20.6.08

கல்விக்கு உதவ காத்திருக்கிறார்கள்

உயர்கல்வி பயில பெரும் செல்வந்தராக இருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
நன்றாகப் படித்து அதிக மதிப் பெண் பெற்று சாதனை புரியுங்கள் மாணவர்களே. உயர்கல்வி பயில ஆர்வத்துடன் இருக்கும் உங்களுக்காக உதவிக்கரம் நீட்ட சமுதாயத்தின் எத்தனையோ செல்வந்தர்கள் தயாராக இருக்கிறார்கள். பல்வேறு உதவிநல அமைப்புகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேதிக விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

15.6.08

சிறுபான்மை இன மாணவ மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள்

கடலூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் வழங்கப்படும் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையினர் (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் மற்றும் புத்தமதத்தினர்) மாணவ, மாணவிகளுக்கு 2008-2009 ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பப்படிவங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 30-ந்தேதி என்று மத்திய, மாநில அரசு தெரிவித்துள்ளது.
30-ந்தேதிக்குள்
எனவே உரிய விண்ணப்பங்களை சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு 30-ந்தேதிக்குள் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த உதவித் தொகைக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து கல்வி உதவித்தொகை பற்றிய விவரங்களை [ www.minorityaffairs.gov.in www.tn.gov.in/bcmbcmw/doc என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை பரிந்துரை செய்யும் படிவத்தில் அறிக்கையை தொகுத்து (குறுந்தகட்டுன்) 15-7-08 க்கும் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு (DBC & MWO) அறிக்கையை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
லால்பேட்டை இனைய தளம்
நன்றி தினத் தந்தி

13.6.08

தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி வழங்கிய முன்னாள் மாணவன்

தான் படித்த பள்ளிக்கு நிதியுதவி வழங்கிய முன்னாள் மாணவன்
காரைக்குடி அருகே தான் படித்த பள்ளிக்கு பெரும் நிதியுதவி செய்த முன்னாள் மாணவனை ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பெரிதும் பாராட்டினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ளது கல்லல். இங்குள்ள பிரிட்டோ பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் கல்லல் தமிழன் தெருவை சேர்ந்த மாயன் மகன் பரிமளம். பொறியியற் பட்டதாரியான இவர் ஐக்கிய அரபு குடியரசு நாடான அபுதாபியில் ஒரு நிறுவனத்தினை துவக்கி அதில் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.
கல்லல் பிரிட்டோ பள்ளியின் பழைய மாணவரான இவர் தான் பயின்ற பள்ளிக்கு ரூ 30 ஆயிரம் மதிப்பில் குடிஞிர் தொட்டி, மின் மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் ஆகியவற்றை வழங்கியதுடன் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களையும் வழங்கினார். மேலும் ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கலையரங்க மேடையும் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சேவியர், பள்ளி நிர்வாகி தைனீஸ், அ.தி.மு.க பிரமுகர் அறிவாளன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.
நன்றி: சற்றுமுன்

சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அரசு அறிவிப்பு

சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
அரசு அறிவிப்பு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சிறுபான்மையினர் மாணவ மாணவியர் களுக்கு பள்ளிப்படிப்பு தொடர்பான கல்வி உதவித்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மத்திய அரசால் வெளியிடப்பட்ட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை மத்திய மாநில அரசின் நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 15340 சிறுபான்மையின மாணவ மாணவியர்க்கு நடப்பு 2008-2009 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் ஏழாயிரத்து முந்நூற்றி இருபது முஸ்லிம் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள்:
மாணவ மாணவிகள் பள்ளி இறுதித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண் களுக்கு குறையாமல் பெற்றிருத்தல் வேண்டும். முதல் வகுப்பு மாணவ மாணவியர்கள் வருமான வரம்பு இருத் தல் போதுமானது. பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 2008 லி 2009 ஆம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது. இந்த ஒதுக்கீட்டில் 30 விழுக்காடு மாணவியர்களுக்கு வழங்கப்படும். போதுமான மாணவியர்கள் இல்லாத பட்சத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர் களுக்கு வழங்க இயலாது. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். மாணவ மாணவியர் களின் வருகை சீராக இருக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் இது தொடர்பாக வருமான சான்று ரூ.10 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத் தாளில் இணைய தளத்தில் உள்ள மாதிரி படிவத்தின் படி ஆச்ச்ண்க்ஹஸ்ண்ற் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இக்கல்வி உதவித் தொகையில் சேர்க்கை, கற்பிப்பு மற்றும் பராமரிப்புக் கட்டணங்களில் உள்ளபடியான தொகை அல்லது உதவித் தொகை, இதில் எது குறைவானதோ அது வழங்கப்படும் இதன் படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான சேர்க்கை கட்டணம் விடுதியில் தங்கி படிப்பவர், விடுதியில் தங்காது படிப்பவர் என இரு பிரிவினருக் கும் தலா ரூ.500 மட்டும் வழங்கப்படும். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான கற்பிப்பு கட்டணம் அதிகப்பட்சமாக ஒரு மாதத்திற்கு ரூ.350 மட்டும் வழங்கப்படும்.
பராமரிப்புக் கட்டணமாக 10 மாதங்கள் மட்டும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு விடுதியில் தங்கி பயில்பவருக்கு 10 மாதங்களுக்கு, மாதத்திற்கு ரூ. 600 வழங்கப்படும். விடுதியில் தங்காது பயில்பவருக்கு 10 மாதங்களுக்கும் ரூ.100 வீதம் மாதம் தோறும் வழங்கப்படும். இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் 30.06.2008க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப் படிவம் www.minority affairs.gov.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.tmmk.in/
This post was submitted by முதுவை ஹிதாயத்.
நன்றி: சற்றுமுன்

12.6.08

வழக்கறிஞராக ஆசையா?


சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் ,மனித உரிமையை நிலை நாட்டும் வழக்கறிஞராக ஆசையா? உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது.+2 மற்றும் டிகிரி முடித்த மாணவர்கள் தொடர்பு கொள்ளவும்.டிகிரி முடித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை,முதலில் தொடர்பு கொள்ளும் பத்து மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் கட்டணத்தை மாணவரணி ஏற்றுக் கொள்ளும். (இன்ஷா அல்லாஹ்..)
தொடர்புக்கு....வழக்கறிஞர்.மு.ஜைனுல் ஆபிதின்.(மாநில மாணவரணி செயலாளர்)தொடர்பு எண் : 9994292932

அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம்(ஜூன்) 13லிந் தேதி விண்ணப்பம் அனுப்ப கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டில் நெல்லை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 6 இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர சேலத்தில் தனியார் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. சென்னையில் பி.ஏ.,பி.எல்(ஹானர்ஸ்) என்ற 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான கல்லூரி ''ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் இன் லா'' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு பி.எல் சட்ட படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு டாக்டர்.அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிளஸ்லி2 முடித்த மாணவர்கள் இந்த படிப்பில் சேரலாம். பி.எல் படிப்புக்கான விண்ணப்பங்களை அனைத்து சட்டக்கல்லூரி முதல்வரிடம் இருந்து மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பங்களை பெற ''பதிவாளர், தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம்'' என்ற பெயரில் 400 ரூபாய்க்கு டி.டி எடுத்து சட்டக்கல்லூரி முதல்வரிடம் கொடுத்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தபா­ல் பெற 450 ரூபாய்க்கு டி.டி எடுத்து ''பதிவாளர், தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம், பூம்பொழில், 5, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600028'' என்ற முகவரிக்கு கடிதம் எழுதி பெற்றுக்கொள்ளலாம்.
பி.ஏ.,பி.எல்(ஹானர்ஸ்) படிப்புக்கு நேரடியாக விண்ணப்பங்களை பெற 500 ரூபாய்க்கு டி.டி எடுக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற 550 ரூபாய்க்கு டி.டி எடுத்து அனுப்ப வேண்டும்.
28.5.2008 தேதிக்கு பின்னர் எடுக்கப்பட்ட டி.டிக்கள் தான் செல்லுபடியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க அடுத்த மாதம்(ஜூன்) 13லிந் தேதி கடைசி நாள் ஆகும். 3 ஆண்டு சட்டப்படிப்புக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்,
நன்றி: www.tmmkonline.org

ஜூலை 11-ந்தேதி என்ஜினீயரிங் கவுன்சிலிங்


தொழிற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அட்டவணை அறிவிப்பு ஜூலை 11-ந்தேதி என்ஜினீயரிங் கவுன்சிலிங்
என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான கவுன்சிலிங்கையும் முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியான மறுநாளில் (10-ந்தேதி) இருந்தே என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் தாமதமாக வெளிவந்தன. இதனால் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் மே 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதி வாய்ப்பு எண் (ரேண்டம் நம்பர்) வழங்கப்படுகிறது (ஒரே கட் ஆப் மார்க்கினை ஒனறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பெறும் சூழ­ல் முன்னுரிமை அளிக்க வசதியாக இந்த ரேண்டம் நம்பர் கொடுக்கப்படுகிறது). ரேங்க் பட்டியல் ஜூன் 25-ந் தேதி வெளியிடப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ஜூலை 3-ந்தேதி என்ஜினீயரிங் கவுன்சலிங் தொடங்குகிறது. முதல் நாளான அன்றைய தினம், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. தொழிற்கல்வி (வொகேஷனல்) பாடத்திட்ட மாணவர்களுக்கான கவுன்சலிங், ஜூலை 4லிந் தேதி தொடங்கி, ஜூலை 8லிந் தேதி வரை நடக்கிறது.
வெளிமாநில மாணவர்களுக்கான கவுன்சி­ங், ஜூலை 9லிந் தேதி நடைபெறுகிறது. உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சி­ங் ஜூலை 10லிந் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கவுன்சி­ங் ஜூலை 11லிந் தேதியும் நடக்கிறது. ஆகஸ்டு 31லிந் தேதி கவுன்சி­ங் முடிவடைகிறது.
எம்.பி.பி.எஸ்லிபி.டி.எஸ். கவுன்சி­ங்
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது. விண்ணப்பங்களை பெறுவதற்கும், சமர்ப்பிப்பதற்கும் கடைசி நாள் ஜூன் 17லிந் தேதி ஆகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 18லிந் தேதி மதியம், வாய்ப்பு எண் (ரேண்டம் நம்பர்) வழங்கப்படுகிறது. ரேங்க் பட்டியல் ஜூன் 28-ந் தேதி வெளியிடப்படுகிறது.
முதல்கட்ட கவுன்சி­ங் ஜூலை 4-ந் தேதி தொடங்குகிறது. அது ஜூலை 11-ந் தேதி முடிகிறது. முதல் கட்ட கவுன்சி­ங்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தத்தம் வகுப்புகளில் சேர கடைசி தேதி ஜூலை 21 ஆகும். இவர்களுக்கு ஆகஸ்டு 4லிந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சி­ங், ஆகஸ்டு 25லிந் தேதி தொடங்குகிறது. இது ஆகஸ்டு 28லிந் தேதி வரை தொடர்ந்து நடக்கும். இரண்டாம் கட்ட கவுன்சி­ங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், வகுப்புகளில் சேர 'ஆகஸ்டு 30' கடைசி தேதி ஆகும். அனைத்து பிரிவுகளுக்குமான சேர்க்கை செப்டம்பர் 30லிஆம் தேதியுடன் நிறைவடையும்.
என்ஜினீயரிங் கவுன்சலிங்குக்காக வெளியூரில் இருந்து சென்னைக்கு பஸ் மற்றும் ரெயில்களில் வரும் மாணவர்களுக்கு, கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பயணக் கட்டணம் (வந்து போகும் செலவு) கிடையாது.
(24.05.2008) அன்றைய நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேர 11/2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் வாங்கிச் சென்றுள்ளனர். இதில், 20 ஆயிரம் பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டனர். மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் இருப்பது போல் இந்த ஆண்டும் 16 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,645 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 247 இடங்கள் சென்றுவிடும். தருமபுரியில் புதிய மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டில் வரும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு தொழில் படிப்புகளில் சிறுபான்மைப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடு திட்டம் அமல்படுத்தப்படும். மொத்தம் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 410 இடங்களில், அரசு ஒதுக்கீட்டுக்கு 251 இடங்கள் கிடைக்கும். இவையும் கவுன்சி­ங் மூலம் நிரப்பப்படும்.
தனியார் சுயநிதி தொழில்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட நீதிபதி பாலசுப்பிரமணியம் கமிட்டி அறிக்கை, அடுத்த வாரத்தில் (திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும்.
கூடுதலாக 1,440 என்ஜினீயரிங் இடங்கள்
தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 65 சதவீதமும், நிர்வாக ஒதுக்கீடு 35 சதவீதமும் அளிக்கப்படும். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் தலா 50 சதவீதம் பகிர்ந்து கொள்ளப்படும். இதுதவிர, இந்த ஆண்டு தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 360 இடங்கள் உள்பட மொத்தம் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில், 1,440 இடங்கள் கூடுதலாக அதிகரிக்கும்.
புதுபிரிவு பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்'
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் என்ற புதிய படிப்பு தொடங்கப்படுகிறது. இந்த ஆண்டில் மொத்தத்தில் 4 புதிய படிப்புகள் தொடங்கப்படுகின்றன..அடுத்த ஆண்டு முதல் ஆன்லிலைனிலேயே (இன்டர்நெட் மூலமாக) அறிவியல் மற்றும் கலை பிரிவு பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். என்ஜினீயரிங் பாடங்களுக்கு இவ்வாண்டில் இருந்தே விண்ணப்பங்களை வினியோகிக்க முடியும்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடு அமல்
தமிழகத்தில் என்ஜினீயரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேர சிறுபான்மையின மக்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் (முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், கிறித்தவர்களுக்கு 3.5 சதவீதமும்) என்று அரசு அறிவித்தது. இது இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட முஸலிம்களுக்கும் தலா 49 இடங்கள் ஒதுக்கப்படும் (என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒதுக்கப்படும். இடங்கள் பின்னர் தெரியவரும்).
ரேண்டம் நம்பர் என்றால் என்ன?
என்ஜினியரிங், மருத்துவம் விண்ணப்பித்úத்ôருக்கு, 'ரேண்டம் நம்பர்' என்று ஒரு எண் ஒதுக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் உத்தேசமாக ஒதுக்கப்படும் அந்த எண், 6 அல்லது 7 இலக்கம் கொண்டவையாகும். ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு கட்லிஆப் மார்க் சமமாக வரும் பட்சத்தில் முதலில், மாணவர்களின் கணித மதிப்பெண்களின் கணித மதிப்பெண் (மருத்துவ படிப்பாக இருந்தால் உயிரியல்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணும், ஒருவேளை அதுவும் சமமாக இருந்தால் வேதியியல் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பெரும்பாலும் இந்த நிலையிலேயே முடிவு தெரிந்துவிடும்.
ஒருவேளை, வேதியியல் மதிப்பெண்ணும் சமமாக இருந்துவிட்டால், மாணவர்களின் பிறந்த தேதியை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வயதில் மூத்தவருக்கு அதுவும், சமமாக இருந்து விட்டால் கடைசியாக முன்பு ஒதுக்கபட்ட ரேண்டம் நம்பரை பார்ப்பார்கள். யாருடைய நம்பர் குறைந்த மதிப்பில் உள்ளதோ (உதாரணத்துக்கு 1,00000, 2,00000 என்று இருந்தால் அதில் 1,000000 எண் உள்ள மாணவருக்கு சீட் அளிக்கப்படும்) இதுவே ரேண்டம் எண் எனப்படுகிறது.
நன்றி: http://www.tmmkonline.org/news/999889.htm

