முத்துப்பேட்டையில் கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி !
ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாடு !!
முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் அரசுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கொய்யா மஹாலில் 07.06.2008 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை நகரைச் சேர்ந்த மாணவர்களில் பிளஸ் டூ தேர்வில் 900 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும், பத்தாம் வகுப்புத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.
முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் தலைவர் எம்.எம்.எம். பஷீர் அஹமது தலைமை தாங்குகிறார். அனைத்துப்பள்ளிவாசல் தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சட்ட ஆலோசகர் எல். தீன் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். சிறப்பு விருந்தினர்களாக மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்கின்றனர்.
பொதுச்செயலாளர் டாக்டர் எம். முஹம்மது மீரா லெப்பை தொடக்கவுரை நிகழ்த்துகிறார்.
பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கமலாவதனம், ஒன்றியப் பெருந்தலைவர் மா.கல்யாணசுந்தரம், பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் ஏ. ஜான் லூயிஸ், உதவி காவல் கண்காணிப்பாளர் ஏ. பிரவீன் குமார் அபினபு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
ரஹ்மத் அறக்கட்டளையின் எம்.ஏ. முஸ்தபா, தஞ்சை நேஷனல் ஃபார்மா ஐ. கமால் பாட்சா, வல்லம் அல் இஸ்லாம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முஹம்மது சுகர்னோ, புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குநர் ஏ.கே.எல்.எல். முஹம்மது மன்சூர், டாக்டர் கே. இளங்கோ, அல்மஹா அறக்கட்டளை எஸ்.எம். ஹைதர் அலி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேன்ந்திரன், மகளிர் தலைமையாசிரியர் லெட்சுமி பிரபா, ரஹ்மத் பள்ளி முதல்வர் ஆர். சகுந்தலா, பிரிலியண்ட பள்ளி முதல்வர் முஹம்மது யாக்கூப், வின்னர்ஸ் பள்ளி முதல்வர் தமிழ்மாமணி ஹெச். முஹம்மது ரஷீத், சரஸ்வதி பள்ளி முதல்வர் ஆர் சுவாமிநாதன் உள்ளிட்ட பள்ளி முதல்வர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கின்றனர்.
'உங்கள் பலத்தை உணருங்கள்' எனும் தலைப்பில் ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளி அரபிதுறை தலைவர் எம். செய்யது அலி பாகவி சிறப்புரை நிகழ்த்துகிறார்.
பொருளாளர் எம்.கே.என். ஜஹபருல்லாஹ் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
தொடர்புக்கு : 98 650 43 981 / 98 425 47437 / 99 423 82807
இதுபோன்ற கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடத்தப்பட்டு சமுதாய மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.

-----------------------------------------------------
நன்றி: aimantimes@yahoogroups.com
0 comments:
Post a Comment