தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி வழங்கிய முன்னாள் மாணவன்
காரைக்குடி அருகே தான் படித்த பள்ளிக்கு பெரும் நிதியுதவி செய்த முன்னாள் மாணவனை ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பெரிதும் பாராட்டினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ளது கல்லல். இங்குள்ள பிரிட்டோ பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் கல்லல் தமிழன் தெருவை சேர்ந்த மாயன் மகன் பரிமளம். பொறியியற் பட்டதாரியான இவர் ஐக்கிய அரபு குடியரசு நாடான அபுதாபியில் ஒரு நிறுவனத்தினை துவக்கி அதில் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
கல்லல் பிரிட்டோ பள்ளியின் பழைய மாணவரான இவர் தான் பயின்ற பள்ளிக்கு ரூ 30 ஆயிரம் மதிப்பில் குடிஞிர் தொட்டி, மின் மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் ஆகியவற்றை வழங்கியதுடன் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களையும் வழங்கினார். மேலும் ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கலையரங்க மேடையும் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சேவியர், பள்ளி நிர்வாகி தைனீஸ், அ.தி.மு.க பிரமுகர் அறிவாளன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.

நன்றி: சற்றுமுன்
0 comments:
Post a Comment