15.6.08

சிறுபான்மை இன மாணவ மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள்

கடலூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் வழங்கப்படும் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையினர் (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் மற்றும் புத்தமதத்தினர்) மாணவ, மாணவிகளுக்கு 2008-2009 ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பப்படிவங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 30-ந்தேதி என்று மத்திய, மாநில அரசு தெரிவித்துள்ளது.
30-ந்தேதிக்குள்
எனவே உரிய விண்ணப்பங்களை சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு 30-ந்தேதிக்குள் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த உதவித் தொகைக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து கல்வி உதவித்தொகை பற்றிய விவரங்களை [ www.minorityaffairs.gov.in www.tn.gov.in/bcmbcmw/doc என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை பரிந்துரை செய்யும் படிவத்தில் அறிக்கையை தொகுத்து (குறுந்தகட்டுன்) 15-7-08 க்கும் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு (DBC & MWO) அறிக்கையை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
லால்பேட்டை இனைய தளம்
நன்றி தினத் தந்தி

0 comments: