19.9.08

I.A.S தேர்வு அரசு பயிற்சி மையத்தில் சேர நுழைவுத் தேர்வு


ஐ.ஏ.எஸ். தேர்வு: அரசு பயிற்சி மையத்தில் சேர நுழைவு தேர்வு
சென்னை, செப். 18: ஐ.ஏ. எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையத்தில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மைதிலி கே. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி:
இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.), இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் சென்னை அண்ணா நகரில் இயங்கி வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. முழு நேர மற்றும் பகுதி நேர பயிற்சிக்கு 21 வயது நிரம்பிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பைச் சார்ந்த பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 9 - ம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தருமபுரி, மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் செப்டம்பர் 30.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர், அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையம், அண்ணா நகர், சென்னை - 40. __._,_.___
நன்றி: முதுவை ஹிதாயத்
"Muduvai Hidayath" muduvaihidayath@gmail.com

0 comments: