கடந்த 13.12.2009 அன்று விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி சார்பாக மாபெரும் கல்வி கருத்தரங்கம் நடத்தப்பட்டது இதில் விழுப்புரம் மாவட்ட தலைவர் சகோ. சாகுல் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த கல்வி கருத்தரங்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டல மாணவர் அணி செயலாளர் சகோ.கலீல்லூர் ரஹ்மான் கல்வியின் அவசியத்தைப் பற்றியும் மாணவரனியின் செயல்பாடுகள் மற்றும் நோக்கத்தை பற்றியும் உரை நிகழ்த்தினார். பிறகு மாநில மாணவர் அணி செயலாளர் சகோ.சித்திக் அவர்கள் "அதிக மதிப்பென் பெறுவது எப்படி? " என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதன் பிறகு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மாநில மாணவர் அணி செயலாளர் சகோ.சித்திக் அவர்கள் பதில் அளித்தார். இறுதியாக அழைப்பு பணியின் அவசியம் மற்றும் கல்வி பணியின் அவசியம் பற்றி சகோ. சித்திக் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி கல்வி கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.
இதில் பல மாணவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியுடன் இனைந்து அழைப்பு பணியில் ஈடுபடுவதாக வாக்குறுதி அளித்தனர்.
நன்றி
T.H.Khaleelur Rahman
இதில் பல மாணவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியுடன் இனைந்து அழைப்பு பணியில் ஈடுபடுவதாக வாக்குறுதி அளித்தனர்.
நன்றி
T.H.Khaleelur Rahman
0 comments:
Post a Comment