7.6.08

அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை

சிறுபான்மை இன மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பெளத்தர்கள் ஆகியோர் சிறுபான்மையினர் ஆவர். இச்சிறுபான்மை இனத்தவரைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர உதவித் தொகை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சிறுபான்மையினராகிய நமது முஸ்லிம் சமுதாயத்தின் தகுதி உள்ளவர்கள், உரிய முறையில் அணுகி அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

திட்டம் பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்.

மாதிரி விண்ணப்பப் படிவம் பெற இங்கே கிளிக்கவும்

6.6.08

மாணவர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு

முத்துப்பேட்டையில் கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி !
ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாடு !!

முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் அரசுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற சமுதாய மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கொய்யா மஹாலில் 07.06.2008 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை நகரைச் சேர்ந்த மாணவர்களில் பிளஸ் டூ தேர்வில் 900 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும், பத்தாம் வகுப்புத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.
முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் தலைவர் எம்.எம்.எம். பஷீர் அஹமது தலைமை தாங்குகிறார். அனைத்துப்பள்ளிவாசல் தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சட்ட ஆலோசகர் எல். தீன் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். சிறப்பு விருந்தினர்களாக மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்கின்றனர்.
பொதுச்செயலாளர் டாக்டர் எம். முஹம்மது மீரா லெப்பை தொடக்கவுரை நிகழ்த்துகிறார்.
பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கமலாவதனம், ஒன்றியப் பெருந்தலைவர் மா.கல்யாணசுந்தரம், பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் ஏ. ஜான் லூயிஸ், உதவி காவல் கண்காணிப்பாளர் ஏ. பிரவீன் குமார் அபினபு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

