சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 1,72,445 பொறியியல் இடங்களில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.
இதில் நேற்று வரை 1 லட்சத்துக்கும் அதிகமான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க நாளையே (மே 31) கடைசி தினமாகும்.
பி.இ. படிப்பில் சேர மாணவர்கள் அனுப்பிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து விட்டதா என்பதை www.annauniv.edu இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் வரும் ஜூன் 18ம் தேதி வெளியிடப்படும். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

நன்றி-THASTAMIL
0 comments:
Post a Comment