com/hsc/

தமிழக +2 தேர்வு முடிவுகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிய
இங்கே கிளிக்கவும்