31.5.10

தமிழகத்தில் 2 லட்சம் பி.இ. விண்ணப்பங்கள் விற்பனை



சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 1,72,445 பொறியியல் இடங்களில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.

இதில் நேற்று வரை 1 லட்சத்துக்கும் அதிகமான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க நாளையே (மே 31) கடைசி தினமாகும்.

பி.இ. படிப்பில் சேர மாணவர்கள் அனுப்பிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து விட்டதா என்பதை www.ann​auniv.edu இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் வரும் ஜூன் 18ம் தேதி வெளியிடப்படும். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

                                                                 நன்றி-THASTAMIL

26.5.10

SSLC பத்தாம் வகுப்பு(2010) தேர்வு முடிவுகள்

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார் நெல்லை மாணவி ஜாஸ்மின். இவர் பெற்றுள்ள மொத்த மதிப்பெண் 500க்கு 495. மாஷா அல்லாஹ் . மாணவி ஜாஸ்மின் அவர்களை வாழ்த்துகிறோம்.
தேர்வு முடிவுகள் அறிய இங்கே கிளிக்கவும்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;
4 பேர் 2-வது இடம்
10 பேர் 3-வது இடம்
.
Tirunelveli புதன்கிழமை, மே 26, 10:30 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
 
 நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;
 
 4 பேர் 2-வது இடம்: 10 பேர் 3-வது இடம்

சென்னை, மே. 26-
பத்தாம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு 8.56 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவுகள் இன்று (புதன்) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.

எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநில அளவில் திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் முதல் இடத்தைப்பிடித்துள்ளார். அவர் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவி ஜாஸ்மின் 100க்கு 100 மதிப்பெண் வாங்கி உள்ளார். அவர் ஒவ்வொரு பாடத்திலும் வாங்கியுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 98

மொத்தம் - 495 


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 4 பேர் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

1. கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கே. நிவேதிதா 494 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-
 
தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

2. கரூர் கல்வி மாவட்டம் தலப்பட்டியில் உள்ள பி.ஏ. வித்யாபவன் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். சிவப்பிரியா 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 97

மொத்தம் - 494

3. புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.தமிழரசன் 494 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டவர்களில் ஒருவரா வர். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 98

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

மாணவர் தமிழரசன் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழில் மட்டும் ஓரிரு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்திருப்பார்.

4. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங் கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம். பிரியங்கா 494 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 98

கணிதம் - 98

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடத்தை 10 மாணவ- மாணவிகள் எடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலா 493 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். அந்த 10 மாணவ- மாணவிகள் விபரம் வருமாறு:-

1. தென்காசி கல்வி மாவட்டம் புளியங்குடியில் உள்ள ஏ.வி.எஸ். மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ரம்யா 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல்- 100

மொத்தம் - 493

மாணவி ரம்யா 3 பாடங்களில் 100க்கு 100 வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

2. பாளையங்கோட்டை சாராதக்கர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ஜெயிலின் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாடவாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

3. பரமக்குடி ஏ.வி. மேல் நிலைப்பள்ளி மாணவி பி.திலகவதி 493 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 98

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

4. பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர் பிரதீப்குமார் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 98

மொத்தம் - 493

5. மதுரை சவுத்கேட் பகுதியில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.ஜெயமுருகன் 493 மதிப்பெண் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 97

கணிதம் - 99

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

6. மதுரை புனித மேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கே.நாகராஜன் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

7. நாமக்கல் கல்வி மாவட்டம் அனியபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெ.இந்துஜா 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 96

கணிதம் - 99

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

8. கரூர் கல்வி மாவட்டம் புன்னம் சத்திரம் சேரன் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ராஜ்சூர்யா 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

9. புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.ரேவதி 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் எடுத்த மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

10. ஆரணியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நசீரீன் பாத்திமா 493 மதிப்பெண்கள் பெற்று 3-வது இட சாதனையில் ஒருவராக உள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 99

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 100
மொத்தம் – 493
 

17.5.10

பிளஸ் டு தேர்வு முடிவுகள்: சென்னை நகர பள்ளிகளை விட வெளிமாவட்டங்களே முதலிடம்!

+ 2 தேர்வு முடிவுகள்
இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் 85.2 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும்.
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.9 சதவீதமாகும்.
1,187 மதிப்பெண்கள் பெற்று தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.
1,186 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி சந்தியா,
கிருஷ்ணகிரி மாணவி காருண்யா, மாணவன் திணேஷ் ஆகியோர் 2வது இடம் பிடித்துள்ளனர்.
1185 மதிப்பெண்களுடன் விருதுநகர் பிரவக்ஷனா, ஈரோடு மனோசித்ரா, நாமக்கல் அபிநயா, அரியலூர் அன்டோ நதாரினி, செங்கல்பட்டு ஸ்ரீவித்யா ஆகியோர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.
கம்ப்யூட்டர் அறிவியலிலும் தூத்துக்குடி மாணவர் பாண்டியனே 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தாவரவியலில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மாணவி ஜெனிஷா 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
விலங்கியலில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த மாணவர் ஜெயனந்தா எட்வின் 200 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
புள்ளியியலில் ஈரோடு மாணவர் தீரஜ் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், புவியியலில் மதுரை மாணவி பரமேஸ்வரி 197 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
அனைத்துப் பாடங்களிலும் முதலிடத்தை ஒரு சென்னை மாணவர் கூட பெறாதது குறிப்பிடத்தக்கது. தலைநகரின் கல்வித் தரம் குறித்து பெரும் கேள்விக்குறிகளை இது ஏற்படுத்தியுள்ளது.

14.5.10

+2 பொதுத்தேர்வு முடிவுகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன
முடிவுகள் அறிய கீழ்க்காணும் இணைய தளங்களை பார்வையிடவும்

http://www.pallikalvi.in/
http://www.tnresults.nic.in/hsc/hsc.htm
http://www.dge1.tn.nic.in/

8.5.10

தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டமன்றத்தில் கூறினார்.

வெள்ளிக் கிழமை (07-05-2010) அன்று சட்டமன்றம் கூடியதும், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயிக்கவும் அமைக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு இதுவரை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும், பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கி வருவதால், அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

தமிழ்நாட்டில் மொத்தம் 10,951 சுயநிதி பள்ளிக் கூடங்கள் உள்ளன. எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் 4, 5 தினங்களில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கட்டண விவரம் பற்றி தமிழக அரசு அறிக்கை அனுப்பிய பின் தனியார் பள்ளிகள் அந்த கட்டணத்தை மட்டும்தான் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரிய வந்தால் அல்லது புகார் வந்தால் அதுபற்றி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

நன்றி-இந்நேரம்.காம்

4.5.10

+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்

நீங்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவரா?  அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லையா? எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதில் குழப்பமா? இதற்கு  www.pallikalvi.in  என்ற இணைய தளம் வழி காட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், அங்கு வழங்கப்படும் படிப்புகள், கல்விக் கடன் பெற தகுதிகள், எவ்வளவு கடன் கொடுப்பார்கள்? தேவையான ஆவணங்கள், கடனை திரும்பச் செலுத்தும் காலம், வங்கி விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த இணைய தளம் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  +2 படித்த மாணவ, மாணவிகள் இந்த இணைய தளத்தில் உள்ள தகவல்களை படித்து தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளலாமே!

-ரிஃபா

Source (செய்தி வெளியீடு):

உணர்வு வார இதழ்
ஏப்ரல் 23-29, 2010 / பக்கம் 7