ரஹ்மத் அறக்கட்டளையின் எம்.ஏ. முஸ்தபா, தஞ்சை நேஷனல் ஃபார்மா ஐ. கமால் பாட்சா, வல்லம் அல் இஸ்லாம் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முஹம்மது சுகர்னோ, புதுச்சேரி சுற்றுலாத்துறை இயக்குநர் ஏ.கே.எல்.எல். முஹம்மது மன்சூர், டாக்டர் கே. இளங்கோ, அல்மஹா அறக்கட்டளை எஸ்.எம். ஹைதர் அலி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேன்ந்திரன், மகளிர் தலைமையாசிரியர் லெட்சுமி பிரபா, ரஹ்மத் பள்ளி முதல்வர் ஆர். சகுந்தலா, பிரிலியண்ட பள்ளி முதல்வர் முஹம்மது யாக்கூப், வின்னர்ஸ் பள்ளி முதல்வர் தமிழ்மாமணி ஹெச். முஹம்மது ரஷீத், சரஸ்வதி பள்ளி முதல்வர் ஆர் சுவாமிநாதன் உள்ளிட்ட பள்ளி முதல்வர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கின்றனர்.
'உங்கள் பலத்தை உணருங்கள்' எனும் தலைப்பில் ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளி அரபிதுறை தலைவர் எம். செய்யது அலி பாகவி சிறப்புரை நிகழ்த்துகிறார்.
பொருளாளர் எம்.கே.என். ஜஹபருல்லாஹ் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
தொடர்புக்கு : 98 650 43 981 / 98 425 47437 / 99 423 82807
இதுபோன்ற கல்வி ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடத்தப்பட்டு சமுதாய மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.
-----------------------------------------------------
நன்றி: aimantimes@yahoogroups.com

4.6.08

எவ்வளவு மார்க் எடுத்தால் எந்த காலேஜில் சீட் கிடைக்கும்?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி தற்போது கல்வி பற்றிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து ஏற்படுத்தி வருகின்றது. பல மாணவர்கள் தாங்கள் எடுத்த மதிப்பெண்ணிற்கு எந்த கல்லூரியில் சீட் கிடைக்க வாய்பு உள்ளது என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புரங்களில் வசிக்கும் மாணவர்கள் நகர்ப்புரங்களில் உள்ள கல்லூரிகளில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாமல் தவித்து வருகின்றனர். இதை நிவர்த்தி செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாணவர் அணி பல ஆய்வுகள் மேற்கோண்டு ஒரு அட்டவனையை வெளியிட்டுள்ளது.இதில் எவ்வளவு மார்க் எடுத்தால், எந்த மாவட்டத்தில்? எந்த கல்லூயில்? எந்த குரூப் வகை? சீட் கிடைக்கும் என்ற தகவல் வரை மட்டுமில்லாமல் BC, MBC போன்ற காஸ்ட் வாரியாகவும் தெளிவான முறையில் தகவல்கள் இடம் பெற்றுள்ளது என்று மாணவர் அணிச் செயலாளர் எஸ்.சித்தீக் அவர்கள் நமக்கு கூறுகையில தெரிவித்தார்.மாவட்ட வாரியான, தகவல்கள் அட்டவனையாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
(Save Target As)
1.சென்னை
2.கோவை
3.கடலூர்
4.தர்மபுரி
5.திண்டுக்கல்
6.ஈரோடு
7.காஞ்சி
8.கண்யாகுமாரி
9.கரூர்
10.கிருஷ்ணகிரி
11.மதுரை
12.நாகப்பட்டிணம்
13.நாமக்கல்
14.நீலகிரி
15.பெரம்பலூர்
16.புதுக்கோட்டை
17.ராமநாதபுரம்
18.சேலம்
19.சிவகங்கை
20.தஞ்சாவூர்
21.தேனி
22.திருநெல்வேளி
23.திருநின்றவூர்
24.திருவண்ணாமலை
25.திருவாரூர்
26.திருச்சி
27.தூத்துக்குடி
28.வேலூர்
29.விழுப்புரம்
30.விருதுநகர்

1.6.08

ஏழை மாணவர்கள் மேற்கல்வி தொடர நிதியுதவி

மேற்கல்வியைத் தொடர போதுமான பொருளாதார வசதியில்லாமல் நம்மில் பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவலங்கள் இனியும் தொடராது. சமுதாய அக்கரையுடன் பல்வேறு செல்வந்தர்களும், அறக்கட்டளைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயாராக உள்ளன.
அதிக மதிப்பெண் பெற்றும் தொடர்ந்து படிக்க பொருளாதார வசதியற்ற திறமையான மாணவர்கள் உரிய முறையில் கீழ்க்காணும் முகவரிகளைத் தொடர்பு கொண்டால் பல்வேறு நிதி உதவிகளைப் பெற்று மேற்கல்வியைத் தொடரலாம்.